Tamil Blogs

விளம்பர உலகம் - விசிட்டிங் கார்டு!
"ங்கா.. ங்கா..' என்று ஒரு குழந்தை அழுகிறது. என்ன காரணம்? குழந்தைக்குப் பசிக்கிறது, பால்வேண்டும் என்பதுதானே? பேசத் தெரியாத குழந்தைகூட குறிப்பாகத் தன்னுடைய தேவையை உணர்த்தி விடுகிறது இல்லையா? இதற்குப் பெயர்தான் விளம்பரம்.

நூலின் பெயர் : சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா

பக்கங்கள் : 152

விலை : ரூ. 70/-

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
மின்னஞ்சல் : support@nhm.in
இணையம் : www.nhm.in

சினிமாத்துறையைப் போலவே விளம்பரத்துறையும் பிரம்மாண்டமானது. பல கோடிகள் புழங்கும் துறை.

பிரபலங்களை மேலும் பிரபலங்களாக்கும் துறை. இத்துறைக்குள் நுழைவது ஒன்றும் சக்கரவியூகத்துக்குள் நுழைவதுபோலக் கடினமானதல்ல. கொஞ்சம் முயற்சி செய்தால், விளம்பரங்கள் குறித்து கொஞ்சம் தெரிந்துகொண்டால் போதும். எளிதாக நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிவிடலாம்.

இப்போதெல்லாம் சினிமாத்துறைக்குள் நுழைய விரும்புபவர்கள் முன்னோட்டமாகத் தேர்ந்தெடுப்பது, விளம்பரத்துறையைத்தான் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது. விளம்பரத்துறை குறித்த போதுமான புத்தகங்கள் தமிழில் இல்லை. பல விளம்பர முன்னோடிகள் தமிழர்களாக இருந்தும் இந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால், ஆங்கிலப் புத்தகங்களைத்தான் நாடவேண்டிய நிலை. ஆங்கிலத்தில் இந்தத் துறையின் ஒவ்வொரு பிரிவைப் பற்றியும் விரிவான பல நூல்கள் இருக்கின்றன. விளம்பரத்துறையின் மொழியே ஆங்கிலம்தான். அமெரிக்கப் பாணியில் நடத்தப்படும் விளம்பர ஏஜென்ஸிகளில் பணிபுரிய ஆங்கிலம் அத்தியாவசியமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழில் வாசிக்கும் சுகானுபவத்தை மற்ற மொழிகள் நமக்கு தந்துவிடுமா என்ன?

நான் ஒரு ஏஜென்ஸியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கே நேர்முகத்தேர்வுக்காக ஓர் இருபது வயது இளைஞன் வந்திருந்தான். அவனது சொந்த ஊர் சிவகாசி. அங்கே சில அச்சகங்களில் ஓவியனாகப் பணியாற்றிய அனுபவம் அவனுக்கு இருந்தது. அருமையான ஓவியன். அவனிடம் ஒரு தயாரிப்பைப் பற்றிய சில விவரங்களைச் சொல்லி தலைப்புக் கொடுத்து ஒரு விளம்பரத்தை வரைந்து காட்டச் சொல்லியிருந்தேன். ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை வரைந்து தலைப்பு எங்கே வரவேண்டும், மற்ற விஷயங்கள் எங்கெங்கே வரவேண்டும் என்று வரைந்து காட்டியிருந்தானான். அவன் வரைந்து காட்டிய லேஅவுட் மிக அருமையாக வந்திருந்தது.

"இந்த விளம்பரத்துக்கு எதற்காக கிரிக்கெட் வீரரை மாடலாக வைத்தாய்?' என்று கேட்டதற்கு, அவனால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. "இவர்தான் இப்போது நிறைய விளம்பரங்களில் வருகிறார். இவரை மாடலாக வைத்தால் விளம்பரம் நன்கு கவனிக்கப்படும்' என்று பதில் சொன்னான். அவனுக்கு நல்ல ஓவியத் திறமை இருந்தது. ஆனாலும் விளம்பர நிறுவனத்தில் பணியாற்ற அதுமட்டும் போதாது. விளம்பரத்துறை குறித்த போதுமான அறிவு இருக்க வேண்டும்.

அருமையாக லேஅவுட் செய்வதும், மார்க்கெட்டிங் செய்வதும், டி.வி. விளம்பரங்களை படம்பிடித்துக் கொடுப்பதும் மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல. சுருக்கமாகச் சொல்லப் போனால் விளம்பரம் வெளியிடுவது மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல, அதையும் தாண்டி பொருளின் விற்பனையைப் பெருக்க உதவவேண்டும்.

நம்மில் நிறையப் பேர் விளம்பரங்கள் என்றாலே மாடல்கள்தான் என்று அந்த சிவகாசி பையனைப்போல நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் சொல்லப் போனால் மாடலிங் என்பது தனித்துறை. விளம்பரத்துறையைச் சார்ந்த இன்னொரு பெரிய துறை. அப்படியென்றால் எது விளம்பரத்துறை,? விளம்பரத்துறையில் யார் யார் இருக்கிறார்கள்,? என்ன என்ன செய்கிறார்கள்? போன்ற சந்தேகங்கள் வரலாம். அந்தச் சந்தேகங்களை எல்லாம் இந்தப் புத்தகம் வாயிலாகத் தீர்த்துக்கொள்ளப்போகிறோம்.

விளம்பரத்துறையின் ஒவ்வொரு பிரிவுகள் குறித்தும் தனித்தனியாகவே புத்தகமாக எழுதமுடியும் என்றாலும், தமிழில் இந்தத் துறை குறித்து அறிந்துகொள்ளப் போதுமான புத்தகங்கள் இல்லாத நிலையில் இந்தத் துறை பற்றிய பறவைப் பார்வையைப் பார்க்க இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

- யுவ கிருஷ்ணா

சென்னையைச் சேர்ந்த யுவகிருஷ்ணா எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது கார்ப்பரேட் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். விகடன் குழுமத்தின் இணையத்தளமான யூத்ஃபுல்.விகடன்.காமில் தொடர்ந்து எழுதிவரும் யுவகிருஷ்ணா, இணைய வலைப்பூக்களிலும், சஞ்சிகைகளிலும் ஏராளமாக எழுதிவருகிறார். இணையத்தில் இவரது பெயர் லக்கிலுக்.

விளம்பர உலகம் - ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும்!...

காமம் மற்றும் பாலுறவு புனிதமா ?
இதுபற்றி வெளியே பேசினாலே 'பாபம்' என்பதாகச் சொல்லப்படுவதாலேயே அதுபற்றிய அறியாமையிலும் ஆர்வத்திலும் சிலபல தவறுகள் நிகழ்ந்துவிடுகிறது. 'காமம்' என்பதே மனித இன சாபமாகவே நினைக்க வேண்டி இருக்கிறது. காமமின்றிய வாழ்கை நினைத்துப் பார்த்தால் பலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள். காமம் என்பது தெய்வீகம் என்றெல்லாம் கட்டமைக்கும் போதே சிலர் பக்தி / ஆன்மிக வழியில் காமம் என்பது புனித மற்றது அதாவது காமம்(பாலுணர்வு), குரோத (சினம்), லோபம்(பேராசை) , மோகம் (பெரும்பற்று / ஆசை) மற்றும் அகங்காரம் (செருக்கு) எனும் ஐந்து விகாரங்களில் (பஞ்சவிகாரங்களில்) ஒன்றாக அதாவது மனிதனின் தீய குணங்களில் ஒன்றாகவே காமம் சொல்லப்படுகிறது.

காமம் என்பது மனம் சார்ந்த உணர்வு என்றாலும் அன்பு, கருணை, ஈகை, பொறுமை போன்ற உயர்ந்த குணம் சார்ந்த உணர்வுகளில் ஒன்றாக வைக்க முடியாத தீய உணர்வு என்பதால் தான் காமத்தை முறைப்படுத்துதல் என்பதில் திருமணம் என்கிற சடங்கு மிகத்தேவை என்றாகியது. இறை வழிபாடு என்கிற இறைத் தொடர்பில் காமம் (வழிபாட்டின் போது காம சிந்தனைகள்) என்பது விலக்கப்பட்டதாகவே அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன.

காமம் மனித இன சாபமாக நினைத்தாலும் கூட அதனை ஆண்/பெண் இருவருக்கிடையேயான அன்பிற்கு விதையாக மாற்றிக் கொண்டதில் மனிதன் ஓரளவு அந்த (தீய) உணர்வை கட்டுப்படுத்தி, முறைப்படுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றான் என்று கண்டிப்பாகச் சொல்ல முடியும். காமம் என்பது பலர் சொல்வது போல் புனிதம் என்றால் அது புனிதம் என நினைக்கப்படுவது தம்பதியினருக்கு இடையே நடைபெறும் உடலுறவு குறித்து மட்டுமே என்ற அளவில் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

காமம் என்பது தனிப்பட்டவர்களின் இச்சை சார்ந்த உணர்வு, தவறு அல்ல என்று சொன்னாலும் அதற்கு வடிகாலாக (பலருக்கு) இன்னொருவர் தேவைப்படுவதால் அது தன்னை மட்டுமே சார்ந்த ஒரு உணர்வு என்றுச் சொல்ல முடியாது. பிள்ளைப் பேற்றிற்றாக இயற்கை ஆக்கிவைத்த ஆண் / பெண் ஈர்ப்பு என்ற உணர்வு அன்றாட தேவையில் ஒன்றாக மாறிப்போனது பரிணாமத்தின் கூறுகளா என்று ஆராய்ந்துப் பார்க்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் மனித இனத்தைத் தவிர்த்து மற்ற உயிரனங்களுக்கு மனம் சார்ந்த தேவையாக காமம் இருப்பது இல்லை. விலங்குகளின் பருவ வயதிற்கு பிறகு, அவைகளின் அன்றாட எண்ணங்களிலும் அவை இருப்பது இல்லை. தாய்மை அடைய தேவையான பருவ காலங்களில், அதன் குறிப்பு அறிந்து, தேவை கருதியே மற்ற உயிரனங்களிடம் உடலுறவு நடைபெறுகிறது. காமம் என்பது உடல் சார்ந்த தனிமனித தேவையாகிவிட்ட பிறகு ஆண்/ஆண், பெண்/பெண் என்பதுகூட தவறு அல்ல என்பதாகவே சமூகம் காமம் குறித்த கருத்துக்களை மாற்றிக் கொண்டுள்ளது

எவையெல்லாம் முதன்மையான தேவை (Demand) , அவை இல்லாமல் இருக்க முடியாது (must) என்ற நிலை ஏற்படுகிறதோ அங்கே தான் முறைகேடுகளும் நடைபெற ஆரம்பிக்கின்றன. அவை சந்தைப் படுத்துவதில் நகர்ந்து வியாபாரமாக மாறுகிறாது. பாலியல் என்கிற தொழில் உறுவானதற்குக் காரணம் காமம் தவிர்க்க முடியாது என்று ஆகிப் போனதால் தான் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. புனிதம் புனிதம் என்று சொல்லப்படுகின்ற காமம் அன்புடன் சேர்ந்தால் மட்டுமே புனிதம் என்பதாகச் சொல்லப்படுகிறது, பலரும் நாடிய அதே புழையை அதாவது பாலியல் தொழிலாளிடம் செல்வது கூட சில நாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது, காமவெறி அதாவது பாலியல் வன்புணர்வாக அது மாறும் போது அவை குற்றமாகக் கருத்தப்பட்டு தண்டனையும் கிடைப்பதால், காமம் பாலுறவு என்பதற்கு எவ்வகையான புனிதத் தன்மையும் சமூகம் கொடுத்துவிடவில்லை.

உலகில் எந்த ஒரு செயலுக்கும் மனிதனுக்கு துணைத் தேவைப்படாவிட்டாலும், இதற்குத் துணை கண்டிப்பாக தேவைப்படுவதால் காமம் உள்ள மனிதன் எவரையுமே சுதந்திரமானவர், பிறரின் சுதந்திரத்தில் தலையிடாதவர் என்று சொல்லிவிட முடியாது. எங்கோ ஒருவர் பாலியல் தாகத்திற்காக கட்டிய மனைவியை விட்டு வேறொருபவரை நாடுபவராகவும், பெற்றப் பிள்ளைகளை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓடுவதால் மட்டுமே காமம் புனிதமற்றது என்று சொல்லிவிடமுடியாது என்று கூடச் சிலர் சொல்லலாம். ஆனால் அவற்றின் தேவை சரிவரக் கிடைக்காதவர்கள் பலரும் சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்பவர்களாகவே, மாற்று நாடுபவர்களாகவே மாறுவார்கள். ஆண்கள் என்று பார்த்தால் இதற்கு தூணிபவர்களின் விழுக்காடு மிகுதி. திருமணமானவர்களின் காமத்தின் தேவை என்பது 'இல்லறக் கடமை' என்ற பெயரில் காமத்தை பலர் புரிந்து கொள்ளாதிருந்தால் சமூக ஒழுக்கம் கூட சீரழிந்திருக்கும். கட்டுப்படுத்தப் பட்ட காமத்தினால் தான் சமூக ஒழுக்கம் காக்கப்படுகிறது.

தனி மனிதனின் காமம் என்பது மற்ற நல்ல உணர்வுகளைவிட, குணங்களைவிட மேலானது என்ற கருத்து திணிக்கப்படுவதாலேயே 60 வயதுக்கும் மேலான ஆண்கள் கூட அதன் மீது தீராத மோகம் கொண்டு, 'முடியாத' போது வயக்ராவரை சென்றுவிட்டார்கள், ஆனால் மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு சுழற்சிக்கு பிறகு பெண்களுக்கு இதில் ஆர்வம் இருப்பதில்லை, கணவர் முறைதவறி சென்றுவிடக் கூடாது என்பதற்க்காக பெண்கள் மாதவிலக்கிற்கு பிறகு அனுமதிக்கிறார்கள் என்பதை பல ஆண்கள் புரிந்து கொண்டவர்களாக இல்லை. 60 வயதில் குறி எழுச்சி அடையாமல் போனால் வாழ்வே போய்விட்டதாகவே ஆண்கள் புலம்புவதால் பாலியல் மருத்துவர்களின் வருமானம் பலமடங்குப் பெருகிறது, மேலும் போலி மருத்துவர்களிடம் ஏராளமான பணத்தை இழக்கிறார்கள், சிறுமிகளுடன் உறவு கொண்டால் சரியாகிவிடும் போன்ற தவறான கருத்துகளையெல்லாம் கூட நம்புகிறார்கள்.

"இல்லற வாழ்வை நிறைவுடன் நடத்தியவர்களுக்கு 50 வயதுக்கு மேல் காம உணர்வென்பது அன்றாடத் தேவையின் ஒன்றாக இருப்பது இல்லை, அன்பும், பாசமும் பெருக்கெடுத்த வாழ்க்கையில் காமம் பற்றிய சிந்தனைகள் கூட ஏற்படுவதில்லை" - 'இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சியில் சுகிசிவம் குறிபிட்டார்

உண்மைதான், தம்பதியினரிடையே உண்மையான அன்பு வெறும் காமத்தால் கட்டமைக்கப்பட்டால் அது தகற்வதற்கு நாட்கள் எடுக்காது. காமம் என்பது கழிவை வெளியேற்ற ஏற்படும் உணர்வு போன்ற அடக்க முடியாத உணர்வு, ஏற்படும் கிளர்ச்சியில் மட்டுமே வேறுபாடு. மற்றபடி காமம் என்பது புனிதத் தன்மையோ, தவிரக்க முடியாத ஒன்றோ அல்ல. அது இல்லாவிட்டால் வாழ்க்கை நரகம் என்பதெல்லாம் அன்பை அறியாதவர்களின், உணராதவர்களின், முட்டாள்களின் பேச்சு.

காமம் என்பது ஆண் / பெண் இருவருக்கும் பொதுவான ஒரு உணர்வென்றாலும் 'பெண்ணாசை' அதாவது பெண்களின் மீதான ஆசை என்றே அதை வகைப்படுத்தி இருப்பதும் கூட, ஆணிய சிந்தனையில் காம உணர்வின் விளைவுகளை பெண்களின் மீதான பழியாக போடும் ஆண்களின் தாழ்வுணர்வுச் சொல்லாக கருத முடிகிறது.

காமம் புனிதமற்றது என்ற சமயவாதிகளும், ஆண்களின் பிரம்மச்சாரியத்தை உயர்வாகக் கருதினார்களேயே யன்றி, கணவனை இழந்து பெண்களுக்கு, அவளுக்கு இருக்கும் வழியெல்லாம் அடைத்துவிட்டு கைம்பெண் என்கிற பட்டதைக் கொடுத்து ஓரமாக ஒதுக்கி வைப்பட்டதையும் பார்க்க வேண்டும். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமின்றிய காலகட்டத்தில் கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் 'யோகியாகவே' வாழ்ந்திருக்கிறாள் என்பதை மறுக்க முடியுமா ? காமம் நல்ல உணர்வென பெண்களும் கருதி இருந்தால் சமூகம் என்றோ சீர்கெட்டுப் போய் இருக்கும்.

காமம் என்பது மனித இன சாபம் தான். திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் காமம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்போர் கள்ளக் காதலன் / காதலியுடன் ஓடிப்போவார்கள்.

ASL PLS? - Part 1
நான் ஒரு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியில் ஜுனியர் லெவலில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த நேரம். எங்கள் CEOக்கு கம்ப்யூட்டர் என்றாலே அலர்ஜி. அவரது பர்சனல் மெயில்களையும் நான் தான் அப்போது Handle செய்துக் கொண்டிருந்தேன். அவர் தண்ணி அடிக்கும் கிளப், அலுமினி கிளப் மற்றும் அவரது மச்சான், மாமன் அனுப்பும் மெயில்களை எல்லாம் செக் செய்து அவருக்கு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பதே அலுவலகத்தில் எனது முதல் வேலையாக இருந்தது.

ஒரு நாள் அவரிடம் வேலை கேட்டு ஒரு மெயில் வந்திருந்தது. அட்டாச்மெண்ட் ஓபன் செய்துப் பார்த்தால் ஒரு பெண், வயது 20. விஸ்காம் முடித்திருந்தாள். நான் இருந்த போஸ்டிங்குக்கே அவளும் அப்ளை செய்திருந்தாள். இதென்னடா வம்பாப் போச்சி என்று மெயிலை பாஸுக்கு மறைத்து நானே அவளுடைய யாஹூ மெயிலுக்கு ஒரு ரிப்ளை அனுப்பினேன். எங்க ஆபிஸ்லே லேடிஸை எல்லாம் சேக்குறதில்லை. அதுவும் "சந்தியா"ன்னு பேரு இருந்தா சத்தியமா சேத்துக்க மாட்டோம் என்ற ரீதியில் என்னுடைய யாஹூ ஐடியில் இருந்து அவளுக்கு மின்னஞ்சல் செய்தேன். நான் வேண்டுமானால் வேறு ஏதாவது எனக்குத் தெரிந்த கம்பெனிகளில் வேலைக்கு சொல்லிப் பார்க்கிறேன் என்று அடிஷனலாக ஒரு பிட்டு போட்டு விட்டேன்.

என் அடிஷனல் பிட் அவளை கவர்ந்திருக்கக் கூடும். Thanks for your concern என்று ரிப்ளை செய்தாள். அப்போது அவளும் ஒரு ஏஜென்ஸியில் ட்ரைய்னியாக இருந்தாள். யாஹூ சாட்டில் பிகர்களுக்காக நான் அலைந்துக் கொண்டிருந்த நேரம் அது. பிகர் பெயரில் சில நாதாரிகள் என்னுடன் சாட் செய்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரிஜினல் பிகரே ஒன்று மாட்டிவிட்டதில் ஏக குஷி. நாம் ஒரு முறை சாட் செய்யலாமா என்று கேட்டேன். As usual பாசிட்டிவ்வான பதில் அவளிடமிருந்து வந்தது.

ராகுகாலம், எமகண்டமெல்லாம் இல்லாத ஒரு நேரத்தில் அவளது ஐடிக்கு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஒன்று அனுப்பி பிஸியா? என்று கேட்டேன். இல்லை என்றாள். மெதுவாக என் அறிமுகப்படலத்தை ஆரம்பித்து ரொம்பவும் டீசண்டாக மூவ் செய்தேன். அவளுடைய ஒர்க்கிங் ஸ்டைல் குறித்து விசாரித்தேன். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு இருந்தது.

வழக்கம்போல அவளுக்காக ரொம்ப அக்கறைப்படுபவன் போல சில டெக்னிக்குகளை எடுத்து விட்டு மெல்ல மெல்ல பர்சனல் மேட்டருக்கு வந்தேன்.

"நீ பார்க்க எப்படி இருப்பே?"

"ஷாலினி மாதிரி இருப்பேன்"

"நானும் பார்க்க அஜித் மாதிரி தான் இருப்பேன்"

"அப்படியா? ரொம்ப பொய் பேசுவியா?"

"ஆமாம். அஜித் மாதிரி இருப்பேன்னு சொன்னது பொய்"

"அதானே பார்த்தேன்?"

"அஜித்தை விட சூப்பரா இருப்பேன்"

"அட்றா.... அட்றா.... அட்றா.... நேருல பார்க்கலேன்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு அள்ளி விடறியா?"

"நேர்ல வேணா பாப்போமே?"

"இப்ப வேணாம். இன்னொரு நாள் பாக்கலாம்"

இவ்வாறாக சாட்டிங் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் நான் தினமும் அலுவலகத்துக்கு வருவதே அவளுடன் சாட்டிங் செய்வதற்கு என்றாகிவிட்டது. அவள் செல்லும் பஸ்ரூட், அவளது குடும்பம் என்று மெல்ல மெல்ல விசாரித்து... எப்போதும் சாட்டிங் ஸ்டார்ட் ஆகும்போது அங்கிளும், ஆண்டியும் (அவளது பெற்றோர்) நலமா? என்று விசாரித்து ஆரம்பிப்பது எனது டெக்னிக்காக இருந்தது. அவளும் இந்த பர்சனல் அட்டாக்கில் ரொம்பவே கவிழ்ந்து போய்விட்டாள்.

தினமும் பீச்சுக்கோ, பார்க்குக்கோ வரச்சொல்லி சந்திக்க நான் அவளை வற்புறுத்த அவளும் மறுக்காமல் இன்னைக்கு வேணாம்... நாளைக்கு... நாளன்னைக்கு என்று நாள் கடத்தினாள். கொஞ்சமாக எனக்கு சந்தேகம் வர அவள் முதலில் பெண்தானா? இல்லை நம்மை யாராவது நயவஞ்சகமாக ஏமாற்றுகிறார்களா என்று சந்தேகம் வந்து விட்டது. என் கைப்பேசி எண்ணை அவளுக்கு கொடுத்து பேசச்சொன்னேன். எண்ணைக் கொடுத்து விட்டு தொலைபேசி அழைப்புக்காக நான் காத்திருந்த நொடிகள் ஒவ்வொன்றும் ஒரு யுகம்.

தொலைபேசி அழைக்கிறது. சட்டென்று எடுத்து "ஹலோ நான் கிச்சா" என்று சொல்ல எதிர்முனையில் ஒரு ஆண்குரல் "மாப்பிள்ளே NAC Campaign முடிஞ்சுதாடா?" என் அலுவலக நண்பன். "போடாங்கொய்யா" என்று சொல்லிவிட்டு அவளது அழைப்புக்காக காத்திருந்தேன். அடுத்த போன்கால் எடுத்தவுடன் என் காதில் தேன் பாய்ந்தது...

"கிச்சா இருக்காரா?"

"ஜொள்ளுங்க சந்தியா" - சிஸ்டர் என்று அழைத்துவிடக் கூடாதென்று ரொம்பவும் ட்ரெய்னிங் எடுத்து வைத்திருந்தேன். கொஞ்ச நேரம் பேசினோம். சுவாரஸ்யமாக எதுவும் பேசவில்லை என்றாலும் அவள் பெண் தான் என்று எனக்கு உறுதியானது. இப்படியாக தினமும் சாட்டிங், தொலைபேசி என்று பேசிப்பேசி மனதுக்குள் அவளை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவள் என்ன நினைக்கிறாள் எப்படி இருப்பாள் என்று தெரியாமலேயே.

ஒரு நாள் சாட் செய்யும்போது ஒரு புதிய குண்டைப் போட்டாள். அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞன் ஒருவனை தீவிரமாக காதலிப்பதாக. வெறுத்துப் போன நான் ரெண்டு நாள் லீவு போட்டுவிட்டு பாரிலேயே பழியாகக் கிடந்தேன். மொபைலையும் ஆப் செய்து வைத்திருந்தேன். இரண்டு நாள் கழித்து அலுவலகம் சென்றவன் யாஹூ மெசென்ஜரை Uninstall செய்துவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தவன் நொந்துப் போனேன். நூற்றுக்கும் மேற்பட்ட மெயில்கள் சந்தியாவிடமிருந்து. எல்லா மெயிலிலும் "SORRY" "SORRY" தான். என்னை சும்மா சீண்டிப் பார்த்தாளாம். அவள் யாரையும் காதலிக்கும் ஐடியாவில் இல்லையாம். "யப்பா, நம்பளுக்கு சான்ஸ் இன்னமும் இருக்கு" என்று குஷியானேன்.

பசுமையே இல்லாத பாலைவனமாக இருந்த என் வாழ்க்கை அவளால் கொஞ்சம் சுவாரஸ்யமானது. இடையில் எனக்கு ஏன் அந்த குரங்குப் புத்தி வந்ததோ தெரியவில்லை. என் நண்பன் ஒருவனை அவளது அலுவலகத்துக்கு அனுப்பி அவள் எப்படி இருக்கிறாள்? என்று பார்த்துவரச் சொன்னேன். வந்த பதில் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. நிறைய கருப்பு. தெத்துப் பல். ரொம்ப ஒல்லி. மொத்தத்தில் பாட்டாளி படத்தில் வந்த பெண்வேஷம் போட்ட வடிவேலு மாதிரி இருக்கிறாள் என்றான் நண்பன். ம்ம்ம்ம்.... நமக்கு வாய்ச்சது இவ்வளவுதான் என்ன செய்வது காதலித்து(?) தொலைத்துவிட்டோமே என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

அன்று ஒரு நாள் இரவு 9 மணி இருக்கலாம். எனக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருந்தது. ரிலீப்புக்காக யாஹூ மெசெஞ்சரை திறந்தேன். என்ன ஆச்சரியம்? சந்தியா ஆன்லைனில் இருந்தாள். பொதுவாக அலுவலக நேரத்தில் மட்டுமே ஆன்லைனில் இருப்பவள் இரவு 9 மணிக்கு என்னத்தைச் செய்துக் கொண்டிருக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டு வழக்கம்போல "Hai Darling" என்று டைப் செய்தேன். பதிலில்லை. மவுனம்.

ஏனோ அன்று என் காதலை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பூடகமாக அவளைக் காதலிப்பதை நாகரிகமான வார்த்தைகளில் சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் லாக்-அவுட் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். மொபைலில் அவள் வருவாள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து தூக்கம் தொலைத்த இரவாக அது மாறியது. +2 ரிசல்ட்டுக்கு கூட நான் அந்த அளவு டென்ஷன் ஆனதில்லை (+2 ரிசல்ட் என்னவாகும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதும் ஒரு காரணம்)

மறுநாள் அலுவலகம் சென்று யாஹூ தூதுவனை திறந்துப் பார்த்தேன்.ஆன்லைனில் இருந்தால் "hi" சொன்னேன். பதில் இல்லை. "Sorry" சொன்னேன். அதற்கும் பதில் இல்லை. தொடர்ந்து கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தும் அவளிடமிருந்து பதில் ஏதும் இல்லை. அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசிப் பார்த்தேன். "இல்லை" என்று அவள் சொல்ல சொன்னதாக சொன்னார்கள். அவள் ஸ்டைலிலேயே நூற்றுக்கணக்கான "SORRY" மெயில் அனுப்பியும் எந்த Responseம் இல்லை. சுமார் ஒரு மாதக்காலம் போராடி, போராடி வெறுத்துப் போனேன்.

கிட்டத்தட்ட அவளை மறந்து விட்ட ஒரு நாள் காலை...

யாஹூவில் சென்னை சாட்ரூமில் இருந்தேன்.

"Hi"

"Hi"

"ASL Pls?"

"I am kichcha 22/M/Chennai. Your ASL?" - (22 என்பது நமக்கு என்றுமே மாறாதது :-)

"I am Bhuvana 19/F/Chennai"

ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திறக்கும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

ஊடகங்கள் என்னும் மதங்கள் !
மதம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை, எண்ணங்களை தீர்மாணிப்பது என்று சொன்னால் எவரும் மறுப்பார்களா ? எந்த ஒரு மதமும் அதைச் சார்ந்தவர்களின் குண நலன்களை உருவாக்குவதுடன், உணவு உடை மற்றும் கட்டுப்பாட்டுக்களை விதித்து ஒருவரை தன் இச்சையாக செயல்படவிடாலம் அவர் மீது ஆளுமை செலுத்தினால் அதுதான் மதம். நேரடியாக ஒருவர் மீது தாக்கத்தை ஏற்படுவதால் அதன் பண்புகளில் ஏற்படும் மிகக் கூடுதலான அளவே மதவெறி எனப்படும். சரியா ?

ஊடகங்கள் எனப்பது மக்களாட்சியின் நான்காவது தூண்கள் கிட்டதட்ட மதம் போல் ஆகிவிட்டன. மதம் என்பதே சார்பு நிலைதானே. எந்த ஒரு ஊடகமும் அது செய்தி இதழாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி மக்கள் முன் காட்சிபடுத்துதல் ( பின்நவினத்துவ சொல்லாம்) என்பதில் சார்பு நிலையில் தான் இயங்குகின்றன. சன் டிவி, ஜெ டிவி பார்க்கும் சிறுவர்கள் கூட இதை உணர்வார்கள். இவற்றைக் குறிப்பிடுவது எளிமையான உதாரணம் கருதியே.

ஊடகம் என்பது தொழில் என்பதாக வளர்ந்த பின் போட்டித் தன்மை என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. முதலில் மக்கள் விரும்புவதைத் தருவதாகச் சொல்லும் ஊடகங்கள் பிறகு மக்களின் விருப்பத்தை தீர்மாணிக்கின்றன.

விபச்சாரம் நடப்பதும் அதன் மீது சட்ட நடவெடிக்கையும் இயல்பாக அன்றாடம் நடப்பவைதான். அன்று போடுவதற்கு செய்தி பஞ்சமோ, பெரிய Deal இல்லாத போது, காவல் துறையின் விபச்சார நடவடிக்கை செய்தியை எடுத்து
படத்துடன் "விபச்சார அழகிகள் உல்லாச விடுதியில் கைது" என்று போடுவார்கள். விபச்சாரம் செய்பவர்களை அழகிகளாகக் காட்டுவதுடன், விடுதிகள் என்றால் அவை உல்லாசமாக இருப்பதற்கு உரிய இடம் என்பது இவர்கள் முன்பே பலமுறை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளதால், அந்த செய்தியை பலர் ஆர்வமுடன் படிப்பார்கள்.

ஊடகங்கள் எப்போதுமே பிரபலங்களின் செய்திகளை கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பதை அண்மைய மும்பை தாக்குதலில் இரயில் நிலையத்தைவிட நட்சத்திர ஓட்டல்களின் காட்சிகளே தொலைக்காட்சியில் இடம் பெற்றதை பலரும் குறிப்பிட்டு காட்டி கண்டனம் செய்தார்கள். வாசகர்கள் காதில் புனிதம் தடவி "ஊடகம் என்பது ஜெனநாயகத் தூண்" என்பது எப்போதோ அடிப்பட்டுப் போய்விட்டது.

ஒரு ஆட்சியை மாற்றி அமைப்பதில் ஊடகம் முன்னிலை வகிக்கிறது. விருப்பமில்லாத ஆட்சியாளர்கள் என்றால் அவர்கள் செய்யும் நலத்திட்டங்களை பற்றி ஒருவரி கூடச் சொல்லாமல், அவர்கள் குறித்து நீதிமன்றத்தில் நடக்கும் ஊழல் வழக்குகளின் செய்திகளை மட்டுமே வெளியிட்ட பிற செய்திகள் தங்கள் வாசகர்களின் கண்களில் படாமல் கவனத்துடன் தவிர்ப்பர். செய்திகளாக இவர்கள் தருவது இவர்களுக்கு பிடித்தவை மட்டுமே.

இஸ்லாம் பற்றிய மேற்கத்திய (கிறித்துவ சார்பு, முதலாளித்துவ சார்பு) ஊடகங்களின் தாக்குதலும் இப்படித்தான், பின்லேடனையும் அல்கொய்தா என்ற இரண்டே விசயங்களை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு 'இஸ்லாம் என்றால் தீவிரவாதம்' என்கிற செய்தியை பதியவைக்க முயன்று வெற்றிபெற்றன. ஆனால் அதே ஊடகங்களுக்கு ஈராக்கில் எந்தவிதமான ரசாயன ஆயுதங்களும் இல்லை என்று தெரிந்தாலும், தெரிந்தே புஷ் அரசின் செயல்பாடுகளையும், அபுகிரைப் கொடுமைகளையும் அதிக அளவில் வெளியே பரப்பாமலும் ஓரளவுக்கு தாங்கள் நடுநிலையாளர்கள் என்று காட்ட சிறு சிறு செய்திகள் அளவுக்கு அதனை வெளியிட்டன.

மலேக்கான் தொடர் குண்டு வெடிப்பு பற்றி பரபரப்பாக வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் தற்பொழுது மும்பைத் தாக்குதலில் கவனம் செலுத்தி அன்றாட தகவல் ஆக்கிவிட்டன.  இந்த செய்திகள் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்குத் தகுந்தார்போல் செய்திகளை வெளி இடுவார்கள், 'இறந்து போனவர்களில் எவரும் இஸ்லாமியர் இல்லை' என்று சொல்வது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கமாக கொண்டுள்ள செய்தி இதழ் அதனை வெளியிட்டது, அதுமட்டுமில்லாது அந்த செய்தி மக்கள் மனதில் மறையவே கூடாது என்பதற்காக இறந்து போனவர்களின் அத்தனை பேரின் வீடுகளுக்குச் சென்று அன்றாடத் தகவல்களாக அதனை வெளி இடுவார்கள். இவை சிறு இதழ்களில் செய்யப்பட்டால் பெரிய தாக்கம் ஏற்படாது, சிறிய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையான வாசகர்களை மட்டுமே கொண்டிருக்கும், அவர்களின் கவனம் வேறு இதழ்களுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக அதனை தொடர்ந்து செய்வார்கள், ஆனால் இந்திய அளவில் செயல்படும் செய்தி இதழ்கள் மறைமுகமாக செய்யும் போது வாசகர் மனதில் அந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

நான் 25 ஆண்டுகளாக ஆனந்தவிகடன் படிக்கிறேன், 15 ஆண்டுகளாக நக்கீரன் படிக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லும் முன் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள், 'அந்த இதழ்களெல்லாம் உங்களுக்கு தேவையானதை கொடுக்கவில்லை, அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் மாறி இருக்கிறீர்கள், அவர்கள் தரும் செய்தியே உங்கள் எண்ணங்களையும் சிந்தனையாகவும் மாறி இருக்கிறது, அதாவது உங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் தீர்மாணிப்பவர்கள் அவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது வாசகனுக்கு பெருமையான ஒன்றா ?

ஒரு இதழின் நெடுநாளைய வாசகன் என்று சொல்லிக் கொள்வது, அந்த இதழின் ஆளுமை உங்கள் மீது இருக்கிறது என்பதாகச் சொல்லாப்படுவதும் ஆகும்.

ஆனால் 90 விழுகாடு வாசகர்களின் மன நிலை எதோ ஒரு சார்பில் எதோ ஒரு செய்தி ஊடகத்தை சிறப்பாக கருதும் மனநிலையில் தான் இருக்கிறது, அதில் வரும் செய்திகளே உண்மையானவவ என்று நம்புவார்கள், மற்ற இதழ்கள் திரிப்பதாகவே சொல்வார்கள்,  இந்தியாவில் வேலை செய்யும் போது துக்ளக் மட்டுமே படித்த எனது முன்னாள் பாஸிடம் நான் நக்கீரன் செய்தி பற்றி பேசினால், 'நக்கீரனெல்லாம் ஒரு புத்தகமா, அவன் பொய் பொய்யா எழுதுவானே ?' என்று சொல்லுவார். அவரைப் பொருத்து நக்கீரனின் வரும் செய்திகள் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும், ஏனெனில் நக்கீரன் எவரையும் துணிவுடன் எதிர்த்து எழுதும், ஆனால் அவ்வளவு துணிவு வாய்பே இல்லை என்று நினைப்பவராக அவர் இருப்பதால் நக்கீரன் பழிசொல்லி எழுதுவதாகவே அவர் கருதுவார். இங்கே நக்கீரன் துணிச்சலான செய்தி இதழ் என்று சொல்லவரவில்லை. நக்கீரனின் அன்மைய திமுக ஆதரவு செய்திகள் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஆதரவு நிலை என்பதற்காக எப்போதும் திமுகாவின் ஊழல் தகவல்களை, முறைகேடுகளை மறைப்பதில்லை என்பதில் ஓரளவுக்கு நக்கீரன் கோபால் பரவாயில்லை என்பேன்.

வாசகர் வட்டம் என்ற வட்டத்திற்குள் நீங்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களில் ஆளுமை செலுத்துவதில் ஒரு ஊடகம் வெற்றிபெற்றிருக்கிறது என்றே பொருள், அந்த ஊடகத்தை துதிப்பவர்களில் நீங்களும் ஒருவர் ஆகிவிடுவீர்கள். உண்மையிலேயே ஊடகம் என்பது தொழில் தான்,  துணிச்சலான புலனாய்வுக்கு ஊடகங்களைப் பாராட்டலாம்,  ஆனால் ஊடகம் தரும் செய்திகளே உண்மை என்று நம்புவோர்க்கு ஊடகங்கள் மதங்கள் போல் அவர்களின் மீது ஆளுமை செய்கிறது என்பது பேருண்மை. ஏற்றிவிடுவதும் வாசகர்களே, பிறகு மாட்டிக் கொண்டு மீளாமல் இருப்பவர்களும் வாசகர்களே !

இந்த பலரால் விரும்பிப் படிக்கப்படும் பதிவுகளுக்கும் பொருந்தும் :).

இதுபற்றி பலசெய்திகளை ஒப்பிட்டு விரிவாக எழுதமுடியும், பிரிதொரு இடுகையில் எழுதுவேன்.

ஆடுகின்ற‌ க‌திரையில் அம‌ர‌ப்போவ‌து யாரோ?
-சூடாகும் க‌ன‌டா அர‌சிய‌லும், அவ‌ச‌ர‌மவ‌ச‌ர‌மாய் முக‌மூடிக‌ளைக் க‌ழ‌ற்றிய‌ ந‌ம் கால‌த்து ச‌ன‌நாய‌க மீட்ப‌ர்க‌ளும்-

சில‌ வார‌ங‌க‌ளுக்கு முன் வானொலி நிக‌ழ்ச்சியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்த‌போது, ஆங்கில‌ அக‌ராதியில் புதிதாக‌ வார்த்தையொன்றைப் சேர்த்துள்ளார்க‌ள் என்று கூறியிருந்தார்க‌ள். 'Mah' என்ற‌ வார்த்தை அலுப்பான‌து (borning) என்ற‌ ஒத்த‌ க‌ருத்தைப் பிர‌திப‌திப்ப‌து என்று விள‌க்கி, விரித்துச் சொல்லும்போது, 'அண்மையில் ந‌ட‌ந்த‌ க‌ன‌டாத் தேர்த‌ல் மிக‌ அலுப்பான‌து' என்று -இப்புதிய‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்தி- ஒரு உதார‌ண‌த்தைக் கூறியிருந்தார்க‌ள்.

வ‌ழமையாக‌ க‌ன‌டாத் தேர்த‌ல்க‌ள் எவ்வித‌ ஆர‌வார‌ங்க‌ளுமில்லாது ந‌ட‌ப்ப‌து என்றாலும், இம்முறை குறுகிய‌ கால‌த்தில் தேர்த‌ல் திக‌தி அறிவித்து ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ தேர்த‌லுக்கு, அருகிலிருந்த‌ ஐக்கிய‌ அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ சுவார‌சிய‌மான‌ தேர்த‌ல் சூழ‌லும் 'இன்னும் அலுப்பாக்கிய‌த‌ற்கு' ஒரு முக்கிய‌ கார‌ண‌மென‌லாம்.  இங்கே முக்கிய‌ க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் தொலைக்காட்சியில் விவாதித்துக்கொண்டிருந்த‌போது, அதே நேர‌த்தில் நிக‌ழ்ந்த‌, ஐக்கிய‌ அமெரிக்காவின் உப‌ ஜ‌னாதிப‌திக‌ளுக்கான‌ விவாதத்தைப் பார்த்த‌ க‌னேடிய‌ர்க‌ளே அதிக‌ம் என்று கூற‌ப்ப‌ட்டிருந்த‌து. அது ம‌ட்டுமின்றி க‌ன‌டாவில் ந‌ட‌க்கும் தேர்த‌லையா, ஐக்கிய‌ அமெரிக்காவில் ந‌ட‌க்கும் தேர்த‌லையா அதிக‌ம் க‌வ‌னிக்கின்றீர்க‌ள் என்றொரு ப‌த்திரிகை கருத்துக்க‌ணிப்பு நிக‌ழ்த்திய‌போது 70%ற்கும் அதிக‌மான‌ ம‌க்க‌ள் 'அமெரிக்க‌த் தேர்த‌லையே' என்று உள்ள‌தை உள்ள‌ப‌டியே சொல்லியுமிருக்கின்றார்க‌ள். இதில் பெரிய‌ விய‌ப்பு ஏதுமில்லை. ஈழ‌த்திலிருந்த‌போது அதிக‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்தில் என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என்ப‌தை அறிவ‌தைவிட‌ இந்திய‌ அர‌சிய‌ல் பேசுவ‌தில் சுவார‌சிய‌மாக‌ இருந்திருப்ப‌தைத்தான் அவ‌தானித்திருக்கின்றேன்.  சிறுவ‌ய‌தில் இல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்திலுள்ள‌ அமைச்ச‌ர்க‌ளை விட‌ இந்திய‌ப் பாராளும‌ன்ற‌ அமைச்ச‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை அறிந்து வைத்திருந்த‌து என‌க்கும் நினைவிருக்கின்ற‌து.  இன்றும் பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இந்திய‌ கிரிக்கெட் அணியை ஆத‌ரிப்பது என்ப‌து இத‌ன் நீட்சியில் வ‌ருமோர் உதார‌ண‌ம்.

2.
க‌னடாவில் த‌ற்ச‌ம‌ய‌ம் நான்கு முக்கிய‌ க‌ட்சிக‌ள் இருக்கின்ற‌ன‌: லிப‌ர‌ல் (Liberals), கொன்ச‌ர்வேடிவ் (Conservatives) , புதிய‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி (New Democratic Party) , ப்ளொக் கியூபெக்குவா (Bloc Quebecios).   அண்மைக்கால‌மாக‌ கிறீன் க‌ட்சியும் (Green Party) ம‌க்க‌ளிடையே செல்வாக்குப் பெற்று வ‌ருகின்ற‌து.
ஆக‌ இவ்வாறாக‌ க‌ன‌டாத் தேர்த‌ல்க‌ள் அலுப்பாக‌வும்..., த‌ங்க‌ளை எவ‌ரும் க‌வ‌னிக்கின்றார்க‌ள் இல்லை என்று அர‌சிய‌ல்வாதிக‌ள் எண்ணிய‌தாலோ என்ன‌வோ சென்ற‌ வார‌ங்க‌ளிலிருந்து க‌ன‌டிய‌ அர‌சிய‌ல் சூடுபிடிக்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து. 2006ற்கு முன், தொட‌ர்ந்து நீண்ட‌ கால‌மாக‌ மித‌வாத‌ லிப‌ர‌ல் க‌ட்சியே க‌ன‌டாவின் ஆட்சி பீட‌த்திலிருந்திருக்கின்ற‌து.  இல‌ங்கையில் ஜ‌.தே.க‌விற்கு கொழும்பு மாதிரி, த‌மிழ்நாட்டில் தி.மு.க‌விற்கு சென்னை போல‌, லிப‌ர‌ல் க‌ட்சியின் அசைக்க‌முடியாத‌ ஒரு கோட்டையாக‌ ஒன்ராறியோ மாகாண‌ம் இருந்திருக்கின்ற‌து. க‌ன‌டாவின் 308 பாராளுன‌ற‌ ஆச‌ன‌ங்க‌ளில் 106 ஆச‌ன‌ங்க‌ள் ஒன்ராறியோ மாகாண‌த்தில் இருக்கின்றது.  2000 ஆண்டில் லிப‌ர‌ல் க‌ட்சி இர‌ண்டாவ‌து முறையாக‌ ழான் கிறைட்சிய‌னின் த‌லைமையில் பெரும்பான்மை அர‌சு அமைத்த‌போது, வென்ற‌ 172 ஆச‌ன‌ங்க‌ளில், 100 ஆச‌ன‌ங்க‌ள் ஒன்ராறியோ மாகாண‌த்திலிருந்து லிப‌ர‌லுக்கு கிடைத்திருந்த‌ன‌. 106 ஆச‌ன‌ங்க‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தின்  100 ஆச‌ன‌ங்க‌ளை லிப‌ர‌லுக்கு ம‌க்க‌ள்  அளித்த‌மை இது முத‌ற்த‌ட‌வையுமில்ல‌. அத‌ற்கு முன் நிக‌ழ்ந்த‌ 1997 தேர்த‌லிலும் லிப‌ர‌ல் க‌ட்சி 101 ஆச‌ன‌ங்க‌ளை வென்றிருக்கின்ற‌து. ஆக‌, ஒன்ராறியோ மாகாண‌ ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை அசைத்துப் பார்க்கும் க‌ட்சியே க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌த்தில் எவ்வித‌ப் ப‌ய‌முமின்றி அம‌ர‌லாம் என்ற‌ உண்மை எளிதாக‌ அனைவ‌ருக்கும் புரியும்.  ஒன்ராறியோ மாகாண‌த்திற்கு அடுத்த‌ அதிக‌ ஆச‌ன‌ங்களைக் கொண்ட‌ (75) கியூ(கு)பெக் மாகாண‌த்தில், லிப‌ர‌ல், வ‌ல‌துசாரியான‌ 'கொன்ச‌ர்வேடிவ்' போன்ற‌ க‌ட்சிக‌ள‌ அவ்வ‌ள‌வு எளிதில் கால் ப‌திக்க‌ முடியாது,  'கியூபெக்' த‌னி நாடு கேட்டுப் போராடும் ப்ளொக் கியூபெக்கா என்ற‌ க‌ட்சி தொட‌ர்ந்து பெரும்பான்மை ஆச‌ன‌ங்க‌ளை (50 ஆச‌ன‌ங்க‌ளுக்கு அண்மையாக‌ தொட‌ர்ந்த‌ ப‌ல‌ தேர்த‌ல்க‌ளில்) வென்றுகொண்டுவ‌ருகின்ற‌து.  ப்ளொக் கியூபெக்கா க‌ட்சி, கியூபெக‌ மாகாண‌த்தில் ம‌ட்டுமே போட்டியிருக்கின்ற‌ ஒரு க‌ட்சி.

3.
1993ல் இருந்து தொட‌ர்ச்சியாக‌ 2006 வ‌ரை ஆட்சி புரிந்த‌ லிபர‌ல் க‌ட்சியை வீழ்த்தி தாம் ஆட்சிப்பீட‌த்திலேறுவ‌த‌ற்காய் அதி தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் தொட‌ர்ந்து முய‌ற்சிக‌ளை மேற்கொண்டே வ‌ந்திருந்த‌ன‌ர். த‌னித்து நின்று வெற்றிபெற‌முடியாது‌ என்ற‌ உண்மை வ‌ல‌துசாரிக‌ளுக்கு உறைத்த‌போது, ப‌ல‌வேறு மாகாண‌ங்க‌ளின் உள்ளூர் வ‌ல‌துசாரிச் சிந்த‌னையுள்ள க‌ட்சிக‌ளையெல்லாம் ஒருங்கிணைத்து த‌ங்க‌ளுக்குள் ஒரு த‌லைவ‌ரைத் தேர்ந்தெடுத்து, 2004 தேர்த‌லில் கூட்டாய் வ‌ல‌துசாரிக‌ள் குதித்த‌ன‌ர் (இந்நேர‌ம் பிஜேபி உங்க‌ளுக்கு நினைவுக்கு வ‌ர‌லாம்).  இத‌ற்கிடையில் இர‌ண்டாவ‌து முறையாக‌த் தேர்ந்தெடுத்த‌ ழான் கிறைட்சிய‌ன் த‌லைமையிலான‌ லிப‌ர‌ல் க‌ட்சி, நூறு மில்லிய‌னுக்கு மேலான‌ Sponsorship Scandalலில் மாட்டுப்ப‌ட்டு விழி பிதுங்க‌த்தொட‌ங்கிய‌து. 2004ல் லிப‌ர‌ல் க‌ட்சியிற்கு போல் மார்ட்டின் த‌லைமை தாங்கி, உறுதியான‌ வ‌ல‌துசாரிக‌ளின் கொன்ச‌ர்வேடிவிற்கு எதிராய் நின்ற‌போதும்,  ம‌க்க‌ள் இன்னும் லிப‌ர‌ல் க‌ட்சியைக் கைவிட‌த் த‌யாரில்லை என்ப‌தை நிரூபித்த‌ன‌ர்.  மொத்த‌ ஆச‌ன‌ங்க‌ளான‌ 306ல், 135 ஆச‌ன‌ங்க‌ளைப்பெற்று லிப‌ர‌ல் க‌ட்சி வெற்றி பெற்ற‌து. இத‌ற்கிடையில் ஊழ‌ல் வ‌ழ‌க்கின் மீதான‌ இர‌ண்டாவ‌து அறிக்கை விசார‌ணைக் குழுவால் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்டு லிப‌ர‌ல் க‌ட்சியின் ஊழ‌ல் பெருச்சாளிக‌ள் கையும் க‌ள‌வுமாய் பிடிப‌ட‌,  என்டிபி, ப்ளொக் க்யூபெக்கா, கொன்ச‌ர்வேட்டிவ் ஆகிய‌ க‌ட்சிக‌ள் அர‌சுக்கெதிரான‌ ந‌ம்பிக்கையில்லாப் பிரேர‌ணையைக் கொண்டு வ‌ந்து (172 -134) லிப‌ர‌ல் ஆட்சி க‌லைக்க‌ப்ப‌ட்டு 2006ல் தேர்த‌ல் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.  2006 தேர்த‌லில் லிப‌ர‌லின் கோட்டையான‌ ஒன்ராறியோ மாகாண‌ம் உடைக்க‌ப்ப‌ட்டு, இதுவ‌ரை பெரும்பான்மையாக‌ ஒன்ராறியோவில் ஆச‌ன‌ங்க‌ளை வென்ற‌ லிப‌ர‌லைப் பின் த‌ள்ளி 54 ஆச‌ன‌ங்க‌ளை கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சுக்கு ம‌க்க‌ள் கொடுக்க‌, லிப‌ர‌ல் 40 ஆச‌ன‌ங்க‌ளையே வெல்ல‌ முடிந்த‌து.  இவ்வாறாக‌ நெடும் 'வ‌ன‌வாச‌த்திற்கு'ப் பிற‌கு வ‌ல‌துசாரிக‌ளால‌ ஒரு சிறுபான்மை அர‌சைக் க‌ன‌டாவில் 2006ம் ஆண்டில்  அமைக்க‌ முடிந்த‌து.

க‌னடாத் தேர்த‌ல் ‍- 2006 (Total Seats: 306)

Conservative - 124
Liberal - 103
Bloc Quebecois - 54
NDP - 29
Independent - 1

2006ல் 'வ‌ராது வ‌ந்த‌ மாம‌ணியாய்' ஆட்சியைப் பிடித்த‌ வ‌ல‌துசாரிக‌ள், குறுகிய‌ கால‌த்திற்குள் -2008ல் -அவ‌ச‌ம‌வ‌ச‌ர‌மாக‌ இன்னொரு தேர்த‌லை அறிவிக்க‌ என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌து வெள்ளிடை ம‌லை. முக்கிய‌ எதிர்க்க‌ட்சியான‌ லிப‌ர‌ல் க‌ட்சி அப்போதுதான் ஒரு புதிய‌ த‌லைவ‌ரைத் த‌ங்க‌ளுக்குத் தேர்ந்தெடுத்திருந்த‌ன‌ர். அத்தோடு லிப‌ர‌ல் க‌ட்சியி த‌லைவ‌ருக்கான‌ தேர்த‌லில் த‌லைவ‌ர் ப‌தவியை வெல்ல‌க்கூடிய‌வ‌ர்க‌ள் என்று மிக‌வும் ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌ Michael Ignatieff. Bob Rae, Gerard Kennedy போன்ற‌வ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப்ப‌ட‌ அதிக‌ம் பிர‌ப்ல‌ய‌மில்லாத‌ Stéphane Dion க‌ட்சியின் த‌லைவ‌ராக‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டார். ஆக‌வே லிப‌ர‌லுக்குள் த‌ன‌து த‌லைமையை Stéphane Dion முத‌லில்
உறுதியாய் நிரூபிக்க‌வேண்டிய‌ அவ‌ச‌ர‌மான‌ நிலைமை.

மேலும் லிப‌ர‌ல் க‌ட்சி இன்னும் இர‌ண்டோ மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு தேர்த‌லை எதிர்பார்க்காத‌ நிலைமையில் (no preparations), குறைந்த‌ கால‌ அவ‌காச‌த்திற்குள் தேர்த‌ல் திக‌தி அறிவிக்க‌ப்ப‌டுகின்ற‌து. Stéphane Dion த‌ன‌து உட்க‌ட்சிப் பூச‌ல்க‌ளையே இன்னும் ச‌மாளிக்க‌முடியாத‌ நிலையில் தேர்த‌லைச் ச‌ந்திக்க‌ வேண்டிய‌ நிலை. தேர்த‌ல் திக‌தியை அறிவிக்கின்ற‌போது கொன்ச‌ர்வேடிவ்ற்கு இன்னொரு அதிஸ்ட‌மும் கைகொடுக்கின்ற‌து. க‌ச்சா எண்ணெயின் விலை கூடி க‌ன‌டாவின் டொல‌ர் பெறும‌தியும் உல‌க‌ச‌ந்தையில் கிடுகிடுவென்று ஏற‌, எல்லா புற‌ச்சூழ‌ல்க‌ளும் கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சியிற்கு ஒரு வ‌லுவான‌ பெரும்பான்மை கிடைப்ப‌து உறுதியென்ற‌ நிலையில் ஒரு உட‌ன்டித் தேர்த‌லை க‌ன‌டாவின் மேத‌மை த‌ங்கிய‌ பிர‌த‌ம‌ர் அறிவிக்கின்றார். இந்த‌ இட‌த்தில் க‌ன்டாவிலிருக்கும் புலி எதிர்ப்பாள‌ர்க‌ளும் உற்சாக‌மாக‌வே தேர்த‌லை எதிர்கொண்ட‌ன‌ர் என்ப‌தையும் குறித்தாக‌வேண்டியிருக்கின்ற‌து. கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சே புலிக‌ள் இய‌க்க‌த்தைக் க‌ன்டாவில் த‌டைசெய்து ப‌ல்வேறு புலிக‌ளின் செய‌ற்பாடுக‌ளை முட‌க்க‌த்தொட‌ங்கியிருந்த‌து. வ‌ல‌துசாரி அர‌சாங்க‌ம் ஒன்று வ‌ந்தால், க‌ன்டாவிற்கு வ‌ரும் குடிவ‌ர‌வாள‌ர்க‌ள்/அக‌திக‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கும் என்ப‌தையோ, ஓரின‌ப்பாலின‌ர் போன்ற‌ உள்ளிட்ட‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ நிக‌ழும் என்ப‌து குறித்தோ, ஆப்கானிஸ்தானில் இன்னும் எத்த‌னை ஆண்டுக‌ள் க‌ன‌டிய‌ இராணுவ‌ம் த‌ங்க‌ப்போகின்ற‌தோ என்ற‌ அக்க‌றையெல்லாம் 'ச‌ர்வ‌தேசிய‌ம் என்ன‌ என்றால்' என்றால் ம‌ணிக்க‌ண‌க்காய் விரிவுரை செய்ப‌வ‌ர்க‌ளுக்கு அவ‌சிய‌மில்லாத‌ ஒன்றே. புலியை எதிர்த்தால் ம‌ட்டுமே ந‌ம‌து மூச்சிருக்கும்வ‌ரை செய்வ‌து என்றிருப்போர்க்கு ம‌ற்ற‌ப் பிர‌ச்சினைக‌ள் நினைவுக்கு வ‌ராத‌து அவ‌ர்க‌ள‌து 'ச‌ன‌நாய‌க‌'நிலைப்பாடு என்க‌. ச‌ரி, அதை இப்போதைக்கு விடுவோம்.

ஆக‌ பெரும்பான்மை ஆட்சியை நோக்கி வெற்றிந‌டை போட்டுக்கொண்டிருந்த‌ கொன்ச‌ர்வேட்டியிற்கு முத‌லில் ஆப்ப‌டித்த‌து, ஜ‌க்கிய‌ அமெரிக்காவின் வ‌ர்த்த‌க‌த்தில் ஏற்ப‌ட்ட‌ வீழ்ச்சி. 'எம‌து வ‌ங்கிக‌ள் எல்லாம் மிக‌வும் வ‌லுவான‌ நிலையிலிருக்கின்ற‌ன‌, க‌வ‌லையேப‌ட‌வேண்டாம்' என்று நிதிய‌மைச்ச‌ர் தேர்த‌ல் கால‌த்தில் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாலும், கிட்ட‌த்த‌ட்ட‌ 70% வீத‌மான‌ வ‌ர்த்த‌க‌த்தை ஜ‌க்கிய‌ அமெரிக்காவோடு க‌ன‌டா செய்துகொண்டிருக்கும்போது ம‌க்க‌ள் இதை உறுதியாய் ந‌ம்ப‌த் த‌யாராக‌ இருக்க‌வில்லை. ஒரு க‌ட்ட‌த்தில் பொருளாதார‌ வீழ்ச்சியை வைத்து, லிப‌ர‌ல் வென்றுவிடுமோ என்ற‌ நிலை வ‌ந்த‌போது, அந்த‌ அற்புத‌ த‌ருண‌த்தை -எமினெமின் வார்த்தைக‌ளில் சொல்வ‌த‌னால் Seize the momentஜ‌- லிப‌ர‌ல் க‌ட்சியின் உறுதிய‌ற்ற‌ த‌லைமையால் த‌ம‌க்குரிய‌தாக‌ மாற்ற‌முடிய‌வில்லை. ஒரு க‌ட்சியின் அர‌சிய‌ல் விஞ்ஞாப‌ன‌த்தை விம‌ர்சிக்காது, லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ரை நோக்கி மிக‌வும் கீழ்த்த‌ர‌மான‌ தாக்குத‌ல்க‌ளை கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சி தொலைக்காட்சிக‌ளில் ந‌ட‌த்த‌த்தொட‌ங்கிய‌து, ' நான் ந‌ல்ல‌வ‌ன் ம‌க்க‌ளுக்கு அதையெல்லாம் விள‌ங்க‌ப்ப‌டுத்த‌த் தேவையில்லை' என்று அர‌சிய‌ல் ச‌துர‌ங்க‌த்தில் எதிர்க் காய்க‌ளை ந‌க‌ர்த்தத்தெரியாத‌ லிப‌ர‌ல் க‌ட்சி த‌லைவரை அர‌சிய‌ல் தெரியாத அப்பாவியென‌த்தான் எடுத்துக்கொள்ள‌வேண்டியிருக்கிற‌து.  அத்தோடு சுற்றுச் சூழ‌லில் மிகுந்த‌ அக்க‌றையுடைய‌வ‌ராக‌ Dion இருந்த‌தால், சுற்றுச் சூழ‌லை முன்வைத்து நிறைய‌ வ‌ரிக‌ளை சுற்றுச் சூழ‌ல் பாதுகாப்பிற்காய் அற‌விட‌ப்போகின்றார் என்ற‌ ஒரு ப‌ய‌த்தை ம‌க்க‌ளிடையே மிக‌ நுட்ப‌மாக‌ கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சி கொண்டு சென்றுமிருந்த‌து.

ஆக‌, இப்போது ச‌ந்தைப் பொருளாதார‌ வீழ்ச்சியால் கொன்ச‌ர்வேடிக் க‌ட்சியிற்கு பெரும்பான்மை அர‌சு அமைப்ப‌து என்ற‌ நிலையிலிருந்து, 'நாயைப்பிடி பிச்சை வேண்டாம்' என்ற‌ நிலையில் த‌ம் வ‌ச‌த்து இருந்த‌ ஆட்சியை மீள‌வும் காப்பாற்ற‌வேண்டிய‌ நிலையில் தேர்த‌ல்‍ 2008  ஒக்ரோப‌ரில் ந‌ட‌க்கின்ற‌து.

தேர்த‌ல் 2008 (Total Seats 306)

Conservative - 143
Liberal - 77
Bloc Quebecios - 49
NDP - 37
Independent - 2

இவ்வாறாக‌ச் சென்ற‌ ஒக்ரோப‌ரில் ஒரு பெரும்பான்மை அர‌சை வ‌ல‌துசாரிக‌ளுக்குக் கொடுக்க‌ ம‌க்க‌ள் த‌யாரில்லையென்ற‌ நிலையில், மீண்டும் வ‌ல‌துசாரிக‌ள் இன்னொரு சிறுபான்மை அர‌சை பாராளும‌ன்ற‌த்தில் 'த‌லை த‌ப்பிய‌து த‌ம்பிரான் புண்ணிய‌ம்' என்ற‌வ‌ளவில் அமைத்துக்கொண்டார்க‌ள்...

4.
க‌ன‌டாத் தேர்த‌ல் முடிவுக‌ளைப் பார்த்துக்கொண்டிருந்த‌ இர‌விலோ அத‌ற்க‌டுத்த‌ நாளிலோ, கூட‌வே துணையாயிருந்த‌ ந‌ண்ப‌ரிட‌ம், ஏன் ம‌ற்ற‌க்க‌ட்சிக‌ள் கூட்டாய்ச் சேர்ந்து கொன்ச‌ர்வேடிவை விழுத்தி கூட்ட‌ணி அர‌சை அமைக்க‌க்கூடாது என்று கேட்டிருக்கின்றேன். இன்னொரு ந‌ண்ப‌ரிட‌மும் இது ப‌ற்றி விவாதித்த்தாய் நினைவு. இங்கு உய‌ர்க‌ல்லூரியில் ப‌டித்த‌ கால‌ங்க‌ளிலேயே க‌ன்டா வ‌ர‌லாறு, அர‌சிய‌ல் பாட‌ங்க‌ள் ப‌க்க‌ம் போன‌தேயில்லை. க‌ன‌டாவின் வ‌ர‌லாறு என்ப‌தே இர‌த்த‌க்க‌றைப‌டிந்த‌ வ‌ர‌லாறு என்ப‌து வேறு விட‌ய‌ம். ஆக‌வே க‌ன‌டிய‌ அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தில் இவ்வாறான‌ கூட்ட‌ணிய‌ர‌சுக‌ள் அமைப்ப‌ப‌த‌ற்கு  எதிரான‌ ஒரு ச‌ட்ட‌ம் கூட‌விருக்க‌லாம் என்று நினைத்திருந்தேன்.  எனெனில் இர‌ண்டாம் உல‌க‌ம‌காயுத்த‌தின் பின், கொம்யூனிஸ்ட் க‌ட்சியொன்றை க‌ன‌டா  த‌டை செய்த‌தாய் எங்கையோ வாசித்த‌து நினைவிலிருக்கின்ற‌து.  எதுவும் ந‌ட‌க்க‌லாம் உல‌க‌த்தில்.

ஆக‌ வ‌ல‌துசாரிக‌ள் மீண்டும் ஆட்சிப்பீட‌த்திலேறினார்க‌ள். இந்த‌ வ‌ருட‌த்தில் இல்லாவிட்டாலும் அடுத்த‌ வ‌ருட‌த்தின் பிற்ப‌குதியிலாவ‌து ஒரு Recession க‌ட்டாய‌ம் நிக‌ழும் என்று ந‌ம‌து மேன்மைக்குரிய‌ நிதிய‌மைச்ச‌ர் செப்பினார். விரைவில் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட‌வுள்ள‌ வ‌ர‌வு செல‌வு திட்ட‌த்தில் பெரிய‌ துண்டு விழ‌ப்போகின்ற‌து (ஆக‌வே ம‌க்க‌ளே உங்க‌ளை எப்பாடுப‌ட்ட‌வாது காப்பாற்றுங்க‌ள்) என்றும் அவ‌ர் க‌ட்டிய‌ம் கூறினார் (ஆப்கானிஸ்தானிற்கே நிறைய‌ பில்லிய‌னின் நிதி போகின்ற‌து பிற‌கு எப்ப‌டி ப‌ட்ஜெட்டை balance செய்வ‌தாம்?). அவை எதுவும் குறித்து அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டாது, த‌மிழ் ம‌க்க‌ளின் த‌லைவிதியை நிர்ண‌யிப்ப‌த‌ற்காய் சுப்பிர‌ம‌ணிய‌ சுவாமியை, ஆன‌ந்த‌ச‌ங்கரியை இங்கே அழைத்து கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்து ந‌ம‌து புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ள் கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சு வ‌ந்ததால் புலிக‌ளுக்கு மேலும் அப்புக் கிடைக்க‌ப்போகின்ற‌து என்று கொண்டாடினார்க‌ள். எல்லாவித‌மான‌ ச‌ன‌நாய‌க‌மும் இருக்கின்ற‌தென்றால், புலிக‌ளை எதிர்ப்ப‌த‌ற்கு ம‌ட்டுமில்லை புலிக‌ளை ஆத‌ரித்துப் பேசுவ‌த‌ற்கான‌ உரிமைக்கும் குர‌ல் கொடுக்க‌வேண்டும் என்று உண்மையான‌ ச‌ன்நாய‌க‌ விழுமிய‌ங்க‌ள் தெரிந்திருந்தால், த‌மிழ்த் தேசிய‌ கூட்ட‌ணியில் ம‌க்க‌ளால‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பா.உறுப்பின‌ர்க‌ளுக்கு க‌ன்டா விசா கொடுக்க‌ ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌போதெல்லாம் 'அர‌சிய‌லுக்கு அப்பால்' ச‌ன‌நாய‌க‌ உரிமையை முன்வைத்து குர‌ல் எழுப்பியிருக்க‌வேண்டும். ஒரு சிங்க‌ள‌வ‌ரான‌ க‌லாநிதி விக்கிர‌பாகுவிற்கு விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தை எதிர்த்துக் குர‌ல் கொடுத்திருக்க‌வேண்டும், ஆனால் புலி அடையாள‌ம் கொடுத்து... அவ‌ருக்கு விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தைக் கொண்டாடிய‌தோடு ந‌ம‌து புலியெதிர்ப்பு ச‌ன்நாய‌க‌ உரிமைக‌ள் முடிந்துவிட்ட‌ன‌. புலி X புலி எதிர்ப்பு அர‌சிய‌லுக்கு அப்பால் ந‌க‌ர‌முடியாத‌ புல‌ம்பெய‌ர் அர‌சிய‌ல் நில‌வ‌ர‌ம் மிக‌வும் க‌வ‌லைக்குரித்தான‌து. அ.மார்க்ஸ், ஷோபாச‌க‌தி போன்ற‌வ‌ர்க‌ளின் அண்மைக்கால‌ க‌ட்டுரைக‌ளை முன்வைத்து எழுத‌விரும்பிய‌ குறிப்புக‌ள் அரைகுறையிலே நிற்கின்ற‌து. தொட‌ர்ந்து எழுத‌ விரும்பாத‌த‌ற்கு கார‌ண‌ம், நாம் எங்க‌ளுக்குள்ளே சொறிய‌லாம், பிறாண்டுப்ப‌ட‌லாம் என்ற‌ அற்ப‌ ச‌ந்தோச‌ம்/கோப‌த்தைத் த‌விர‌ வேறொன்றும் உருப்ப‌டியாக‌ நிக‌ழ‌ப்போவ‌தில்லையென்ற‌ அலுப்பே கார‌ண‌ம். புல‌ம்பெய‌ர்ந்து அர‌சிய‌லை முன்னெடுப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து அப்படிச் சொல்ப‌வ‌ர்க‌ள், எத‌ற்கெத‌ற்கோ அறிக்கை விடுகின்றார்க‌ள்/கையெழுத்துப் போடுகின்றார்க‌ள். இன்று புல‌ம்பெய‌ர்ந்து கொண்டிருக்கும் வ‌ன்னிக்குள்ளிருக்கும் ம‌க்க‌ளுக்காக‌வே, கிழ‌க்கு மாகாண‌த்தில் மாறி மாறி போட்டுத்த‌ள்ள‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் அப்பாவி ம‌க்க‌ளுக்காக‌வோ, இல‌ங்கை அர‌சின் மிலேச்ச‌ன‌த்த‌ன‌மான‌ கிள‌ஸ்ர‌ர்(Cluster) குண்டுத்தாக்குத‌ல்க‌ளுக்கு எதிராக‌வோ ஒரு அறிக்கை விடுவார்க‌ள் என்றால்..ம்கூ. இப்ப‌டியெல்லாம் செய்தால் ந‌ம‌து ந‌டுநிலைமை குழ‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌ர‌லாற்றில் த‌ம் பெய‌ர்க‌ள் பொன்னெழுத்துக்க‌ளில் த‌வ‌றாக‌ப் ப‌திய‌ப்ப‌ட்டு விடுமோ என்ற‌ க‌வ‌லை அவ‌ர்க‌ளுக்கு இருக்கிற‌து போலும். ந‌ம‌து ம‌க்க‌ளுக்காய் எழுந்த‌ இய‌க்க‌ங்க‌ளின் அர‌சிய‌ல் எல்லாம் எப்ப‌டி த‌னி ம‌னித‌ர்க‌ளில் போய் ஒடுங்கிக்கொண்ட‌ன‌வோ அதைவிட‌ மிக‌க்கேவ‌ல‌மாய் ந‌ம‌து புல‌ம்பெய‌ர் அர‌சிய‌ல் த‌னிம‌னித‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்காய் முன்னெடுக்க‌ப்ப‌டுவ‌தைக் காணும்போது மிக‌வும் கேவ‌ல‌மாக‌ இருக்கின்ற‌து. எத்த‌னையோ தேவைய‌ற்ற‌ விட‌ய‌ங்க‌ளை த‌மிழ்நாட்டிலிருந்து சுவீக‌ரித்துக்கொண்ட‌ நாம், த‌மிழ‌க‌த்துப் ப‌டைப்பாளிக‌ள்/ செய‌ற்பாட்டாள‌ர்க‌ளிட‌மிருந்து இவ்வாறான‌ ச‌ம‌ய‌ங்க‌ளிலாவ‌து -ச‌ற்றாவ‌து- ம‌க்க‌ளுக்கு ஏதாவ‌து உருப்ப‌டியாக‌ச் செய்வ‌து ப‌ற்றி க‌ற்றுக்கொள்ள‌லாம்.

நிற்க‌. க‌னடாவின் அர‌சிய‌லைப் ப‌ற்றியெழுத‌ வ‌ந்த‌ இக்க‌ட்டுரை எங்கெங்கோ அலைகின்ற‌து. நேர்கோட்டு வாழ்வே இனிச் சாத்திய‌மில்லை என்கின்ற‌போது நேர் எழுத்துமுறை சாத்திய‌மா என்ன‌? ஆக‌ இறுதியாய் க‌ன‌டா கொன்ச‌ர்வேட்டிவ் அர்சு க‌விழ்வ‌த‌ர்கான‌ சூழ்நிலைக‌ள் சென்ற‌ வார‌த்திலிருந்து கனிய‌த்தொட‌ங்கியிருக்கின்ற‌ன‌.

சிறுபான்மை அர‌சாக‌விருக்கும் கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சு தானொரு பெரும்பான்மையாக‌ அர‌சாக‌ த‌ன்னை நினைத்து த‌ன்னிச்சையாக‌ முடிவுக‌ளை எடுக்க‌த்தொட‌ங்கிய‌போது, இம்முறை லிப‌ர‌ல், என்டிபி, ப்ளொக் கியூபெக்கா சேர்ந்து கொன்ச‌ர்வேடிவ் க‌ட்சியிற்கு எதிரான‌ ந‌ம்பிக்கையில்லாப் பிரேர‌ணையை வ‌ருகின்ற‌ திங்க‌ட்கிழ‌மை கொண்டுவ‌ருகின்ற‌ன‌. பில்லிய‌ன் க‌ண‌க்கில் ப‌ண‌த்தைச் செல‌வ‌ழித்து இர‌ண்டு வ‌ருட‌த்திற்குள் மூன்றாவ‌து தேர்த‌லை க‌ன‌டிய‌ ம‌க்க‌ள் ச‌ந்திக்க‌ விரும்ப‌மாட்டார்க‌ள் என்ப‌தால், லிப‌ர‌லும், என்டிபியும் இணைந்து கூடட‌ணிய‌மைத்து அர‌சைத் த‌ங்க‌ளுக்குத் த‌ரும்ப‌டி கோருகின்றார்க‌ள். ப்ளொக் கியூபெக் தான் ஆட்சியில் ப‌ங்குபெற்றாம‌ல் வெளியிலிருந்து 2010 ஆண்டுவ‌ரை ஆத‌ர‌வு த‌ருகின்றோம் என்றிருக்கின்றார்க‌ள். கொன்ச‌ர்வெட்டிவ் க‌ட்சி க‌விழ்வ‌து உறுதியாகிவிட்ட‌து. வ‌ருகின்ற‌ ஜ‌ன‌வ‌ர் மாத‌ம் ச‌ம‌ர்பிக்கின்ற‌ ப‌ட்ஜெட் வ‌ரையாவ‌து பொறுத்திருக்க‌... என்று பிர‌த‌ம‌ர் க‌த‌ற‌த்தொட‌ங்கியுள்ளார்.

இம்முறை யார் க‌னடாவில் ஆட்சியிலிருப்ப‌து என்ப‌தை க‌வ‌ர்ன‌ர் ஜென‌ர‌லே தீர்மானிக்க‌வேண்டிய‌வ‌ராய் இருக்கின்றார். லிப‌ர‌ல்-என்டிபி இணைந்து, இன்னொரு தேர்த‌லுக்கு அழைப்பு விடுக்காது, தேர்த‌லில்லாது ஆட்சிய‌மைப்ப‌த‌ற்கு அழைப்பு விடுத்த‌து ஒரு ந‌ல்ல‌தொரு முய‌ற்சியே. ஆக‌ க‌வ‌ர்ன‌ர் ஜென‌ர‌லுக்கு மூன்று தெரிவுக‌ள் உள்ள‌ன‌.

முத‌லாவ‌து உட‌னடித் தெரிவாய் த‌ன‌க்குள்ள‌ அதிகார‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி பாராளும‌ன்ற‌த்தை ஒத்திவைத்த‌ல் (ஆக‌க்குறைந்த‌ அடுத்த‌ ப‌ட்ஜெட் ச‌ம‌ர்ப்பிக்கும் வ‌ரையாவ‌து), அதையேதான் கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சாங்க‌ம் கேட்கின்ற‌து. அந்த‌ இடைவெளிக்குள் ஏதாவ‌து ச‌ம‌ர‌ச‌த்தை பின்க‌த‌வுவ‌ழியால் செய்ய‌லாம் என்று ஆட்சியிலிருக்கும் வ‌ல‌துசாரிக‌ள் ந‌ம்புகின்ற‌ன‌ர்.. இர‌ண்டாவ‌து தெரிவு, பாராளும‌ன்ற‌த்தைக் க‌லைத்து இன்னொரு தேர்தலை ந‌ட‌த்துவ‌து. மூன்றாவ‌து தெரிவு, லிப‌ர‌ல்‍ என்டிபி என்ற‌ கூட்ட‌ணிக்க‌ட்சிக‌ளை ஆட்சிய‌மைக்க‌க் கேட்ப‌து.

ப்ளொக் கியூபெக்கா க‌ட்சியின‌ரை பிரிவினைவாதிக‌ள் என்று மோச‌மாக‌த் திட்டும்..., புதிய‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் மீது ச‌ட்ட‌ விதிகளை இறுக்கும்..., ஓரின்ப‌பாலின‌ரின் திரும‌ண‌ங்க‌ளை அங்கீக‌ரிக்கும் ச‌ட்ட‌த்தை நிராக‌ரிக்கும்... கொன்ச‌ர்வேட்டிவ் க‌விழ்த்து ஒரு கூட்டணி அர‌சு வ‌ருவ‌தே ம‌க்க‌ளுக்கு ந‌ன்மை ப‌ய‌க்கும். மேலும் இட‌துசாரித்த‌ன்மையுள்ள‌ என்டியிபியின‌ர் ஆட்சியில் ப‌ங்குபெறும்போது ம‌த்திய‌/கீழ்த்த‌ர‌ ம‌க்க‌ளிற்கும், சிறுபான்மையின‌ருக்கும், புதிய‌ குடிவ‌ர‌வாள‌ருக்கும் ஏதாவ‌து சில‌ ந‌ன்மைக‌ளாவ‌து நிக‌ழும் சாத்திய‌முமுண்டு.

ம் நினைப்ப‌தெல்லாம் ந‌ட‌ந்துவிட்டால்...?

குறிப்பு 1 : கியூபெக‌ த‌னிநாடாக‌ பிரிய‌வேண்டும் என்ற‌ ப்ளொக் கியூபெக்கா உள்ளிட்ட‌ க‌ட்சிக‌ள் முக்கிய‌ கோரிக்கையாக‌ வைத்திருந்தாலும், 1967ல் ரூடோ லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராகிப் பிர‌த‌ம‌ரான‌திலிருந்து இற்றைவ‌ரை லிப‌ர‌ல் க‌ட்சியிலிருந்து பிர‌த‌ம‌ர் ஆன‌வ‌ர்க‌ள் எல்லோரும் கியூபெக‌ மாநில‌த்திலிருந்தே வ‌ந்திருக்கின்றார்க‌ள் என்ப‌து க‌வ‌ன‌திற்குரிய‌து. இன்றைய‌ லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ரும் கியூபெக‌ மாகாண‌த்தைச் சேர்ந்த‌வ‌ரே.

குறிப்பு 2: க‌ட‌ந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளில் என்டிபி க‌ட்சியின‌ர், 19, 29, 37 ஆச‌ன‌ங்க‌ளென‌ வ‌ள‌ர்ச்சிபெற்று வ‌ருவ‌து த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில் என‌க்கு உவ‌ப்பான‌ விட‌ய‌ம்.

ந‌ன்றி: விக்கிபீடியா (தேர்த‌லின் க‌ட்சிக‌ள் பெற்ற‌ ஆச‌ன‌ங்க‌ளின் விப‌ர‌ங்க‌ளுக்கு)

மு.க அழகிரி மற்றும் மாறன் பிச்சர்ஸின் "பாசக் கிளிகள் !"
நேற்று முதல் படப்பிடிப்புடன் தொடர்கிறது "பாசக் கிளிகள்" (பகுதி 2 )

கதை, திரைக்கதை வசனம் : கலைஞர் மு.கருணாநிதி

செய்தி மற்றும் விளம்பரம் : லக்கி லுக்

மக்கள் தொடர்பு : வலையுலக திமுக அனுதாபிகள்

நடிகர்கள் : மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாநாயகன் மற்றும் வில்லனாக முக அழகிரி, இரண்டாவது கதா நாயகன் கலாநிதி மாறன், மூன்றாவது கதாநாயகன் தயாநிதி மாறன்.

நகைச்சுவை : சன் டிவி மற்றும் கலைஞர் டிவி சின்னத் திரை கலைஞர்கள்

கவுரவத் தோற்றம் : முக ஸ்டாலின்

சிரிப்பு நடிகர்கள் : கட்சித் தொண்டர்கள்

இசை : ஜிங்சா கலைஞர்கள்

தயாரிப்பு : க்ளவுட் நைன் மற்றும் சன் டிவி

டைரக்சன் : எல்லாம் நேரம் தான்.

கதைச் சுறுக்கம் : பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் தலைவரின் வாரிசுகளுக்கும், தலைவரின் மாமன் மகன்களுக்கும் நடக்கும் சண்டை. யாரை மக்கள் மதிக்கிறார்கள் என்ற கணக்(கு) கெடுப்பில் முட்டல் மோதலில் தலைவரின் மகனுடைய ஆட்கள் மாமன் மகன்களின் அலுவலகத்தில் புகுந்து மூன்று பேரை கொலை செய்துவிடுகிறார்கள். இதை பெருத்த அவமானமாக கருதிய மாமன் மகன்கள் பதவியை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு அநீதிக்கு எதிராக போராடுகிறார்கள். ஒருபக்கம் தாத்தாவின் குடும்பம் என்கிற பாசம், மறுபக்கம் தொழில் போட்டித் தன்மை. முடிவில் பாசம் வெல்கிறதா ? அநீதி வென்றதா ? கலைஞர் கருணாநிதியின் சிறப்பான வசனமாக "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்ற ஒருவரித் தீர்வுடன், சண்டைக் காட்சிகளுடன் காணத் தயாராகுங்கள் பாசக் கிளிகள். பாசமே வென்றது என்று மற்றொருமுறை தமிழனத்துக்கும் உணர்த்தும் உன்னதகாவியம் என்றே படப்பிடிப்பு தொடக்கத்தில் கலந்து கொள்பவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அடப்பாவிகளா....! இது தெரியாமல் சின்ன மாறன் பார்பனர் வீட்டு மருமகன் என்பதற்காக மாறன்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், மாறன்கள் திமுகவை அழிக்கிறார்கள் என்று எதிராக மற்றொரு மற்றொரு கூட்டமும் மாய்ந்து மாய்ந்து பதிவுகளை எழுதித் தள்ளியது நல்ல நகைச்சுவை.