Sameera Reddy hot stills from Vettai
For more hot images click on the title
Posted by admin on January 14, 2012 12:06 PM· permalink
ஏறுக்கு மாறாக பேசுவது என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
‘தமிழ் வலைப்பதிவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்?’ என்று கலந்தாலோசிக்க முயற்சித்த பாவத்துக்காக indiblogger என்கிற அமைப்பினை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில வலைப்பதிவர்கள். இவர்கள் தமிழில் எழுதுவதை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும், பார்த்தாலும் பெரியதாக கண்டுக்கொள்ளப் போவதில்லை என்றாலும், நாம் பார்த்துத் தொலைத்துவிட்டோமே என்கிற பாவத்துக்காக இந்தப் பதிவினை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.
indiblogger.in என்பது இந்திய வலைப்பதிவர்களை ஒரு குடையின் கீழ் திரட்டும் ஒரு அமைப்பு. bloggingஐ passion ஆக கொண்ட வலைப்பதிவர்கள் சிலர், லாபநோக்கமின்றி தொடங்கிய இணைய அமைப்பு. ஆங்கிலம் மட்டுமன்றி, இந்திய மொழிகளில் வலைப்பதியும் யாரும் இந்த இணையத்தளத்தில் உறுப்பினர்கள் ஆகலாம். ஓரளவுக்கு நம்முடைய ‘தமிழ்மணம்’ திரட்டி மாதிரி என்றும் சொல்லலாம். ஆனால் தமிழ்மணத்தை விட சில கூடுதல் செயல்பாடுகள் கொண்டவர்கள். இந்திய நகரங்களில் ஆங்காங்கே அவ்வப்போது வலைப்பதிவர் சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள். இந்தச் சந்திப்புகளில் பல்வேறு ஆக்கப்பூர்வமான, மொக்கைப்பூர்வமான விஷயங்கள் நிகழும்.
கடந்த ஆண்டு சென்னையில் இண்டி பிளாக்கர் சந்திப்பு நடந்தபோது பாலபாரதி, உண்மைத்தமிழன் உள்ளிட்ட சீனியர் பதிவர்களோடு பல ஜூனியர் பதிவர்களும் கலந்துகொண்டோம். ஏழெட்டு தமிழ் வலைப்பதிவர்களை கண்டதுமே இண்டிபிளாக்கர் டீம் மகிழ்ச்சி அடைந்தது. தமிழின் மூத்த வலைப்பதிவரான பாலபாரதிக்கு பேச மேடை அமைத்துத் தந்து கவுரவித்தது. தமிழ் வலைப்பதிவுகளில் நடைபெறும் முயற்சிகள் குறித்து விரிவாக ‘தமிழிலேயே’ பேசினார் பாலபாரதி. ஆங்கில மற்றும் இந்தி வலைப்பதிவுகளுக்கு கிடைக்கும் விளம்பர ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி, அம்மாதிரியான வசதிகள் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிடைத்தால், இம்முயற்சிகள் மேலும் பரவலாகும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் புதியதாக வலைப்பதிய வரும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு, போதுமான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் இல்லையென்றும், இவையெல்லாம் கிடைக்கும் பட்சத்தில் தமிழில் வலைபதிபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென்றும் அவர் யோசனை சொன்னார்.
இவ்வாண்டுக்கான இண்டிபிளாக்கர் வலைப்பதிவர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடந்தது. “How we can help tamil bloggers?” என்று தனியாக ஒரு அமர்வினை இச்சந்திப்பில் இண்டிபிளாக்கர் அமைப்பினர் முன்னெடுத்ததற்கு காரணம், கடந்தாண்டு பாலபாரதி சந்திப்பில் பகிர்ந்துக்கொண்ட கருத்துகளின் விளைவே என்று கருதுகிறேன்.
“help” என்கிற சொல்லினை ‘உதவி’ என்பதாகவே புரிந்துக் கொள்கிறேன். “May I help you?” என்று யாராவது நம்மைப் பார்த்துக் கேட்கும் பட்சத்தில், “Yes, Please” என்று அங்கீகரிப்பதோ அல்லது “No, Thanks” என்று மறுதலிப்பதோதான் நாகரிகம். “எனக்கு உதவ நீ யாருடா?” என்று கேட்பது அநாகரிகம். ஒருவன் உதவ நினைப்பதை தவறு என்று சொல்லுவது எவ்வகையில் சரியானது என்று தெரியவில்லை. தன்முனைப்புக்காக ஏதாவது ஸ்டண்ட் அடித்துவிட்டு, அதற்கு ‘தமிழ், தமிழன், தன்மானம்’ சாயம் பூசுவது சர்வநிச்சயமாக போலி தமிழுணர்வு, போலி சுயமரியாதை.
“ஈழத்தமிழர்களுக்கு உதவுவோம்” என்று அரசியல்வாதிகளோ, தமிழுணர்வாளர்களோ சொன்னால் அல்லது வலைப்பதிவர்கள் பதிவு போட்டால், அது ஈழத்தமிழர்களை அவமதிப்பது ஆகுமா? அவமதிப்பு என்று கருதுவதுதான் உணர்வினை கொச்சைப்படுத்தும் செயல்.
உதவுகிறார்களோ இல்லையா என்பது வேறு விஷயம். உதவி தேவைப்படுபவர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும். வேண்டாமென்பவர்கள் மறுத்துக் கொள்ளட்டும். ஆனால் யாரும் ‘உதவுகிறோம்’ என்று சொல்வதையே ஆட்சேபித்து, ‘ஆ, ஊ’வென்று கும்மியடிப்பது அக்மார்க் பாசிஸம்.
‘உடான்ஸ்’ என்று ஒரு திரட்டி நடத்தப்படுகிறது? தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்வெளி என்று ஏற்கனவே ஏராளமான திரட்டிகள் இருக்கும்போது, புதியதாக இந்த ‘திரட்டி’யை யார் கேட்டது? இந்த திரட்டி இப்போது புதியதாக ஏதோ ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவர்களுக்கு சிறுகதையே எழுதத் தெரியாதா? இவர்கள் போட்டோவோடு Hint கொடுத்துதான் சிறுகதை எழுத வேண்டுமா? அவ்வளவு கற்பனை வறட்சியிலா தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள்? இந்த சிறுகதைப் போட்டி தமிழ் வலைப்பதிவர்களின் புனைவாற்றலை கொச்சைப்படுத்துகிறது. உடான்ஸ் இந்தியிலோ, வங்காளத்திலோ இப்படி ஒரு சிறுகதைப் போட்டியை நடத்துமா? – இப்படியெல்லாம் கேள்விகளை அடுக்கினால் இது எவ்வளவு அபத்தம், எவ்வளவு முட்டாள்த்தனம்?
கடந்த ஆண்டு கூட ஏதோ ‘பதிவர் சங்கம்’ அது இதுவென்று பேச்சு அடிபட்டது? எத்தனை பதிவர்களை கலந்தாலோசித்து அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது? ‘தேவை’யென்று நினைத்த ஒரு சிலர் பேசி வைத்துக்கொண்டுதானே அம்முயற்சியை மேற்கொண்டோம். அம்மாதிரி இண்டிபிளாக்கர் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஏதோ உதவ முன்வந்தது எப்படி தமிழர்களை, தமிழை கொச்சைப்படுத்துவதாகும்?
ஏதோ உரிமையை கேட்பதாக பாவனை செய்துக்கொண்டு, நடந்து முடிந்த இண்டிபிளாக்கர் சந்திப்பில் நடந்தது வெற்று கலாட்டா. இதன் மூலமாக அங்கு கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் மத்தியில், தமிழ் வலைப்பதிவாளர்கள் கோமாளிகளாக பார்க்கப்பட்டார்கள் என்பதே உண்மை. இவ்வளவு கலாட்டா நடக்கும்போதும், இண்டிபிளாக்கர் அமைப்பாளர்கள் மிக அமைதியாகவே, பெருந்தன்மையாகவே இப்பிரச்சினையைக் கையாண்டார்கள். நல்லவேளையாக ‘எல்லோரும் வெளியே போங்க’ என்று ‘நிஜமான அவமானத்தை’ தமிழ் வலைப்பதிவர்களுக்கு நிகழ்த்திவிடவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான சமாச்சாரம்.
கூகிள் ஆட்சென்ஸில் ஏதோ தில்லுமுல்லு செய்து சம்பாதிக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், அந்த டெக்னிக்கை சக பதிவர்களுக்கே சொல்லிக் கொடுக்காத அற்பத்தனத்தோடு இருக்கையில், எவனோ ஒருவன் எப்படியோ உதவ வருகிறேன் எனும்போது, அதையும் தடுத்து நிறுத்துவது அயோக்கியத்தனம் இல்லையா? உதாரணத்துக்கு ஜாக்கிசேகரை சொல்லுவோம். தமிழின் நெ.1 பதிவராக இப்போது இருக்கும் நிலையிலும், போதுமான தொழில்நுட்ப அறிவில்லாததால், பதிவுமூலமாக ஐந்து பைசா கூட சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு இண்டிபிளாக்கர் உதவுவதில் யாருக்கு என்ன ஆட்சேபணை இருக்கமுடியும்?
மேலும் தன்மானம் இழப்பு, சோறு போடுதல் என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. ஜெண்டில்மேன்ஸ்... அங்கு சென்ற எல்லோருமே ‘கலாட்டாவுக்குப் பிறகும்’, அவர்கள் கொடுத்த டீ-ஷர்ட்டை க்யூவில் நின்று வாங்கி வந்தோம் என்பதை நினைவுபடுத்தவே விரும்புகிறேன். செஞ்சோற்றுக் கடனுக்காக யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். அதற்காக அங்கே நாகரிகமாக அமைதி காத்த மற்ற வலைப்பதிவர்களை சிலர் கொச்சைப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் யாராவது மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது மொக்கை கமெண்டுகள் அடிப்பது, குறுக்கீடு செய்வது, குடித்துவிட்டு கலாட்டா செய்வது என்று சமகால தமிழ் வலைப்பதிவு கலாச்சாரம் ஜெகஜ்ஜோதியாகவே இருக்கிறது. இதன் நீட்சியாகதான் இண்டிபிளாக்கர் சந்திப்பில் சலசலப்பும் நடந்தது.
- இந்த கூட்டறிக்கை அதிஷா மற்றும் யுவகிருஷ்ணா ஆகியோரால் தமிழ் வலைப்பதிவர் சமூகத்துக்கு கையளிக்கப்படுகிறது -
Posted by யுவகிருஷ்ணா (yuvakrishna@gmail.com) on October 11, 2011 11:57 AM· permalink
**
மனிதனையெல்லாம்
புத்தனாக்க எண்ணிய கடவுள்
வழிநெடுக போதிமரங்களை
நட்டு வைத்தான்
மரங்களையெல்லாம்
வெட்டி வெட்டி - ஒரு கைதேர்ந்த
மரம்வெட்டியானான் மனிதன்
***
அனுபவம்தான் சிறந்த ஆசான்.அது கற்றுத்தரும் பாடத்தை வேறு எந்த பள்ளியும் கற்றுத்தராது
"ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை." தினமும் நம்மைச் சுற்றி எத்தனையோ விசயங்கள் நடக்கின்றன,ஆனால் அவற்றை எல்லாம் உற்று கவனித்து அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோமா ? என்றால் இல்லை என்பதே பதிலாய் வரும் பல நேரங்களில்
(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என் உறவினரின் மகள் ஹேமாவுக்கு திருமணமாகி சிலவருடங்கள் மகிழ்ச்சியாகவே கடந்தது. பின்னர் அவள் கணவன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதும்,வீட்டில் இருக்கும் நகை ,பணம் இவற்றை தெரியாமல் எடுத்து சென்று விடுவதும் என மாறினார்.ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு வந்து அடிஉதை என நிலமை மோசமானபோதுதான் எங்கள் உறவினருக்கே விசயம் வந்தது. எனக்கு அக்கா என்றாலும் ஒரு நண்பர்கள் போல பழகியாதால் தனி பாசம். என்னிடம் ஏன் இதையெல்லாம் முன்பே சொல்லவில்லை என நான் கேட்டபோது "கேட்டால் உன் மனசு வருத்தபடுமுன்னு சொல்லவில்லை" என்று சொன்னாr.
பல கனவுகளோடு வரும் பெண்ணை பெரிதாக மகிழ்விக்க தெரியாவிட்டாலும் அவளை சக மனுசியகவாவது மதிக்கலாமே.. திருமணமான சில வருடங்களிலே வாழ்வையே
வெறுக்கும் அளவுக்கு நடந்துகொள்ளாமல் இருக்கலாமே ..அவருக்கும் ஒரு சகோதரி உண்டு ,திருமணமாகிய அவரின் சகோதரியிடம் அவள் கணவன் இப்படி நடந்துகொண்டால் இவன் என்ன செய்வான்? கோவம் வருமா? இதேபோல தன மனைவிக்கும் அவளை நேசிக்கும் அண்ணனோ தம்பியோ அப்பவோ அம்மாவோ இருப்பாங்கனு யோசிப்பானா ?
இதையெல்லாம் சிந்திக்கும் திறன் இருந்திருந்தால் நல்லபடியாக வாழ்ந்திருப்பனே .. இதுபோன்ற ஜென்மங்கள் என் திருமணம் செய்கிறது? பொம்பளை உடம்புதான் வேணுமுன்னா விபசரிகிட்ட போங்கடா... அதுக்கு எதுக்கு திருமணம் ??..
ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள
கூடதுனு இங்க கற்றுகொண்டேன்
******
பதின்ம வயது :
இந்த வயதுகளில் சிறு சிறு பிரச்சனைகள் கண்டிப்பாக வரும், ஆனாலும் பெரியதாக பாதிப்பில்லாமல் அதை கடந்து வருவதே பெரிய விஷயம்.
இந்த பதிவில் தீபா தனக்கு திருமணம் ஆனதை முகம் முழுக்க மிக மகிழ்சியுடன் சொல்வாள் . 18 வருடம் தன பெற்றோர் காட்டிய அன்பை விட சில வருடங்கள் கல்லூரியில் உடன் படித்தவனின் காதல் பெரிது என முடிவு செய்து போனவள் இன்று மோசமான நிலைமையில் உள்ளார்.அன்று அந்த வயதில் தான் எடுத்த முடிவை இன்று நினைத்து தன்னை தானே திட்டிகொள்வார்.
"சாப்பட்டைகீழ போடாதே, பின்னாளில் அது இல்லாமல் கஷ்டப்படுவாய்" என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள், அப்படித்தான் அன்பும். ஒரு தோழன் போல பழகியவர்கள் அறிவுரை சொன்னால் கூட கோவம் வருகிறது அவர்களுக்கு. (என் வயது 27 தான்) இத்தனை வருடம் தன்னை நேசித்தவர்கள் ஒரு விசயத்தில் நம்மை கண்டித்தால் அதுவும் மிக முக்கியமான முடிவுகளில் கண்டித்தால் அதில் எதோ பிரச்சனை என ஏன் சிந்திப்பதில்லை?.
அந்த வயதுவுடைய,நான் நேசித்த ஒருவருக்கு அப்படி காதல் என்று பிரச்சனை வந்த பொது ஒரு தோழனாய் அதில் உள்ள நல்லது/ கெட்டதுகளை சொன்னபோது அது அவர்களுக்கு பிடிக்கவில்லை, என்னுடைய அந்த வயதில் எனக்கு கிடைக்காதது எல்லாம் அவனுக்கு/ அவளுக்கு கிடைக்கணும் என்று எண்ணியவன் நான், இப்படி அவர்களின் மீது அதீத அன்பு கொண்டிருந்த நான் அவர்களுக்கு கெடுதல் செய்வேன் அல்லது தவறான அறிவுரை சொல்வேன் என்று எப்படி நினைகிறார்கள்? என் அன்பை அல்லவா சந்தேகிக்கிறார்கள் ... எனக்கே அவமானமாக இருக்கிறது ..."யார் மீதும் அதீத அன்பு வைக்க கூடாது, அது ஒரு பாவச்செயல், ஆனாலும் தொடர்ந்து அதையே செய்து நம்மை நாமே வேதனை படுத்திகொள்கிறோம்"
****
Posted by பிரியமுடன் பிரபு (priyamudan_prabu@yahoo.com.sg) on October 11, 2011 10:06 AM· permalink
எனக்கு நினைவு தெரிந்தபோது எங்கள் தெருவில் கோலம் போட ஒரு கொலைவெறி டீமே உருவாகியிருந்தது. அம்மா தலைமையில் பக்கத்து வீட்டு பூசாரி ஆயா, பெரியம்மா, டீவி வீட்டுக்காரம்மா, கடைசி வீட்டு காஞ்சனா அக்கா என்று கோல வீராங்கனைகள் ஃபுல் ஃபிக்கப்பில் இருந்த காலம் அது. எங்கள் தெருவில் அப்போது பண்ணிரெண்டு அல்லது பதினைந்து வீடுகள் இருந்திருக்கலாம். ஒரு வீட்டில் போட்ட கோலம் இன்னொரு வீட்டில் ரிப்பீட்டு ஆகிவிடக்கூடாது என்பதற்காக முதல் நாள் இரவு டிஸ்கஷன் நடத்தி அவரவர் போட வேண்டிய கோலத்தை சீரியஸாக முடிவு செய்துவைத்து விடுவார்கள்.
எங்கள் வீட்டிலும், காஞ்சனா அக்கா வீட்டிலும் தான் கோல நோட்டுபுக்கு இருக்கும். மற்றவர்கள் வீட்டிலெல்லாம் ப்ரிண்ட் செய்யப்பட்ட புக் தான் இருந்தது. அம்மாவும், காஞ்சனா அக்காவும் சிரத்தையாக பத்திரிகைகளில் வரும் கோலங்களையெல்லாம் தங்கள் நோட்டுகளில் வரைந்து வைப்பார்கள். ஒரு கட்டத்தில் அம்மாவிடம் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட கோல கலெக்ஷன் இருந்தது. மார்கழி மாதம் இந்த நோட்டுகளுக்கு பயங்கர டிமாண்ட் வந்துவிடும். அட்வான்ஸ் புக்கிங் செய்து அக்கம்பக்கங்களில் இரவல் வாங்கிச் செல்வார்கள்.
அப்போதெல்லாம் எல்லார் வீட்டு வாசலிலும் சாணம் தெளித்து (சிலர் வீடுகளில் மொழ மொழவென்று மெழுகி) அரிசு மாவுடன் சேர்க்கப்பட்ட கோலம் போடப்படும். கோலத்தில் அரிசி மாவு இருப்பதால் பகல் வேளைகளில் வாசலெல்லாம் சிகப்பு எறும்புகளாக காணப்படும். கோலமாவில் அரிசி மாவு சேர்ப்பதற்கு காரணம் புண்ணியம் என்று அம்மா சொல்வார். அதாவது கோலத்தில் இருக்கும் அரிசி மாவை உண்டு எறும்புகள் பசியாறுமாம். எனக்குத் தெரிந்து வெறும் கோலமாவில் கோலம் போட்டால் கை விரல்கள் எரியும். மாவு கொஞ்சம் சாஃப்டாக இருக்கவே அரிசிமாவு சேர்க்கிறார்கள்.
மார்கழி மாதம் மட்டும் வண்ணக்கோலம், மற்ற மாதங்களில் வெள்ளை மட்டும் தான். மார்கழி மாதம் சாணத்தை நடுவில் வைத்து பூசணிப்பூ வைக்கும் வழக்கம் இருந்தது. பூசணிப்பூவுக்கு மடிப்பாக்கத்தில் பஞ்சமே இல்லை. இப்போது பூசணிக்கொடியை காண்பது அரிதாகிவிட்டது.
அம்மா கோலம் போடும்போது நான் உதவியது உண்டு. அதை உதவி என்று சொல்லமுடியாது, உபத்திரவம் என்பது தான் சரி. அம்மா ஒரு பக்கமாக கோலம் போட்டுக் கொண்டு வரும்போது நான் இன்னொரு பக்கமாக கோலப்பொடியை வைத்து கிறுக்குவேன். நான் உருவாக்கிய கிறுக்கலையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் கோலம் போட அம்மாவுக்கு கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ எக்ஸ்ட்ரா பிடிக்கும். பொதுவாக அம்மா கோலம் போட்டால் அப்போதெல்லாம் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் ஆகும். அவ்வளவு பெரிய கோலம். அவ்வளவு பெரிய கோலம் போடுமளவுக்கு பெரிய வாசலும் இருந்தது.
எதற்கெடுத்தாலும் என் முதுகில் நாலு சாத்து சாத்தும் அம்மா, கோலத்தில் நான் விளையாடியதற்கு மட்டும் என்றுமே கோபப்பட்டதில்லை என்பது இதுவரை ஆச்சரியம் தான். அந்தக்காலத்திலிருந்தே இன்றுவரை ஐந்து, ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து கோலம் போடுவது அம்மாவின் வழக்கம். சூரியன் உதிப்பதற்கு முன்பாக கோலம் போட்டுவிட வேண்டும் என்பது அவரது பர்மணெண்ட் டார்கெட். இப்போதெல்லாம் முறைவாசல் சிஸ்டம் வந்துவிட்டது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை தான் எங்கள் முறை. எங்கள் முறை வரும்போது மட்டும் அம்மா நாலரை மணிக்கே எழுந்து கோலம் போட்டுவிடுகிறார். அந்தக் காலத்தில் போட்டது போல பெரிய கோலம் இல்லை. அதில் நான்கில் ஒரு பங்கு போடுமளவுக்கு தான் இப்போது வாசல் இருக்கிறது. தெளிப்பதற்கு சாணியும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.
கோலங்களிலேயே ரொம்பவும் கஷ்டமான கோலம் தேர்க்கோலம் என்று நினைக்கிறேன். தேர்க்கோலத்தில் ஏகப்பட்ட சங்கிலி இருக்கும். புள்ளிகளும் கோக்கு மாக்காக வைக்க வேண்டும். நினைவாற்றல் குறைந்தவர்களால் பெரிய தேர்க்கோலங்கள் போடமுடியாது. தேர்க்கோலம் பட்டையாகவும் போடக்கூடாது. மெலிதாக போட்டால் தான் லுக்கும், ஃபீலும் கிடைக்கும். தேர்க்கோலங்களுக்கு பொதுவாக வண்ணம் தீட்டமாட்டார்கள். இருப்பதிலேயே சுலபமான கோலம் பொங்கலுக்கு போடும் பானை கோலம் போலிருக்கிறது. கோலம் சுமாராக அமைந்துவிட்டாலும், வண்ணத்தில் அசத்தி விடலாம்.
கோலங்களுக்கு மதம் கிடையாது. மார்கழி மாதத்தில் கிறிஸ்துமசும், நியூ இயரும் வரும். எல்லார் வீட்டிலும் மெர்ரி கிறிஸ்துமஸ், ஹேப்பி நியூ இயர் என்று ஆங்கிலத்தில் வாழ்த்துகள் எழுதப்பட்டிருக்கும். காஞ்சனா அக்கா மட்டுமே கிறிஸ்துமஸ் தாத்தாவை தத்ரூபமாக கோலமாக்குவார். மற்ற வீடுகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வீடு படத்தில் வரும் தாத்தா மாதிரி சோணங்கியாக இருப்பார். கேரளா ஸ்டைலில் பூக்கோலம் போடுவதும் காஞ்சனா அக்காவின் ஸ்பெஷாலிட்டி. வீட்டுக்கு அருகில் கிடைக்கும் ஊதாநிற காட்டுப்பூக்களை வைத்தே கோலத்தை ஒப்பேற்றிவிடுவார்.
வீட்டு வாசலில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் கோலம் போடும் பழக்கம் அம்மாவுக்கு இருந்தது. சிமெண்ட் தரையில் வெள்ளை மற்றும் சிகப்பு பெயிண்டில் சிரத்தையாக கோலம் போடுவார். வீட்டின் ஓரங்களில் காவிக்கலர் அடித்து வைத்திருப்பார். வாசற்படியில் நிறைய பேர் பெயிண்டால் மஞ்சள் வண்ணம் அடித்து சிகப்பு பொட்டு வைத்திருப்பார்கள். அம்மாவுக்கு வாராவாரம் வெள்ளிக்கிழமை ஒரிஜினல் மஞ்சளும், குங்குமமும் வாசற்படியில் வைத்தால் தான் நிம்மதி. இன்றும் இது மட்டும் தொடருகிறது. வீட்டில் மொசைக்கும், டைல்ஸும் வந்துவிட்டதால் வீட்டுக்குள் கோலம் போட முடியவில்லை என்பது அம்மாவுக்கு ஒரு குறைதான். அதனால் இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை மட்டும் ஹாலில் ஒரு தாம்பாளத் தட்டில் நீர்நிரப்பி தாமரை உள்ளிட்ட பூக்களை வைத்து அலங்கரித்து கோலமாவு இல்லாமலேயே நீர்க்கோலம் போடுகிறார்.
அம்மா வெளியே எங்காவது போயிருந்தால் நானும் கூட சிறுவயதில் கோலம் போடுவேன். வாசற்படிக்கு முன்னால் மட்டும் ஒரு நாளைக்கு இரு கோலங்கள். காலையில் ஒன்று, மாலையில் விளக்கு வைப்பதற்கு முன்பாக இன்னொன்று. எனக்கு தெரிந்தது ஸ்டார் கோலம் தான். புள்ளி வைக்காமலேயே சுலபமாக போடலாம். மாலை ஐந்து, ஐந்தரை மணியளவில் தங்கச்சி பாப்பாவுக்கு காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு நான் பலமுறை போட்ட அந்த ஒரே ஒரு மாடல் அவசரக் கோலத்தை அம்மாவும், அப்பாவும் என்றுமே பாராட்டத் தவறியதில்லை.
முன்பெல்லாம் யார் வீட்டிலாவது கோலம் போடப்பட்டிருந்தால் சில நொடிகள் நின்று கோலத்தை ரசித்துவிட்டு செல்பவர்களை பார்க்க முடிந்தது. சைக்கிளிலோ, நடந்தோ செல்பவர்கள் கோலம் அழிந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பார்கள். இப்போது கோலத்தை ரசிக்க யாருக்கும் நேரமில்லை. கோலம் அழிவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதும் இல்லை. கோலம் போட மண் தரை கிடைப்பதும் அரிதாகிவிட்டது. கான்கிரீட் தரையாக இருப்பதால் மிக லேசாக தண்ணீர் தெளித்து சின்னதாக ஸ்டார் கோலம் போடுகிறார்கள். அதன் ஆயுளே அதிகபட்சம் பத்து நிமிடம் தான்.
மயிலாப்பூரில் கோலப்போட்டி நடக்கும்போது பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது. வீடுகளில் கோலம் போட முடியாத மாமிகள் அந்நேரத்தில் ஒட்டுமொத்தமாக படையெடுத்து தங்கள் திறமைகளை காட்டுகிறார்கள். வடக்கு மாடவீதியில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் போடுவார் பாருங்கள் கோலம். என்ன வேகம்? என்ன நேர்த்தி? என்ன அழகு?
Posted by யுவகிருஷ்ணா (yuvakrishna@gmail.com) on October 11, 2011 07:42 AM· permalink
Posted by தவறு (noreply@blogger.com) on October 11, 2011 06:53 AM· permalink
பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் மென்பொருள் மூலம் டிசைன் செய்ய நினைக்கும் நாம் அதன் பேக்ரவுண்ட் கலரை பொருத்து எழுத்துக்களின் கலரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். நீங்கள் போட்டோசாப் மென்பொருள் மூலம் அதன் டூல்களை பயன்படுத்தி டிசைன் செய்ய தெரிந்தும் சரியாக கலர்களை தேர்ந்தெடுக்க தெரியாததால் உங்கள் டிசைன்கள் அழகு இல்லாமல் போய்விடுகிறதா ?
Posted by கான் (noreply@blogger.com) on October 11, 2011 06:41 AM· permalink
இரண்டு நாள் முன்னதாக ஒரு ஆங்கில வலைப்பதிவு திரட்டி மற்றும் வலைப்பதிவாளர்களை இந்தியாவெங்கும் குழுமமாய் அமைக்க முயற்சிக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் வருடா வருடம் நடத்துவதுதான். இம்முறை நிறைய தமிழ் வலைப்பூக்கள் நடத்துபவர்களும் கலந்து கொண்டோம்.
டாடா நிறுவனத்தின் க்ராண்டா எனும் காரின் விளம்பரத்துக்காக டாடா இவர்களுடன் சேர்ந்து இலவச கார் ட்ரையல், ஆளுக்கொரு டி சர்ட், போன்ற ஏற்பாடுகளுடன் சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். சென்னையின் புதிய நட்சத்திர ஹோட்டலான ஹயாத்தில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
வந்திருந்த இருநூறு சொச்ச பதிவர்களுள் ராண்டமாய் செலக்ட் செய்யப்பட்ட சிலரின் அறிமுகப்படலத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களின் ஸ்பான்ஸர்களான டாடா க்ராண்டாவை பற்றிய ஒரு சிறு நிகழ்ச்சியும், அவர்களின் செயல்பாடுகள் பற்றிய ஒரு சின்ன பேச்சும், என்று சுவாரஸ்யமாய் ஆக்க முயற்சித்தார்கள். மதியம் டீ பார்ட்டியில் அருமையான உணவுகள் பரிமாறப்பட்டன. வழக்கமான கார்பரேட் மீட்டிங்கின் அத்துனை அம்சங்களையும் கொண்ட ஒரு ஆர்கனைஸ்ட் விழாவாக நடத்தி வந்தார்கள்.
நிகழ்வின் கடைசி விஷயமாய் lounge எனும் ஒரு நிகழ்ச்சி. அதில் ஐந்தாறு குழுவை ஏற்படுத்தி யார் யாருக்கு எதில் சேர விருப்பமோ அதில் சேர்ந்து அரட்டையடிப்பது என்பது போன்ற நிகழ்ச்சி அப்போது ஒவ்வொரு குழுவிற்குமான போர்டை எடுத்து வந்தார்கள். அதில் ஒரு போர்டை பார்த்தும், என்னுள் தாங்க முடியாத கோபம் வந்துவிட, உடனடியாய் அந்த போர்டை எடுக்க வேண்டும் என்று வாதிட்டேன். நாங்கள் தமிழில் எழுதும் ப்ளாகர்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டோம். நீங்கள் எங்களுக்கு எப்படி உதவலாம் என்று கலந்தாலோசனை செய்யும் அளவிற்கு?. என்று ஆரம்பித்து தொடர்ந்து என் கண்டணங்களை பதிவு செய்தவுடன், உடன் இருந்த பெரும்பாலான தமிழ் உணர்வு கொண்ட தமிழ் இணைய பயனாளர்களும் சேர்ந்து எதிர்க்க, அந்த போர்டு எடுக்கப்பட்டது. பின்பு அவர்கள் அதற்கான மன்னிப்பும் கேட்டனர்.
அவர்களை எந்த விதத்தில் அவ்வாறு எழுத தூண்டியது என்றே புரியவில்லை. தமிழில் மட்டும் சுமார் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர் வலைப்பூ வைத்திருக்கிறார்கள். உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் ரீஜினல் மொழியில் தமிழ் இரண்டாவது இடத்திலிருக்கிறது என்று சொல்கிறார்கள். எனக்கு அவ்வளவு சரியாக தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் பெரும்பாலும் எந்த பிராந்திய மொழிக்காரராய் இருந்தாலும் உலகம் முழுவதும் பயன் படுத்தப்படும் மொழியில் எழுதுவதால் சிறப்பானவர்கள் என்று அர்த்தமா? எந்த விதத்தில் நாம் குறைந்து போய்விட்டோம்? தமிழில் இல்லாத டெக்னிக்கல் பதிவுகளா? நாம் தமிழில் எழுதுவதற்கே யூனிகோட் எனும் ஒரு விஷயத்தை பயன்படுத்தி, அதை பயின்று எழுதுபவர்கள் நாம். பிராந்திய மொழியில் எழுதியே இந்திய அளவில் ஐம்பதாயிரம் அளவில் அலெக்ஸா ரேங்கில் இருக்கும் பதிவர்கள் இருக்கும் நம் தமிழ் வலைப்பூ உலகிற்கு இவர்கள் என்ன உதவி செய்ய கலந்தாலோசிக்க வேண்டிய நிலை இருக்கிறது?.
ஒரு வேளை ஆங்கிலத்தில் தொழில் முறையாய் ப்ளாக் எழுதும் ஆட்கள் இருக்கிறார்கள். மாதா மாதம் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதை பற்றி சொல்லி கொடுக்க போகிறார்கள் என்று நினைத்தால் அதுவும் நிச்சயம் அவர்களால் முடியாது. ஏன் என்றால் ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு வருமானமே கூகிளின் மூலம் வரும் வருமானம்தான். அதன் பிறகு அதற்காக ஆட் வேர்ட், டேக் போன்ற பல டெக்னிக்கல் தகிடுதத்தங்களை மட்டுமே வைத்து தொடர்ந்து எழுதி சம்பாதிக்க முடியும்.
ஆனால் தமிழில் நல்ல ட்ராபிக் உள்ள தளங்களுக்கு மட்டுமே ஆட்சென்ஸ் விளம்பரம் மூலமாய் வருமானம் வர வழியிருக்கும் போது அந்த ஆப்ஷனும் இவர்களால் முடியாது. ஏனென்றால் அவர்கள் இணையத்தில் விளம்பரம் வழங்கும் நிறுவனம் அல்ல. அப்படியிருக்க, எப்படி இம்மாதிரியான ஒரு போர்டை எடுத்துக் கொண்டு வருவார்கள்?. ஏதோ ஆங்கில ப்ளாகர்கள் எல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் போலவும், மற்ற மொழியில் எழுதுபவர்கள் கீழ் நிலையில் இருப்பவர்கள் போலவும் மனதில் எண்ணம் கொண்டதால் தானே இம்மாதிரியான போர்டை எடுத்து வர தைரியம் வந்தது?. என்னுடய தரப்பு வாதங்களை அவர்களிடம் ஆங்கிலத்திலேயே வைத்துவிட்டு, இவ்வளவு ஆங்கிலம் தெரிந்த எங்களால் ஆங்கில ப்ளாக் எழுத முடியாமல் இல்லை. தமிழின் மேல் இருக்கும் ஆர்வத்தினால் தான் எழுதுகிறோம். அது மட்டுமில்லாமல் வலைப்பூவில் எழுதி எழுத்தாளர்களாகவும், அதன் மூலம் வருமானமும் சம்பாதித்துக் கொண்டுதானிருக்கிறோம். எனவே உங்களுக்கு எங்கள் கண்டனங்கள் என்றேன். அவர்களும் எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு அந்த போர்டை வாபஸ் வாங்கி வருத்தம் தெரிவித்தார்கள். இதோ அந்த தட்டியின் புகைப்படம். நீங்களே பாருங்கள்.
90 சதவிகிதம் ஆங்கில ப்ளாகர்கள் உள்ள இடத்தில் நம்மைப் பற்றிய பார்வையும், அவர்கள் கொடுத்த முக்கியத்துவமும்? நட்சத்திர ஓட்டலில் உட்கார வைத்து சோறு போட்டவனிடம் சண்டைப் போட்டு தான் எதிர்ப்பை காட்டுவதா? என்று கேட்பவர்களுக்கு… தவறு செய்பவனிடம் அங்கேயே நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு சோறு போட்டான் என்பதற்காக என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை. என்னைப் பொறுத்தவரை கேட்டால் தான் கிடைக்கும் என்றால் அதை கேட்காமல் இருக்க மாட்டேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Posted by சங்கர் நாராயண் @ Cable Sankar (sankara4@gmail.com) on October 11, 2011 05:10 AM· permalink
எஸ். ராமகிருஷ்ணனின் "துயில்' நாவல் குறித்த கலந்துரையாடலுக்கான (8.10.2011 மாலை நேர) நிகழ்ச்சி ஏற்பாடுகளை டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் திரு.வேடியப்பன் செய்திருந்தார். முனைவர் இராம. குருநாதன் அவர்கள் தலைமையில் மற்றும் கூத்துப்பட்டறைச் சேர்ந்த தம்பிச்சோழன் சிறப்புரையாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது.
கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். நான் சென்றபோது தம்பிச்சோழன் நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தார். முடியும் தருவாயில் சென்றேன். கூட்டம் அதிகமாகயிருந்ததால் வசதியாக நிற்பதற்கு இடம்தேடுவதற்குள் அவர் பேசிமுடித்திருந்தார். அடுத்து எஸ்.ரா பேசினார். அவர் பேசியதன் முழு விவரத்திற்கு இங்கே சொடுக்கவும். http://www.tv.udanz.com
ரசித்த துளிகளில் என் ஞாபகத்தில் இருந்தவை மட்டும் இங்கே....
துயில் நாவலில் வரும் தெக்கூடு எனும் ஊர் உண்மையில் இல்லவே இல்லையாம். முழுக்க முழுக்க எஸ்.ரா.வின் கற்பனையாம். இதை அவர் குறிப்பிடும்போது அனைவரும் ஆச்சரியமாய் ரசித்தனர்.
துயில்- என்றால் தூக்கம். மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம். அது சரியில்லாததால்தான் பெரும்பாலான குறைபாடுகள் வருகிறது (அதை குறைபாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். நோய் என்று கூறக்கூடாது) என்றார். கிராமத்து பிள்ளைகள் எல்லாம் நன்றாக ஓடியாடி விளையாண்டு நன்றாக தூங்கும். ஆனால் நகரத்துப் பிள்ளைகளை பெற்றோர்கள் தூங்கு தூங்கு என்று சொல்- அவர்களே டயர்டாகி தூங்கிவிடுவார்கள். பெற்றோர்கள் தூங்கிவிட்ட பிறகு இதற்கு முழித்திருந்து என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து பின்பு குழந்தைகளும் தூங்கிவிடும் என்றார்.
ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தாராம். அந்த மருத்துவ மனையில் வயதான ஒருவருக்கு மருத்துவர் நன்கு விசாரித்துவிட்டு குறிப்பேட்டில் எழுதிவிட்டு சென்றாராம். அவர் சென்றபிறகு எஸ்.ராவிடம் அந்த பெரியவர், "என் மகன்தான் டாக்டர். நல்லா கவனிச்சுக்கிறான். ஆனால் என்னை கையைப் பிடித்து விசாரிக்க மாட்டேங்கிறான்'' என்றவாரு எஸ்.ராவின் கையை பிடித்துக் கொண்டாராம். வயதானவர்கள் வசதி வாய்ப்புகளைவிட தங்களை வாஞ்சையுடன் கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் கையை கொஞ்ச நேரம் பிடித்திருந்தாலே அவர்கள் ரொம்பவும் மகிழ்வார்கள் என்றார்.
விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்நாளில் உலகமே சுருங்கிவிட்டது. ஆனாலும் மருத்துவத்துறையில் மட்டும் தேக்கமடைந்திருப்பதாக வருத்தப்பட்டார். சென்னையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் வேலை விசயமாக மதுரைக்கு செல்ல நேர்ந்திருக்கும்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால், அங்கிருக்கும் மருத்தவமனையிலும் (சென்னையில் எடுத்ததுபோலவே) அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்க சொல்வார்கள். நெட்வொர்க் மூலம் அனைத்து மருத்துவமனைகளும் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தால் இந்த செலவுகள் மிச்சம்தானே என்றார். அவர்களின் சம்பாத்தியம் போய்விடும் என்பதால் இதை யாரும் செய்வதில்லை என்று வருத்தப்பட்டார்.
முன்பெல்லாம் மருத்துவரின் வீடும் மருத்துவம் செய்யுமிடமும் ஒன்றாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் கதவைத் தட்டி சிகிச்சை செய்துகொள்ள முடியும். அந்த காலத்தில் மருத்துவம் என்பது சேவையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அதை தொழிலாக்கி விட்டதால் மருத்துவமனை என்று தனியே கட்டிவிட்டார்கள். எங்கள் குடும்பமே மருத்துவ குடும்பம்தான். என் சகோதரன் வேட்டி சட்டையில்தான் எப்பொழுதும் இருப்பார். அவர் டாக்டர்தானா என்றுகூட பலரும் சந்தேகிப்பார்கள். மருந்து சீட்டையும் தமிழில்தான் எழுதுவார் என்று கூறினார். ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் வந்திருந்தவர்களின் முகத்தில் தெரிந்தது.
சித்தமருத்துவர்கள்கூட தங்களின் தொழில் ரகசியங்களை வெளியில் சொல்வதில்லை. அவர்களின் குழந்தைகளுக்குத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அத்துறையில் ஈடுபாடு இல்லையென்றால் அந்த ரகசியங்கள் அவரோடு அழிந்து போய்விடும். இப்படித்தான் பல ரகசியங்கள் அழிந்துபோய்விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.
துயில் நாவலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக சொன்னபோது-
இருக்கலாம். ஏனெனில் எழுதிய நானே படித்தால் எழுத்துப்பிழைகள் தெரியாது. வெளிநாடுகளில் பிழைதிருத்த என அனைத்து துறைபற்றியும் தெரிந்தவர்கள் இருப்பார்கள். கண்டெட்-டை (உள்ளடக்கம்) திருத்த ஒருவர். பாராகிராப் (பத்தியமைப்பு) பார்ப்பதற்கு ஒருவர் என்றிருப்பார்கள். பின்பு பதிப்பகத்தார் படித்து, மாதிரி காப்பி ரெடி செய்து எழுத்தாளருக்கு அனுப்புவார்கள். எழுத்தாளர் பார்த்துவிட்டு சரி என்றதும்தான் அச்சுக்கு அனுப்புவார்கள் என்றார். ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து துறை அறிந்த பிழைதிருத்துநர்கள் இல்லை. அதற்கான தேவை இருக்கிறது என்றார்.
Posted by குடந்தை அன்புமணி (noreply@blogger.com) on October 11, 2011 05:06 AM· permalink

படத்தின் விளம்பரத்தில் மாண்ட்ரீயல் உலக திரைப்பட விழாவிலும், லண்டன் ஏசியன் பட விழாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட படம் என்று போட்டிருந்தார்கள். எனவே படத்தின் மீது ஒரு குட்டி எதிர்பார்ப்பு இருந்தது எனக்கு. ஏனென்றால் சில நல்ல படங்கள் சத்தமேயில்லாமல் வந்து போய்விடுவது உண்டு.

மணி தன் தந்தையின் கொலைக்கு பின் தன் தாய் மாமனிடம் வளர்வதற்காக ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். தாய் மாமன் ஒரு சோக்காளி, பணக்காரன். தன்னைப் போலவே தன் மருமகனையும் வளர்க்கிறான். தாய்மாமனின் கார் ட்ரைவராய் இருக்கும் அன்வர் தான் மணியின் தந்தையை கொன்றவன் என்று தெரியாமல் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் உள்ள அத்துனை சிறு வயது பெண்களையும் ஜாதி பார்க்காமல் கை வைப்பதில் மன்னன் மாமா துரை. இதற்கிடையில் ஊரில் டீச்சராய் வேலை செய்யும் மோனிகாவுக்கும் தாய்மாமனுக்கு கல்யாணம் நிச்சயமாகிறது. டீச்சருக்கும், அன்வருக்கும் காதல். அதனால் ஊரை விட்டு ஓட முயற்சி செய்கிறார்கள். அப்போது தன் தந்தையை கொன்றவன் தான் அன்வர் என்று தெரிந்து அவனை கொல்லப் போகிறான் மணி. என்னாயிற்று என்பதுதான் கதை.

கதை என்று எடுத்துக் கொண்டால் ஜாதிப் பிரச்சனை மேட்டர் தான் என்றாலும் அதை சொன்ன விதத்தில் கொஞ்சம் வித்யாசமாய் தான் செய்திருக்கிறார்கள். அடலசண்ட் வயதிலிருக்கும் கிராமத்து பசங்களின் ஆட்டிட்டியூட். அவர்களின் பேச்சுக்கள் எல்லாவற்றையும் கொஞ்சமே நிஜத்துக்கு அருகில் வைத்ததால் இண்ட்ரஸ்டாக இருக்கிறது. அதே போல அந்த முனி கதையும், அந்த பாடலும். அதை வைத்து ஊர் எல்லை முனி கோவிலில் யாரும் போனதில்லை என்ற பில்டப். அதன் பின்னணியில் நடக்கும் விஷய்ம் எல்லாம் சுவாரஸ்யம்தான்.

மோனிகாதான் டீச்சர். படு பாந்தமாய் அழகாய் இருக்கிறார். அன்வருடன் காதல் செய்யும் காட்சியில் மிக அழகாய் எக்ஸ்ப்ளாயிட் செய்திருக்கிறார். நல்ல நடிக்க தெரிந்த நடிகையாய் இருப்பதால் பாவம் பெரிய வாய்ப்பில்லாமல் இருக்கிறார். அதே சீனுவாக நடித்த அந்த பையன். தந்தையை கொன்றவன் மேல் இருக்கும் வஞ்சம், தனிமையாய் உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு அதை முரட்டுதனமாய் வெளிப்படுத்துவது, என்றிருப்பவனுக்குள் இருக்கும் படம் வரையும் திறமையும், அதனால் அவனுக்குக்ம் கீழ் ஜாதி பெண்ணுக்கு வரும் காதல் நன்றாகவேயிருக்கிறது. டீச்சருக்கும் அன்வருக்மான உடலுறவு காட்சியை பார்த்தபின் அவனுக்கு இருக்கும் குழப்பத்தையும், அதை வெளீயே சொல்லாமல் இருந்தபடி மென்று விழுங்குவதும் நல்ல நடிப்புக்கு சான்று. தாய் மாமன் துரையாய் சம்பத்துக்கு ஏற்ற கேரக்டர். மனுஷன் அருமையாய் செய்திருக்கிறார். கீழ் ஜாதிப்பெண் தங்கமாய் வரும் அஸ்வதாவின் நடிப்பும் அவரின் அந்த தயங்கிய பார்வையும் செம க்யூட்.

கிருஷ்ணா டாவின்ஸி உட்பட நிறைய ஆட்கள் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ஐசக் கொடுக்காப்புளி இசையமைத்திருக்கிறார். ஓரிரு பாடல்கள் கேட்கும் வண்ணம் இருக்கிறது.முக்கியமாய் அநத முனி கதை பாடலை சொல்லலாம். பிரேம் குமாரின் ஒளிப்பதிவு பற்றிச் சொல்ல பெரிதாய் ஏதுமில்லை.
இயக்கியிருப்பவர் எஸ்.என். ராஜு. பழயனூர் நீலீக் கதைப் போல ஒரு முனிக்கதையை ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார்கள். அதை வைத்து பின்னால் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்ததில் எதிர்ப்பார்ப்பு மட்டுமே மிச்சம்.ஆங்காங்கே வரும் பாடல்கள் பெரிய இடர். மணிக்கும் தங்கத்திற்குமான அடலசண்ட் காதல் க்யூட். அதே போல தங்கத்தை மணியின் மாமா சிதைத்ததும், அதைக் கேட்டு மணி செய்வதறியாமல் இருப்பதும், க்ளைமாக்ஸில் அந்தக் கோபத்தை வெளிபடுத்தி பேசும் வசனமும் ஷார்ப். நடுநடுவே ஜாதிப் பெயரை ம்யூட் செய்து ஏதோ சொல்கிறார்கள். கீழ் ஜாதிக்காரனின் வாயில் ஒண்ணுக்கடித்து, மலத்தை கரைத்து ஊற்றுகிறார்கள். வர்ணம் என்கிற டைட்டிலுக்கு சரியான காட்சிகளாய் இருந்தாலும் கொஞ்சம் ஒட்டாமலேயே ஓடுகிறது. அதே போல மணி அப்பா சாகும் காட்சி. அவர் இறந்தது ஒரு விபத்தில் என்பதை விவரிக்கும் அந்த நிகழ்வு நம்ப முடியாமல் இருக்கிறது. கொஞ்சமே கொஞ்சம் கவனமாய் செய்திருந்தால் நிச்சயம் ஒரு மலையாள க்ளாஸிக் பட வரிசை படம் போல தமிழிலும் கிடைத்திருக்கும்.
வர்ணம் – வாட்டர் கலர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Posted by சங்கர் நாராயண் @ Cable Sankar (sankara4@gmail.com) on October 11, 2011 05:04 AM· permalink
ஒரு நாளைக்கு பத்து பேராவது வருகிறார்கள். மேயர் வேட்பாளர், கவுன்சிலர் என்று. யார் எந்தக் கட்சி என்று புரியவேயில்லை. பெரும்பாலான தேர்தல்களில் இவர்களை ஏதாவது ஒரு கட்சியின் பின்னால் இருந்து பார்த்தாகிவிட்டதால் இவர்கள் நேரில் வரும் போது கொஞ்சம அப்ரசண்டித்தனம் தெரிகிறது. நம் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்த வேட்பாளரின் கட்சியை தெரிந்து கொண்டே மாற்றி மாற்றி கட்சி பெயர் கேட்டார். பின்னர் வழக்கமாய் இரண்டு பேருக்கு ஓட்டுப் போட்டு என்னத்த கண்டோம்? இந்த வாட்டி உங்களுக்கு போடறேன் என்று சொன்னதும் சந்தோஷமாய் கிளம்பிய வேட்பாளரின் கடைசி தொண்டன், “சார்.. இந்த வாட்டி நம்மளுக்கு போட்டுப் பாருங்க.அப்புறம் தெரியும்” என்றவுடன், நம் நண்பர் “ என்ன இப்ப நீங்க ஓட்டு கேட்டு எங்க வீட்டுக்கு வர்றீங்க.. அப்புறம் எங்களை உங்க ஆபீஸுக்கு அலைய விடுவீங்க அவ்வளவுதானே. இது எவன் வந்தாலும் மாறாது” என்றாராம். அந்த தொண்டர் எதுவும் பேசாமல் வெளியே போய் விட்டாராம். போனது பெரிதில்லை. ரோட்டிற்குப் போய் தனியாய் சிரித்துக் கொண்டிருந்தாராம்.நிஜம் சிரிக்கிறது.இம்மாதிரியான நேரங்களில் இவர்களை கலாய்ப்பது சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.
#######################################
தேர்தல் சூடுதேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தமிழகம், குஜராத் போல வளர்ச்சியடைந்த மாநிலமாய் மாற்றப்படும்- பிரமலதா விஜயகாந்தஇதை ஏன் உங்க கூட்டணிக் கட்சியோட சேர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கக்கூடாது?இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு நீங்கள் என்னத்தை கண்டீர்கள்? தேமுதிக தலைவர் விஜயகாந்தமூணு மாசத்துக்கு முன்னாடி தெரியலையா?உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். - டாக்டர் அய்யா..
சொல்லிட்டேயிருக்கீகளே.. இப்பவே பூட்டுனா உங்கள் யாராவது தடுக்கிறாய்ங்களா என்ன?#################################################எஸ்.ஆர்.எம். சிவாஜி பிலிம் இன்ஸ்டிடியூட் சார்பாக தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் விழாவுக்கு போயிருந்தேன். வைரமுத்து அழைப்பிதழில் தன் போட்டோவை போடாமல் விட்டதற்காக தமிழுக்கே அவமானம் என்று கொதித்துவிட்டு போயிருந்தார். எல்லார் போடோவையும் போட்டு விட்டு அவர் போட்டோவை போடாதது தமிழுக்கு இழுக்குத்தான் .அநியாயமாய் ராத்திரி பத்து மணிக்கு நிகழ்ச்சியை முடித்தார்கள். வந்திருந்த கலைஞர்கள் எல்லாருமே விருதை வாங்கினோமா? எஸ்கேப் ஆனோமா? என்று ஸ்டாப் ப்ளாக்கில் காணாமல் போனது படு சுவாரஸ்யம். இந்நிகழ்ச்சியை கவர் செய்ய புதிய தலைமுறையிலிருந்து ஆள் வராததை மறைமுகமாய் பச்சை முத்து சுட்டிக் காட்டினார். வெற்றி மாறன் ஒரே வார்த்தையில் நன்றி சொல்லிவிட்டுப் போனார். பெரிதான சுவாரஸ்யம் ஏதுமில்லா ஒரு விழா. விழா முடிந்து நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்த போது Zifo technologies கம்பெனியின் சேர்மன், மேனேஜிங் டைரக்டர் ராஜ் பிரகாஷ், என்னை அடையாளம் கண்டு ஒரு பத்து நிமிடம் என் வலைப்பூவைப் பற்றியும், தன் அலுவலகத்தில் எல்லோரும் படிக்கும் ஆர்.எஸ்.எஸ்.பீட் உங்களுடயதுதான் என்று பாராட்டிவிட்டு அவரின் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஒரு நாள் போக வேண்டும்.
#############################################
சென்ற அரசு செய்த இன்னொரு விஷயத்தை மீண்டும் தன் ஈகோவினால் புஸ்வாணமாக்கியிருக்கிறார்கள். அதாவது அரசுக்கு சொந்தமான உட்லான்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இடத்தை அரசு கையகப்படுத்தி அதை சென்ற அரசு செம்மொழி பூங்காவாக மாற்றியது. ஆட்சி மாறியவுடன் நிச்சயம் அந்த பூங்கா சீரழிந்து போய்விடும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்போது அந்த நிலம் அரசுக்கே சொந்தமானது கிடையாது என்று மீண்டும் அந்த ஹார்ட்டி கல்சர் சொசைட்டிக்கு திரும்பக் கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது அரசு. என்ன கொடுமைடா சாமி?
##################################################
சதுரங்கம் சிறப்பு திரையிடலுக்கு நம் ப்ளாக்கர்களுடன், நிறைய பேஸ்புக் நண்பர்களும் வந்திருந்தார்கள். டீஸெண்டான கூட்டம். நண்பர் கரு.பழனியப்பனின் வசனத்தை பற்றி ஆளாளுக்கு புகழ்ந்து கொண்டிருந்தார்கள். எனக்கு அவரின் பட வசனங்களை விட அவர் சாதாரணமாய் பேசும் போது சொல்லும் விஷயங்கள் ரொம்ப பிடிக்கும். அவருடன் வேறொரு சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசும் வாய்ப்பிருந்த போது அவரின் பேச்சை ரசித்திருக்கிறேன். இம்முறையும் அவரின் உதவியாளர் அமல்ராஜை அடையாளம் கண்டுபிடிப்பதில் தோற்றுப் போனேன். மனுஷன் ஒவ்வொரு முறையும் ஒரு கெட்டப்பில் வருகிறார்.
###########################################
அறிவிப்புஇன்று மாலை 6.30 மணிக்கு, ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள ப்ரிவியு தியேட்டரில் “வர்ணம்” திரைப்பட சிறப்பு காட்சி நம் பதிவர்களுக்காக திரையிடப்படுகிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்து கண்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
#########################################
வருகிற தீபாவளி வெளியீட்டுக்கு இரண்டு படங்களுக்கு பெரும் போட்டியிருக்கிறது. நான் எழுதியிருந்தது போல இருக்கிற ஆயிரத்து சொச்ச தியேட்டர்களில் எவ்வளவு தியேட்டர்களை தங்கள் படத்தை திரையிடுவது என்ற போட்டி அதிகமாகவேயிருக்கிறது. ஒரு புறம் உதயநிதி ஸ்டாலின் படம். இன்னொரு புறம் அவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காத ஆஸ்கர் ரவிச்சந்திரனின் படம். இருக்கிற மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் எல்லாவற்றிலும் ஆளுக்கு மூணு என்கிற விகிதத்தில் பிடித்துப் போட்டிருக்கிறார்கள். ஆனால் மற்ற ஊர் தியேட்டர்களில் தியேட்டர்காரர்களின் பெரும் எதிர்பார்ப்பு சூர்யாவின் ஏழாம் அறிவிற்கே இருப்பதால் பெரிய அளவு எம்ஜியை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். பார்ப்போம்...
############################################
பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் http://udanz.com உலக அளவில் அலெக்ஸா ரேங்கிங்கில் ஒரு லட்சத்திற்குள் வர சில ஆயிரங்களே உள்ளது.
யுடான்ஸ் டிவியில் ஒலிப்பரப்பான நேரடி நிகழ்ச்சிகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
யுடான்ஸ் - ஆதி - பரிசல் சவால் சிறுகதை போட்டிக்கு உங்கள் கதைகளை அனுப்பி விட்டீர்களா?
##########################################
தத்துவம்U Will Never Get a Second chance to Make a first Impression. So Remember the 1st Impression can only give you the 2nd chance.
எப்படி காதலிப்பது? அப்படின்னு புக்கு போட்டவன் எப்படி மறக்கறதுன்னு புக் போடலியே? அது ஏன்?
வாழ்க்கையில் கோபத்திற்கு Mute பட்டனும், தவறுகளுக்கு Back பட்டனும், கஷ்ட காலத்திற்கு Fast Forward பட்டனும், நல்ல நேரங்களுக்கு Pause பட்டனும் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்.
##########################################
ப்ளாஷ்பேக்
சில படங்களில் அற்புதமான பாடல்கள் அமைந்திருக்கும் . ஆனால் படம் ஓடாததால் அப்பாடல்கள் நம்மிடையே பிரபலமாகாமல் போய்விடும். அப்படி இளையராஜாவின் இசையில் வெளியான எவ்வளோ படங்களில் அற்புதமான பாடல்களை ராஜா அளித்துள்ளார். அந்த வரிசையில் இந்த கோயில்புறா படத்தில் எல்லாப் பாடல்களும் கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்த பாடல்கள் ஆகும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் க்ளாசிக்.. கேட்டுப் பாருங்கள் சும்மா ஒரு இசையெனும் போதையில் எழுந்த வந்த உணர்வு ரிப்ரெஷிங்காக இருக்கும்.என்னா பாட்டுடா?
#################################################
அடல்ட் கார்னர்நடு ராத்திரியில் பெற்றோர்களின் அறைக்குள் நுழைந்த சிறுவன் அவர்கள் இருந்த கோலத்தை பார்த்ததும் அதிர்ச்சியாகி அம்மாவை பார்த்து கோபமாய் கேட்டான். ‘நான் மட்டும் விரல் சூப்பினா திட்டுறே?”
Posted by சங்கர் நாராயண் @ Cable Sankar (sankara4@gmail.com) on October 11, 2011 05:04 AM· permalink
Posted by Badri (noreply@blogger.com) on October 11, 2011 03:48 AM· permalink
குடும்பம்
வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் செய்தபிறகு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அம்மா அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்கள்..கேட்க கேட்க ஒருபுறம் மிக அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்வுகள் அனைத்தையும் அருகிலிருந்து பார்ப்பதற்க்கோ கேட்பதற்க்கோ தவறுவதை நினைத்து மறு புறம் வருத்தமாகவே இருக்கிறது..ஆனாலும் திருமண நிகழ்வையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் குறைவில்லை..!
அம்மாவும் அப்பாவும் இத்திருமணத்தினால் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் அவர்கள் தங்களுக்குள் செய்துகொள்ளும் கிண்டல் கேலிகளை என்னிடம் பகிர்ந்துகொள்ளும் தொணியிலே தெரிந்துவிட்டது..ஆனால் இருவருக்கும் திருமணத்திற்க்கு பிறகு நான் அவர்களை விட்டு பிரிந்துவிடுவேனோ என்ற பயமும் வந்திருப்பது அவர்களின் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது..நான் அப்படியெல்லாம் உங்களை விட்டு போக மாட்டேன் என்பது போன்ற மறைமுக உத்திரவாதம் அளிக்கும்பொழுதுதான் ஓரளவு மனதிருப்தியடைகிறார்கள்..! நானிருக்க பயமேன்?
மிஸஸ்..வசந்த்
இவங்களைப்பற்றி என்ன கூறுவது ? சின்ன சின்ன கவிதைகளும் கதைகளும் கூறும்பொழுது சிரிப்பார், சில சமயம் நான் சொன்ன எளிய கவிதைகளுக்கு இரண்டு மணி நேர விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது..ஆரம்பத்தில் பேசுவதற்க்கு மிகவும் கூச்சப்பட்டவர்கள் நாளாக நாளாக பேசுவதில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்திருக்கிறார்,விளைவு சென்ற மாத சம்பளத்தில் பாதி தொலைபேசி பில் தின்று தீர்த்துவிட்டது, ஒன்றைப்பெற மற்றொன்றை இழக்கத்தானே வேண்டும் ஆதலால் அதுபற்றியெல்லாம் இப்பொழுது கவலையில்லை என்னை பொறுத்தமட்டிலும் என் அளவுக்கு சரிசமமாக பேசவோ என்னை கிண்டல் செய்யும் அளவிற்க்கோ கொண்டுவந்துவிட்டு விடவேண்டும் அவ்வளவுதான்.. கிட்டத்தட்ட பேச ஆரம்பித்து ஒருமாத காலம் ஆகியிருக்கும் நிலையில் ஒரு கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்கள்..
''இதயம் துடிப்பதற்க்கு மறக்கலாம்ஞாபகங்கள் மனதிலிருந்து விலகலாம்
பாலைவனம் கூட நதியாக மாறலாம்
உன் முகம் என் கண் முன் தோன்றும்போது வரும்
புன்னகையை எதனாலும் தடுக்க முடியவில்லை..!'' - ஜோ
இதுதான் அவர்கள் எனக்கு எழுதிய முதல் கவிதை.. கவிஞி இருக்க பயமேன்?
வேலை
திருமணம் பேசுவதற்க்கு முன்பே எடுத்த முடிவுதான் , திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில்தான் பணிபுரியவேண்டுமென்று ஆதலால் பணியை ராஜினாமா செய்ய இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் நான்கு வருடங்களாக என்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இதுவரை காட்டிவந்த அந்நியோன்யத்தை குறைக்க ஆரம்பித்திருக்கிறேன்,ஏனென்றால் அவர்களைவிட்டு பிரியும்பொழுது என்னால் அவர்களோ ,அவர்களால் நானோ வருத்தமடைந்துவிடக்கூடாது என்பதனால் சிறிது விலகியே இருக்கிறேன்...அதற்க்கு முன் இங்கு இதுவரை வாங்கிய நற்பெயரால் என்னுடைய ராஜினாமாவை நூறுசதவீதம் ஏற்கமாட்டார்கள் கிட்டதட்ட நான்கைந்து மேலதிகாரிகளை பேசி சம்மதிக்கவைக்க வேண்டும் அவர்களை எப்படியெல்லாம் சொல்லி சம்மதிக்க வைப்பது என்பதில்தான் இப்பொழுது ஒரே சிந்தனையாய் இருக்கிறது. திருமண நாள் குறித்து திருமண மஹால் முன்பதிவு செய்தாகிவிட்டது பிரச்சினை எதுவும் இல்லாமல் அவர்கள் என்னை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் இறைவா என்பதும் தின வேண்டுதலாகிவிட்டது.திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்பதால் இந்தியாவில் இருக்கும் நல்ல கம்பெனிகளுக்கு விண்ணப்பங்கள் அளித்து காத்திருக்கிறேன் பார்க்கலாம்..திறமையிருக்க பயமேன்..?
உடல் நிலை..
இப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று மணி நேரம் கணிணியை பார்த்தாலே கண் சிவந்து தூக்கம் வந்துவிடுகிறது அல்லது கண் எரிய ஆரம்பித்துவிடுகிறது கணிணியை ஆன் பண்ணியபடி ஷட்டவுன் செய்யாமலே தூங்கிவிடுகிறேன்..முடிந்தவரையில் கணிணியை தவிர்க்க முயற்சித்துவருகிறேன் ஊருக்கு சென்றுதான் நல்ல கண் மருத்துவரை கலந்தாலோசித்து கண்ணை காக்கவேண்டும்..
காதிலோ மூக்கிலோ மயிருள்ளவர்களை பார்த்தால் எனக்கு ஒருவிதமான முகச்சுளிப்பு ஏற்படும் இப்பொழுது எனக்கும் காதில் நீண்ட மயிர் முளைக்க ஆரம்பித்திருக்கிறது எது நமக்கு வேண்டாமென்று விலகுகிறோமோ அதுதான் நம்மை ப்ரியத்துடன் ஆட்கொள்கிறது என்ன செய்ய? கத்தரிக்கோல் இருக்க பயமேன்? கட் த மயிர்..மயிரைப்போலவே பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ உள்ள நட்புகளையும், உறவுகளையும் வெட்டிவிட புதுவித கத்தரிக்கோல் இருந்தால் தேவலாம்..!சுபம்..!
Posted by ப்ரியமுடன் வசந்த் (vasanth1717@gmail.com) on October 11, 2011 02:19 AM· permalink

எப்போதும்
சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்
காலைஉணவை மறந்ததில் வந்த
களைப்பானாலும்
காய்ச்சலில் கிடக்கும் குழந்தையின்
நினைப்பானாலும்
காரணமேயின்றி மேலாளர்
சீறினாலும்
வாடிக்கையாளர் வரம்புமீறிப்
பேசினாலும்
வாட்டமிலா
சற்றுங்கோணா
முகங்காட்ட வேண்டும்
இயந்திரத்தனமாய் இன்றி
சிந்தும் புன்னகை
இயல்பாய் இருந்து தொலைக்க
தூங்கும் போது கனவில் சுமந்தும்
போகுமிடமெங்கும் ஏந்தித் திரிந்தும்
பழக வேண்டும்
தசைகளை
இழுத்துத் தைத்துக் கொண்டால்
தேவலாமெனும் சிந்தனை
தந்த சிரிப்புடன் கிளம்பிய
ஒரு காலையில்..
திசைமாறி வீசிய பருவக்காற்று
திரட்டி வந்த கருமேகங்கள்
தூறலைப் பெரிய பெரிய பொட்டாகச்
சாலையில் எட்டி எட்டிப் போட
அண்ணாந்து ஆகாயம் பார்த்தவள்
பொறாமையுடன் புன்னகைக்கிறாள்
இதயம் வெடித்து விடாதிருக்க
இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.
***
செப்டம்பர் 30, 2011 பண்புடன் இணைய இதழில்.., நன்றி பண்புடன்!
படம்: படைப்புடன் வெளியானது.
Posted by ராமலக்ஷ்மி (noreply@blogger.com) on October 11, 2011 01:45 AM· permalink
வரலாற்று நாயகர்கள் (பாகம் - 1) மின்புத்தக வடிவில்! தரவிறக்க
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக வரலாற்றில் தனது பங்களிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது ஆஸ்திரியா. தங்கள் தேசத்தை சேர்ந்த பலர் உலகப் புகழ் பெற்றிருக்கின்றனர் என்பதையும், அவர்களின் உடல்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் உணர்ந்த ஆஸ்திரியர்கள் அவர்கள் எல்லோரையும் வியன்னாவின் மையப்புற இடுகாட்டில் மறு அடக்கம் செய்ய விரும்பினர். 'grave of honor' என்ற ஒரு பகுதியை ஒதுக்கி வியன்னாவின் புகழை உலகெல்லாம் பரவச்செய்த வரலாற்று நாயகர்களின் மிச்சங்களை அங்கு மறு அடக்கம் செய்தனர். ஆண்டுதோறும் வியன்னாவுக்கு செல்லும் பல்லாயிரக் கணக்கானோர் 'grave of honor' என்ற அந்த சமாதிக்கு செல்ல தவறியதில்லை. ஒரு குறிப்பிட்ட கல்லறைக்கு முன் நின்று மரியாதை செலுத்தாமல் போவதில்லை. அந்தக் கல்லறையிலும் வரலாற்று ஏடுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் பீத்தோவன். இசைமேதை மோட்ஸார்ட் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து அவருடைய பாராட்டையும் பெற்று தனது இசையால் உலகையே வசீகரித்த உன்னத இசைக் கலைஞன் பீத்தோவன். 1770 ஆம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி ஜெர்மனியின் பான் நகரில் பிறந்தார் லுட்விக் வான் பீத்தோவன். அவரது தாத்தாவும், தந்தையும் இசைக் கலைஞர்கள் தந்தை மதுவுக்கு அடிமையானவர் என்றாலும் பீத்தோவனின் இசைத் திறமையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து ஊக்கமூட்டினார். ஜெர்மனியில் சிறு வயதிலேயே 'நீஃப்' என்ற இசைக் கலைஞரிடம் பியானோ இசைக்கக் கற்றுக் கொண்டார் பீத்தோவன். பனிரெண்டு வயதிலேயே அவர் இசைக்கூறுகளை வடிக்கத் தொடங்கினார்.
அவரது இசைத் திறமை அனைவருக்கும் தெரியவர பதினேழாவது இசைக் கச்சேரி நிகழ்த்த வியன்னா சென்றார். அங்கு பதினான்கு வயது மூத்தவரான மோட்ஸார்ட்டுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நிகழ்த்தி மொஸார்ட்டின் பாராட்டையும் பெற்றார். அப்போது முதல் மோட்ஸார்ட்டும், பீத்தோவனும் இணைந்து பணியாற்றியிருக்கக்கூடும் ஆனால் தாயாருக்கு நோய்வாய்ப் படவே பான் நகர் திரும்பினார் பீத்தோவன். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர் மீண்டும் வியன்னாவுக்கு வர முடிந்தது. அதற்குள் மோட்ஸார்ட் இயற்கை எய்தியிருந்தார். அந்த இரு இசை மேதைகளையும் ஒன்றாக இணைந்து பணியாற்ற இயற்கை அனுமதித்திருந்தால் இன்னும் பல இசை அதிசயங்களை உலகம் சந்தித்திருக்கக்கூடும். ஜெர்மனியில் பிறந்திருந்தாலும் ஆஸ்திரியர்கள் நல்ல புரவலர்களாக இருந்ததால் வியன்னாவில் குடியேறினார் பீத்தோவன். செல்வந்தர்கள் அவரை தத்தெடுத்துக் கொள்ள போட்டி போட்டனர். அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். தந்தையிடம் இருந்த குடிப்பழக்கம் அவரிடம் இல்லாவிட்டாலும் வேறு சில கெட்ட குணங்கள் இருந்தன. நேரம் தவறாமையை அவர் கடைப்பிடித்ததில்லை, எளிதில் ஆத்திரமடைவார் எரிச்சலடைவார், பார்ப்பதற்கு தூய்மையாகவும் இருக்க மாட்டார். ஆனால் பியானோவில் அவர் நிகழ்த்திய அதிசயங்களால் அந்தப் பிழைகள் பெரிதாகப் படவில்லை.
பீத்தோவனை உலகம் வியந்து போற்ற ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆரம்பத்தில் எந்த குறைபாடும் இல்லாத அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறன் குறைந்து கொண்டே போய் பின்னர் முற்றிலுமாக காது கேளாமல் போனது. தன் குறைபாட்டை நினைத்து மிகவும் நொந்துபோன பீத்தோவன் தற்கொலைக்குகூட முயன்றிருக்கிறார் என்பது வரலாற்று உண்மை. கண் தெரியாத ஒருவர் அழகான ஓவியம் தீட்ட முடியும் என்பதை எப்படி நம் மூளையால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல்தான் காது கேளாத ஒருவரால் அற்புத இசையை பிரசவிக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இசைக்குத் தேவையான புலனே செவிகள்தானே! ஆனால் அதைத்தான் செய்து காட்டினார் அந்த அதிசய மனிதன். ஆம் முழுமையான நிசப்த உலகில் வாழ்ந்து கொண்டே பல அமர படைப்புகளை உருவாக்கினார் பீத்தோவன். பீத்தோவனின் பெயர் சொல்லும் இசைப் படைப்புகள் யாவுமே அவர் கேட்கும் சக்தியை இழந்த பிறகு உருவானவை என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மெய்ப்பிக்கின்றன.
தான் கேட்டு ரசிக்க முடியாத நிலையில் அவரால் எப்படி மகிழ்ச்சி, காதல், சோகம், வேதனை, விரக்தி, வீரியம், அச்சம், பக்தி, ஹாஸ்யம், எழுச்சி, என பல்வேறு பரிமாணங்களை தன் இசையில் வெளிக்கொணர முடிந்தது என்பதுதான் வரலாற்றுக்குகூட புரியாத புதிராக இருக்கிறது. உலகையே தனது இசையை காதலிக்கச் செய்த அவர் தன் வாழ்நாளில் சில பெண்களை காதலித்தார். ஆனால் ஒரு காதல்கூட கைகூடவில்லை. கடைசி வரை அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது சோர்ந்து போயிருந்த ஐரோப்பியர்களுக்கு எழுச்சியூட்ட உலகப் புகழ்பெற்ற BBC எனப்படும் பிரிட்டிஷ் ஒளிப்பரப்புக் கழகம் என்ன செய்தது தெரியுமா? பீத்தோவனின் எழுச்சியூட்டும் 5th சிம்பொனி எனப்படும் இசைக்கூறின் ஒரு பகுதியை தனது செய்திகளுக்கும், அறிவுப்புகளுக்கும் முன் ஒளிப்பரப்பியது.
(பீத்தோவன் - 5th சிம்பொனி)
இந்த இசையை கேட்ட போதெல்லாம் நலிந்திருந்த தேசமே புத்துயிர் பெற்றனர் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். காது கேளாமல் போனதிலிருந்து மேலும் 25 ஆண்டுகள் வாழ்ந்து 1827 ஆம் ஆண்டு மார்ச் 26ந்தேதி தனது 56 ஆவது வயதில் காலமானார் பீத்தோவன். தன் உடற்குறை காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் அவர் வெற்றி பெற்றிருந்தால் இசை உலகம் தோற்று போயிருக்கும் வரலாறும் அவரை மறந்து போயிருக்கும். ஆனால் அவர் மறைந்தபோது பத்தாயிரம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். வீட்டிலிருந்து தேவாலயம் சுமார் ஆயிரம் அடி தொலைவில்தான் இருந்தாலும் கூட்ட நெரிசலால் அவரது இறுதிப் பயணம் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாம்.
காது கேளாமல் போனபோது தன்னம்பிக்கையின் அடி மட்டத்தைத் தொட்டாலும் ஒரு கால் நூற்றாண்டு உதாரண வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் பீத்தோவன். இயற்கை வரம் தர மறுத்தாலும் திறமையான கரமே அவருக்கு வரமாக பட்டது அதன் மூலம் அவர் விரும்பிய வானமும் வசப்பட்டது. நாமும் நம்மிடம் உள்ள குறைகளை எண்ணி துவண்டு கிடக்காமல் திறமைகளைத் தேடி புடம் போட்டுக்கொண்டால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்
Posted by மாணவன் (simbuthirukkonam@gmail.com) on October 11, 2011 12:29 AM· permalink
வேலன்:-வார்த்தைக்கு ஏற்றவாறு எக்ஸெல் செல்அளவை அதிகப்படுத்தசிலநேரங்களில் நாம் எக்ஸெல்லில் பணிபுரிகையில் சில வார்த்தைகள் எக்ஸெல் செல்லைவிட அதிகமாக சென்றுவிடும்.சில மாறுதல்கள் நாம் எக்ஸெலில் செய்வதன் மூலம் நாம் செல்லுக்குள் டெக்ஸ்ட் வருமாற அமைத்துவிடலாம். அதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.;முதலில் எந்த வார்த்தையை செல்லில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அதனை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். நான்


Posted by வேலன். (noreply@blogger.com) on October 10, 2011 05:42 PM· permalink
Posted by சந்ரு (shanthruslbc@gmail.com) on October 10, 2011 05:34 PM· permalink
அப்பிடி ஒண்டும் வெட்டிப் புடுங்கலை ஆனால் தலை வெடிக்குது. போதாமல் இருக்கிற நேரம். நேர முகாமைத்துவம் எண்டு பெரியாள் மாதிரிக் கதைக்கிற நானா இப்பிடி? புதுசா சேர்ந்திருக்கிற வேலை. இன்னும் ஒரு இடத்துக்கு வரலை உடல் மனசு எல்லாம்தான். அழகான கற்பனைகள் விதண்டாவாதங்கள் குறைஞ்சு போகுது. வயது வர வர இப்பிடித்தானோ. என்னை எப்படா கட்டி முடிக்கப் போறீங்கள் என்று எங்களைப் பார்த்து ஏக்கமாய் கேட்கிற எங்கட நூல் நிலையம். இப்ப எல்லாம் அந்த கனவுக் கட்டடம் என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி ஒரு தோற்றப்பாடு. சுத்தி சுத்தி படமெடுக்க, பொறடா என்னை அம்மணமா போட்டோ எடுக்கதடா எண்டு சொல்றவள் இப்ப?????
போட்டோ மட்டுந்தான் உன்னால எடுக்கேலும். போட்டோவை எடுப்பாய் facebook இல போட்டு சும்மா நாலு வரி எழுதுவாய் அவளவுதான். ஒரு பக்கம் ஒண்டு வச்சிருகிராய் இப்ப அதக் கவனிக்க உனக்குப் பஞ்சி என்னடா என்று கேட்கிறாள் . நீங்கள் தொடங்கிப் போட்டு அரைகுறை உடையோட நிக்கிறதப் போல என்னை நிப்பாட்டி வச்சிருக்க, ஏன் உந்த வடிவான காசுள்ள பிள்ளைய இன்னும் ஒருத்தருக்கும் கட்டிக் குடுக்கலை? வேற ஈதும் சிக்கலோ எண்டு கேட்கிற மாதிரி உங்கட நிர்வாகத்தையும் கேட்கப் போறாங்கள் எண்டு சொன்னது போல இருந்தது கடைசியா படம் எடுத்தப்ப.
வளர வளரப் படம் எடுத்து அழகு பார்த்த நாங்கள் வளாந்தாப் பிறகு கணக்கில எடுக்காம இருக்கிறது உண்மையா வடிவா இல்லை. .
கடைசியா சொல்றன் ஒரு contractor ஒருத்தனிட்ட என்ன விடுங்கோ. கால எல்லை ஒண்டை குடுங்கோ. அதுக்குள்ளே முடிக்காமல் விட்டால் ஒவ்வொரு நாள் பிந்திறதுக்கும் ஒரு பொருத்தமான தொகையை களிக்கிறது எண்ட மாதிரி செய்தா நல்லம். இல்லாட்டி உங்களால ஏலாது. எத்தினை நாளுக்கு மேசன் வீட்டை விடிய போய்க் காவல் நிக்கிறது. அதுக்குள்ளே சன்னல் நிலையை ஓடர் குடுங்கோ. காசை வச்சுக் கொண்டு என்ன வட்டியையே பெருக்கிறீங்கள்? கடைசியா கனவில வந்து சொன்னது இப்பிடித்தான் .
Posted by பனையூரான் (panaiyooraan@gmail.com) on October 10, 2011 04:21 PM· permalink
அலார அலரலுடன்
அவசர விழிப்பு அன்றாடம்.
எட்டு மணிக்குள்
வேலை துவக்கம் - என
மூளைக்குள்
எட்டி உதைக்கும்
மணிமுள் ஓசை.
இங்கு எழுத
கை கூசும்
மேற்பார்வையாளனின்
வசீகர வசைகள்,
சுற்றங்களின்
குற்றங்களை
கொட்டி குமையும்
நடப்புக்கால நண்பர்கள்,
தாய்நாட்டு
நாணய மதிப்பை
ஒப்பிட்டு உணர்ந்து
உலர்த்தி கிடத்தும்
உயிரூக்கி நாளங்கள்,
தொலை தேசத்திலிருந்து
தொலைபேசி உரையாடலில்
துணையாளுடன்
துவளும் தாம்பத்யம்!
இப்படியாக...
துறவறத்துடன் கழிகிறது
பொழுதுகளும், இரவுகளும்!
ஒருபுறம்
காலை நேர
நிழலாய் தேயும்
இளமை,
மறுபுறம்
மாலை நேர
நிழலாய் நீளும்
பணத்தேவை
இடையில் சிக்கி ஊசலாடும்
மடமக்களைக் கண்டு
கெக்களித்துச் சிரிக்கிறது
வெள்ளிப் பணம்!
இப்படியே தொலைந்திடுமோ
வாழ்வு தினம் தினம்...!!!?
Posted by சத்ரியன் (ramheartkannan@gmail.com) on October 10, 2011 12:45 PM· permalink
நண்பர்களே இன்டிப்ளாக்கரின் 2வது கலந்துரையாடல் சென்னையில் Hyatt Residency
Hotel ல் கோலகலமாக நடந்து முடிந்தது. அங்கு என் கேமரா மொபைல் மூலம்
எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
தமிழ்பதிவர்கள் ஜாக்கிசேகர், அடலேறு, கேபிள்ஷங்கர், அதிஷா, யுவகிருஷ்ணா, வலைமனை சுகுமார் சுவாமிநாதன் போன்ற பல பதிவுலக ஜாம்பாவான்கள் மத்தியில் நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெருமையாக இருக்கிறது.
நல்ல மாலை உணவும்
Posted by Vadivelan R (giblogs@gmail.com) on October 10, 2011 06:54 AM· permalink
இத்தனை வருடங்கள் கழித்து வெளியாகியிருந்தாலும் ‘சதுரங்கம்’ காண விரும்பியதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று : அறிவுமதி எழுதிய ‘விழியும் விழியும் நெருங்கும்பொழுது’ பாடல்.
இரண்டு : நாயகன் ஒரு செய்தியாளன் என்று கேள்விப்பட்டதால்.
ஏற்கனவே ‘கோ’ குறித்து எழுதியிருந்தோம். பத்திரிகைத்துறை பணிகளை மிகைப்படுத்தி, ஃபேண்டஸைஸ் செய்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருந்தோம். நல்லவேளையாக கரு.பழனியப்பன், ஓரளவுக்கு பத்திரிகை அலுவலகத்தை சரியாகவே காட்ட முயற்சித்திருக்கிறார். குறிப்பாக ‘போஸ்டரில் என்ன போடுவது?’ என்று ஒருவர் நாயகனிடம் ஆலோசனை கேட்பதும், அதற்கு அவர் சொல்லும் பதிலும் அட்டகாசம்.
இருப்பினும் அவர் பத்திரிகையாளராக இருந்தும் சில விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார். நாளிதழின் மூன்றாவது பக்கத்தை வாசகர்கள் யாரும் வாசிக்கமாட்டார்கள் என்கிறமாதிரி காட்சியமைப்புகள் இருக்கிறது. படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் விஷயம் இது.
மூன்றாவது பக்கத்தை ‘செகண்ட் ஃப்ரண்ட் பேஜ்’ என்பார்கள். வலதுபுற பக்கங்கள் எல்லாமே வாசகர்களை ஈர்க்கக் கூடியவை என்பது இதழியலின் பாலபாடம். விளம்பரதாரர்களும் 3, 5, 7 பக்கங்களில் தங்கள் விளம்பரங்கள் வெளிவரவேண்டும் என்பதை விரும்புவார்கள். அதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தவும் தயாராக இருப்பார்கள்.
அப்புறம் ஒரு காட்சியில் பதவியிழந்த அமைச்சரை பத்திரிகையாளர்கள் மொய்த்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்கள். ஒரு கேள்வி : ‘திருப்பதிசாமி எழுதின கட்டுரையாலேதான் உங்களுக்கு அமைச்சர் பதவி போச்சுன்னு சொல்றாங்களே?’. இப்படி ஒரு கேள்விக்கு வாய்ப்பேயில்லை. வேண்டுமானால் இப்படி கேள்வி கேட்கப்பட்டிருக்கலாம் ‘திசைகள் பத்திரிகையில் வந்த கட்டுரையாலேதான் உங்க அமைச்சர் பதவி போயிடிச்சின்னு சொல்றாங்களே?’
மற்றபடி படம் ஓக்கே ரகம்தான். ஐந்து ஆண்டுகள் கழித்து வந்திருந்தாலும் நாட் பேட். உண்மையில் இடைவேளை காட்சியில்தான் படமே தொடங்குகிறது. இது முதல் காட்சியாக வைக்கப்பட்டு, மற்ற காட்சிகள் தெலுங்கு இயக்குனர் சுரேந்தர் ரெட்டி பாணியில் ஷார்ட் ஃப்ளாஷ்பேக் சீன்களாக வந்திருந்தால் படம் பட்டையைக் கிளப்பியிருக்கும்.
இந்தப் படத்தில் மட்டுமன்றி கரு.பழனியப்பனின் அனைத்துப் படங்களிலுமே நம்மை வெறுப்பேற்றும் சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களுமே இண்டெலெக்சுவல்களாகவே இருப்பார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் ஏதோ ஒரு ‘மெசேஜ்’ சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால், வசனங்களில் நிறைய விஷயங்களை சொருகவேண்டுமென்கிற அவரது ஆவல் புரிகிறது. துரதிருஷ்டவசமாக படம் பார்க்கும் ரசிகர்களில் ஐந்து அல்லது ஆறு சதவிகிதத்தினர் மட்டுமே இண்டெலெக்சுவல்களாக இருக்கும் சூழலில், ‘படம் இழுத்துக்கிட்டே போவுது’ என்கிற கமெண்டுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் ஒரு தவறான தேர்வு என்று நினைக்கிறோம். அவர் ஜான் ஆப்ரகாம் மாதிரி. கம்பீரமான தோற்றம் கொண்டவர் என்பது உண்மைதான். ஆயினும் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டிய காட்சிகளில் கூட முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, காமாசோமோவென்று இருக்கிறார்.
‘விழியும் விழியும்’ பாடலுக்கான ‘லீட்’ காட்சியில், சோனியா அகர்வாலின் தொப்புள் அழகியல் உணர்வோடு படமாக்கப்பட்டிருக்கிறது. அவரது தொப்புளுக்கு கொடுக்கப்பட்ட ‘லைட்டிங்’, கேமிரா கோணங்கள் என்று அக்காட்சியில் கரு.பழனியப்பன் சதுரங்கம் ஆடாமல், மங்காத்தா ஆடியிருக்கிறார்.
ஹீரோவோடு, வில்லன் தான் சதுரங்கம் ஆடுகிறார். ஹீரோ திருப்பி ஆடவேயில்லை என்பதால் படத்தின் ‘தலைப்பு’க்கான நியாயம் எடுபடவேயில்லை. க்ளைமேக்ஸில் மட்டுமாவது ஹீரோ ஆடியிருக்கலாம். ஆனால் வழக்கமான தமிழ்ப்படங்களைப் போலவே அடிக்கிறார், அடிவாங்குகிறார், திருப்பி அடிக்கிறார், வெல்கிறார்.
பத்திரிகையாளனால் மறைமுகமாக பாதிக்கப்படும் வில்லன், தன் பாதிப்புக்கு ஆற்றும் எதிர்வினைகள் சுவாரஸ்யமானவை. செய்தியாளன் செய்திக்காக தேர்ந்தெடுக்கும் ‘ப்ரியாரிட்டி’ குறித்த வில்லனின் விவாதங்கள் முக்கியமானவையும் கூட.
சதுரங்கம் – ஒரு தடவை விளையாடலாம்.
Posted by யுவகிருஷ்ணா (yuvakrishna@gmail.com) on October 10, 2011 06:37 AM· permalink
ஒற்றை மல்லிகையில் ஒட்டியிருந்த
ஒரு சொட்டு மழை நீரை
மலரைப் பறிக்காமல் அப்படியே
இதழ் வைத்து பருகினேன்..
நேற்றிரவு பெய்த மழை
கழுவிச் சென்றிருக்கிறது தேன் துளியை..
என்னை வித்தியாசமாய்
பார்த்தாள் எதிர்வீட்டுக்காரி
எனக்கு வெட்கமில்லை
நான் வீதியில்அருந்தியது தேனையல்ல
மழைத்துளியை தான்...
சொல்லும் எல்லாவற்றையும்
காதல் காமம் என காரணம் வைத்துபேசினால்
அதற்கு பதில் அளிக்க என்னிடம் நேரமில்லை
நான் என்றும் முகத்துக்கு சட்டை அணிவதில்லை
Posted by தமிழரசி (thamilarasi2008@gmail.com) on October 10, 2011 06:19 AM· permalink

தமிழ் சினிமாவை நிதிகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் தனியொரு சிறு படமாய் வெளிவந்து அசத்திய களவாணி திரைப்படத்தை இயக்கிய சற்குணத்தின் அடுத்த படம். பீரியட் படம். புதிய இசையமைப்பாளரின் இசையில் பாடல்கள் கவனிக்கப்பட தக்க வகையில் அமைந்தது என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.

1960களில் கதை நடப்பதாக சொல்லப்படுகிறது. தன் மகன் எப்படியாவது அரசாங்க உத்யோகஸ்தன் ஆக்குவதே தன் லட்சியமென இருக்கும் அப்பாவின் ஆசைக்காக ஒரு குக்கிராமத்தில் கிராம சேவக்கின் ஆசிரியர் பணியை செய்ய போகிறார் விமல். அந்த ஊரே செங்கல் தயாரிப்பதை நம்பி வாழ்கிறவர்கள். மொதலாளி பொண்வண்ணனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு அவர் கொடுக்கும் சொற்ப கூலிக்காக மாடு மாதிரி உழைப்பவர்கள். படிப்பு வாசனை என்பதை தங்கள் பரம்பரையே அறியாதவர்கள். இந்த கிராமத்தில் வந்து வேண்டா வெறுப்பாக படிப்பு சொல்லிக் கொடுக்க வரும் விமல். அவரை பார்த்த மாத்திரத்திலேயே காதலிக்க அரம்பிக்கும் கதாநாயகி. இவரை பார்த்தாலே பயந்து ஓடும் பையன்கள் படிக்க வந்தார்களா? விமல் விரும்பும் அரசாங்க வேலை கிடைத்து ஊரை விட்டு போக வேண்டிய நேரத்தில் என்ன முடிவெடுத்தார்? என்பது போன்ற கேள்விகளூக்கு மிகப் பொறுமையாய் நகர்த்திக் கொண்டு போய் கதை சொல்லியிருக்கிறார்கள்.

அறுபதுகளின் களன். இதற்காக உருவாக்கப்பட்ட கிராம செட். அந்த செங்கல் சூளை, மாட்டு வண்டி, ஹீரோவின் காஸ்ட்யூம், லாரி போன்ர விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருக்கும் ஆர்ட் டைரக்டர் சீனுவுக்கு ஒரு சல்யூட். அசல் அந்தக்கால ஜெமினி கணேசன் போலிருக்கிறார் விமல். இன்னொரு சாம்பார் என்று நிச்சயம் சொல்லலாம். இந்த கேரக்டரில் அவர் சரியாய் சூட் ஆகிறார். வாத்யாரை ஊரே ஆளாளுக்கு கலாய்க்கும் காட்சிகளில் முந்தானை முடிச்சு பாக்கியராஜ் வாத்தியார் ஞாபகம் வந்தாலும், அவர் அளவிற்கு சுவாரஸ்யமில்லை. நாயகி இனியா டிகிளமரைஸ்ட் ரோலில் அழுந்த படிந்த தலைமுடியும், இறுக்க கட்டிய தாவணி, என்று சட்டென மனதில் உட்காரக்கூடிய, அதிலும் படபடவென பேசி ஒட்டிக் கொள்ளும் சுபாவப் பெண் கேரக்டர்தான் என்றாலும் நிறைய க்ளிஷே காட்சிகள். படம் நெடுக வரும் சிறுவர்களின் நடிப்பில் ஆங்காங்கே சுவாரஸ்ய மத்தாப்பூக்கள்.

எப்படி ஆர்ட் டைரக்டர் தன் உழைப்பை கொடுத்திருக்கிறாரோ அதைப் போல ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷுக்கும் நம் பாராட்டை தெரிவிக்க வேண்டும். அருமையான ஒளிப்பதிவு. படம் நெடுக வரும் செபியா டோன். அந்த சரசர சாரக் காத்து பாட்டின் வைட் ஷாட்கள் எல்லாம் ஒரு விண்டேஜ் டச். இசையமைப்பாளர் ஜிப்ரான். முதல் படத்திலேயே மனதை கொள்ளைக் கொள்ளும் பாடல்களை கொடுப்பது என்பது பெரிய விஷயம்தான். சரசரசாரக்காத்தும், போறானே பாடலும் அருமையான காம்போசிஷன்கள்.

எழுதி இயக்கியவர் சற்குணம். களவாணியின் வெற்றியை தொடர்ந்து கமர்ஷியலான ஒரு களனை எடுக்காமல் ப்ரீயட் படம், குழந்தை தொழிலாளர் பிரச்சனை என்று எடுத்த வரையில் பாராட்ட வேண்டும். மிக நுணுக்கமாய் பல காட்சிகளில் உழைத்திருக்கிறார். முக்கியமாய் அந்த கால உடைகள். கவர் போட்ட டிரான்ஸிஸ்டர். வாய் கணக்கு கேரக்டர், அப்புறம் அந்த குருவிக்காரர் கேரக்டர், படபடக்கும் இளைமையான கதாநாயகி, டிரான்ஸிஸ்டரில் சிச்சுவேஷனுக்கு தகுந்தார் போல ஒளிபரப்பாகும் அக்கால இலங்கை கூட்டு ஸ்தாபன ஒலிபரப்புப் பாடல்கள், மண்வாசனையுடனான சடங்குகள், அந்த ஒப்பாரி பாட்டு, முப்பதாம் நாள் சடங்கு, என்பது போன்ற சிற்சில சுவாரஸ்யங்களுக்காக மெனக்கெட்ட இயக்குனர் கொஞ்சமே கொஞ்சம் கதைக்காகவும், திரைக்கதைக்காகவும் செலவிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
திருமதி பழனிச்சாமி என்றொரு படம். சத்யராஜ், சுகன்யா நடித்த படம். கமர்ஷியல் விஷயங்களை நீக்கி பார்த்தால் அதில் சொல்லியிருக்கும் சுவாரஸ்யங்களை குறைவாகவே யோசித்த திரைக்கதை தான் படத்திற்கு மெயின் வில்லன். கதைக்குள் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. பொன்வண்ணன் செய்யும் செங்கல் பில்டப் எல்லாம் படு ஓவர். பாக்யராஜ் வந்து ரூல்ஸ் சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார் வில்லன். சரி. வழக்கமான க்ளைமாக்ஸ் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கலாம். கதாநாயகி விமலை பார்த்த அடுத்த சில காட்சிகளிலேயே அவர் மீது காதல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார். அதெப்படி பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது?. அப்படி காதல் வரும் அளவிற்கு விமல் ஏதும் செய்ததாகவும் தெரியவில்லை. எட்டிப் பார்த்தால் யார் யாரோடு நிற்கிறார்கள் என்று தெரிந்து விடக்கூடிய ஊரில் ஹீரோவும், ஹீரோயினும் சேர்ந்து சுத்துவது பற்றி ஊர்காரர்கள் ஏதும் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு வேளை கதை அதை பற்றி இல்லையென்பதால் கவலைப்படாமல் இருந்துவிட்டீர்களோ? அந்த குருவிக்கார கேரக்டர் எதற்கு? அதனால் என்ன பலன். ஹீரோ இடைவேளைக்கு முன் ஊருக்கு போவதை தடுத்து நிறுத்துவதை தவிர?. பாடல் காட்சிகளை எடுப்பதில் மிகவும் கற்பனை வறட்சி தெரிகிறது. என்னா மாதிரியான பாடல் அந்த போறானே..? நிஜத்தில் அந்த காதல் ட்ராக் மட்டும் நம்முள் ஏறியிருந்தால் போறானே பாடல் உருக்கியிருக்கும். ஆனால் படத்தை நேரத்தை நிரப்ப இட்ட பாடலாய் அமைந்துவிட்டது.அடுத்த காட்சி என்னவென்று படத்தில் நடித்திருக்கும் குழந்தைகள் கூட சொல்லிவிடக்கூடிய திரைக்கதையமைத்திருப்பது தான் பெரிய மைனஸ், நல்ல கருத்தை முன் வைத்தாலும் உட்கார முடியாமல் நெளிய வைக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.
வாகை சூடவா- வரும்.. ஆனா வராது
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Posted by சங்கர் நாராயண் @ Cable Sankar (sankara4@gmail.com) on October 10, 2011 06:06 AM· permalink
டீம் வீவர் ( TeamViewer) மென்பொருளை இங்கே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.
சுட்டி
முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்
அன்புடன் : கான்.
Posted by கான் (noreply@blogger.com) on October 10, 2011 05:45 AM· permalink

சில தினங்களுக்கு முன், பணியில் இருந்து நீக்கப்பட்டதால் ஒரு பொறியாளர் - வாழ்க்கையை இனி எப்படி எதிர் கொள்ள போகிறோமோ என்கிற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்தியை தினசரியில் வாசிக்க நேர்ந்தது.
அப்போது எனக்கு எனது நண்பரின் ஞாபகம் வந்தது. கூடவே சில தினங்களுக்கு முன் - அவருடன் உரையாடிய நிகழ்வும் ஞாபகத்திற்கு வந்தது. "கொஞ்ச நாளைக்காவது மனுஷன் நிம்மதியா ஒரு தொழிலை பார்த்துட்டு இருக்கலாம்னு பார்த்தா முடியல. இனி புதுசா ஒரு பிழைப்பை பார்க்கணும்" என்றார். (திருட்டு) வி.சி.டி கடை வைத்து வியாபாரம் பார்த்து கொண்டிருந்தார். ஜெ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து திருட்டு வி.சி.டி விற்பனையில் பெருமளவுக்கு சிக்கல் வந்துள்ளது. கலைஞர் ஆட்சியில் இருந்தது போல நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வியாபாரம் பார்க்க இயலாமல் போகிறது. பயந்து பயந்து தொழில் பார்க்க வேண்டி இருக்கு" என்றார்.
பிரதான சாலையில், கோவில் இடத்தில் மிக குறைவான வாடகையில் - வெகுகாலத்திற்கு முன் கிடைத்த இடம். "கடைய திறக்காமலே வாடகை கொடுத்துடுவேன். அதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல. ஆனா புதுசா என்ன தொழில் பண்றதுங்கிறது தான் யோசனையா இருக்கு. எல்லா தொழிலும் செய்து பார்த்தாச்சு" என்று சிரித்தார். நிச்சயம் மனதில் மிக பெரிய இம்சை - சரியான வேலை இல்லை என்பதால் இருக்கலாம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தார்.
பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். "நான் பார்க்காத வியாபாரமா? எல்லா தொழிலும் பார்த்துட்டேன்" என்று. இவரும் அந்த ரகம் தான். சிலர் இளம் வயதில் என்ன தொழில் தொடங்குகிறார்களோ - அதுவே இறுதி காலம் வரை இருக்கக்கூடிய தொழிலாக இருக்கும். பெரும்பாலும் குலத்தொழில் பார்ப்பவர்கள், மருந்துகடை வைத்திருப்பவர்கள், ஒர்க் ஷாப் - போன்றவைகளை நிரந்தர தொழிலாக சொல்லலாம்.
ஆனால் இவர் - சில வருஷங்களுக்கொரு முறை தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பார். நாம் நன்றாக கவனித்தால் - சில தொழில்கள் அற்ப ஆயுள் கொண்டவையாக இருக்கும். வீடியோ லைப்ரரி, டெலிபோன் பூத் போன்றவை அந்த பட்டியலில் இருந்தவை. இவர் முன்பு லாட்டரி சீட்டு வியாபாரம் பார்த்தார். ஜெ ஆட்சிக்கு வந்த முதல் ஐந்தாண்டுகளில்,டோக்கன் விளையாட்டு என்கிற விபரிதமான பணத்தை பிடுங்கும் சூதாட்ட விளையாட்டு தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. காலேஜ் முடித்து சும்மா சுற்றி கொண்டிருந்த காலத்தில் விளையாட்டாக ஆரம்பித்தார் - அந்த தொழிலை. ஓரளவு சம்பாதித்தார்.

காவல்துறையினரின் நடவடிக்கையால் மூடினார். கொஞ்ச நாளில் வெளிநாட்டு பொருட்கள் விற்கிற கடை வைத்தார். எந்த தொழிலாக இருந்தாலும், ஆரம்பித்த சில நாட்களிலேயே - நெளிவு சுழிவு தெரிந்து வெற்றி பெற்று விடுவார். பிரச்சனைகளை கண்டு அச்சப்பட மாட்டார். "நீயா... நானா" பார்த்திடுவோம் என்கிற ரீதியில் செயல்படுவார். புதிய தொழில் தொடங்கிய முதல் சில வாரங்கள் அவரிடம் வண்டி இருக்காது. ஹோட்டலில் சாப்பிட மாட்டார். வண்டி, கையிருப்பு பணம் மற்றும் சில நகைகளை விற்று தான் தொழில் தொடங்குவார்.
சில மாதங்களில் வண்டி, நகைகள் எல்லாம் மேஜிக் போல திரும்ப அவரிடம் வந்து சேர்ந்துவிடும். கல்யாணமாகாத வயதில் ரிஸ்க் எடுப்பது பெரிய விஷயம் இல்லை. திருமணத்திற்கு பிறகு - ரிஸ்க் என்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல தான். ஆனால் ரிஸ்க் எடுக்கிறார். சில தினங்களுக்கு முன் - அவர் கடை பக்கம் சென்றபோது, கடை பூஜை பொருட்கள் விற்பனையகமாக மலர்ந்திருந்தது. அவர் முகத்திலும் மலர்ச்சி.
"கோவிலுக்கு பக்கத்துலயே இருந்துகிட்டு - என்ன என்னவோ தொழில் பண்ணிக்கிட்டு இருந்து இருக்கோம். போன மாசம் ஒரு விடியக்காலையில் முழிப்பு வந்தது. பூஜை பொருட்கள் விற்கிற கடை வைக்கலாமேன்னு தோணுச்சு. உடனே வைச்சிட்டேன். ஒரு வாரமாச்சு. வியாபாரம் நல்லா இருக்கு" என்றார் மகிழ்ச்சியுடன். "பூஜை சாமான் விற்கிற கடை ரெண்டு இருந்தாலும் - நமக்கும் வியாபாரம் பரவாயில்லை".
யாரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்... ஒருவர் மகிழ்ச்சியுடன் உள்ளதை அல்லது துயரத்துடன் இருப்பதை. பணியிலிருந்து நீக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பொறியாளர் ஞாபகத்திற்கு வந்தார். அவரை இறக்க வைத்த கடுமையான சூழ்நிலை நண்பருக்கும் உள்ளது. ஆனால் நண்பரால் எப்படி வாழ முடிகிறது.

வசதியான வீட்டு குழந்தைகள் - சிறு மழையில் நனைந்தாலும் சளி, ஜலதோஷம் பிடித்துவிடும். ஆனால் அடித்தட்டு மக்களின் குழந்தைகளை - சட்டென்று எந்த வியாதியும் பீடிப்பதில்லை. காரணம் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி. பல விஷயங்களை பழக்கிவிடுகிறது - உடம்புக்கு. லேசான தூசி என்றாலே "டஸ்ட் அலர்ஜி" என்று முக்கை பொத்தி கொள்பவர்கள் மத்தியில் - எந்த தூசியிலும் தாக்குபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். காரணம் எதிர்ப்பு சக்தி.
மேற்கண்டவைகள் எல்லாம் உடம்புக்கான எதிர்ப்பு சக்தி. மனதுக்கும் தேவைப்படுகிறது எதிர்ப்பு சக்தி. அதுவே ஒருவனை ஹீரோவாகவோ அல்லது ஜீரோவாகவோ தீர்மானிக்கிறது.
Posted by தமிழ் உதயம் (ssr.romesh@gmail.com) on October 10, 2011 05:23 AM· permalink
இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.
சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.
ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.
புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
Posted by சந்ரு (shanthruslbc@gmail.com) on October 09, 2011 06:06 PM· permalink
கேதார கெளரி விரதம் ஆரம்பமாக இருப்பதனால் முன்னைய பதிவொன்று மீண்டும் உங்களுக்காக
இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.
சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.
ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.
புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
Posted by சந்ரு (shanthruslbc@gmail.com) on October 09, 2011 06:03 PM· permalink
வேலன்:-ஆறுமொழிகளின் மொழிபெயர்ப்பை உடனடியாக அறிந்துகொள்ளஓரே சமயத்தில் நீங்கள் ஐந்துமொழிகளில் பொருட்களின் அர்த்தங்கள் அறிய வேண்டுமா? ரொம்ப சுலபம் 350 கே..பி. அள்வுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை இங்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஆங்கிலத்திற்கு எதிரில் உள்ள கட்டத்தில நீங்கள் விரும்பும் ஆங்கில சொல்லினை தட்டச்சு


Posted by வேலன். (noreply@blogger.com) on October 09, 2011 05:45 PM· permalink

ஒரு ராம பக்தனின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?96 கோடி முறை ராம நாமத்தை ஜபம் செய்து அவன் தரிசம் பெற்ற தியாகராஜா ஸ்வாமிகள் கூறுகிறார்.
ஒரு விஷயத்திலும் பற்றில்லாமல் ஜீவன் முக்தனாக
விளங்கி ஆனந்தமடைபவன்
தான் ஜப தபங்கள் செய்வதாக பெருமை கொள்ளமாட்டான்
கபடம் நிறைந்த உள்ளத்துடன் பேசமாட்டான்
தனக்கு நிகராக ஒருவரும் இருக்கக்கூடாது என்று ஊரூராக விளம்பரம் செய்துகொண்டு திரியமாட்டான்
ஆசை நிறைந்த மனதுடன் மனைவி மக்கள் மீது சதா மோகம் கொள்ளமாட்டான்
இல்லற வாழ்வில் கிடைக்கும் இன்பங்களே சதமென்று எண்ணமாட்டான்
சிவன் விஷ்ணு என்ற வித்தியாசம் பாராட்ட மாட்டான்
உலகில் தான் ஒருவனே பரிசுத்தமானவன் என்றெண்ணி பொய்கள் பல பேசி வயிறு வளர்க்கமாட்டான்
அனுமனால் தாங்கப்படும் ராமனின் திருவடிகளை என்றும் மறக்கமாட்டான்
ராஜச மற்றும் தாமச குணங்கள் அவனுக்கு இருக்காது
தனக்கு லாபம் ஒன்றும் கிடைக்கவில்லை என்று எண்ணி புலம்பமாட்டான்
ராஜயோக மார்க்கத்தையும் பகவானின் சித்தம் தன்னிடம் வர வழி தேடுவதையே முழு நோக்கமாக கொண்டிருப்பான்
பிறைசூடிய பெருமானின் தோழனாகிய ஹரியை ஒரு பொழுதும் மறக்கமாட்டன்
மேற்கண்ட காரணத்தினால்தான் இவ்வுலகில் ராம பக்தர்கள் விரல் விட்டு என்னும் அளவில் உள்ளனர்.இருந்தும் தற்காலத்திலும் ராம பக்தி செய்து நமக்கு வழி காட்டிய மகா ஞானிகளும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் யோகி ராம்சுரத்குமார்.
Posted by enpaarvaiyil (noreply@blogger.com) on October 09, 2011 02:17 PM· permalink
இன்று காலை நானும் சத்யாவும் கொட்டிவாக்கம் தொகுதியில்
ராஜ் செருபால் சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டோம். சத்யா ஏற்கெனவே இரண்டு நாள்கள் பிரசாரத்துக்குச் சென்றிருந்தார். நான் போவது இதுதான் முதல் முறை.
ராஜ் கொட்டிவாக்கம் தொகுதியில் (வார்ட் எண் 183) சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நிற்கிறார். சில மாதங்களுக்குமுன் ராஜ், நான், சத்யா, இன்னும் சிலர் சேர்ந்து வெவ்வேறு தொகுதிகளில் நிற்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். பல்வேறு காரணங்களால் நாங்கள் பலரும் கழன்றுகொண்டோம். ராஜ் மட்டும் நிற்கிறார்.
ராஜ், சிடிகனெக்ட் என்ற லாபநோக்கில்லா அமைப்பில் பணி புரிகிறார். ஒரு நகரம் சரியாகத் திட்டம் தீட்டாத காரணத்தால் மக்களுக்குத் தரவேண்டிய அடிப்படை வசதிகளைச் சரியாகத் தருவதில்லை. இருக்கும் இடத்துக்குள் அந்த வசதிகளை எப்படிச் செய்துதருவது என்பதை ஆராய்கிறது சிடிகனெக்ட். போக்குவரத்து நெரிசலா? எப்படியான சிறு சிறு மாறுதல்களைச் செய்தால் நெரிசலைக் குறைக்கலாம்? தெருவோரத்தில் மக்கள் நடக்க ஏன் மாநகராட்சி வசதிகளைச் செய்துதருவதில்லை? அதனை எப்படி மக்களின் ஈடுபாட்டுடனேயே நடைமுறைப்படுத்தலாம்? தெருவோர வியாபாரிகளைப் பொதுவாகத் துரத்துவதையே ஆட்சியாளர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த அளவுக்கு ஒரு உள்ளூர்ப் பொருளாதாரத்துக்கு உபயோகமானவர்கள், அவர்களுக்கு எப்படிப்பட்ட வசதிகளைச் செய்துகொடுக்கலாம்; அதே நேரம் பாதையில் நடக்கும் மக்களுக்கும் பிரச்னையில்லாமல் எப்படிச் செய்யலாம்? இதுபோன்ற பல விஷயங்கள், நீர், குப்பை என்று மக்களுக்குத் தேவையான பலவற்றைப் பற்றியுமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர் ராஜ்.
கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் ஒன்றில் தி.நகர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ராஜ் விரிவாகவே பேசியிருந்தார்.
***
காலையில் சுமார் 8 மணிக்கு ராஜை அவர் வீட்டில் சந்தித்து துண்டுப் பிரசுரங்களைச் சேகரித்துக்கொண்டோம். வரைபடத்தில் ஏற்கெனவே கவர் செய்திருந்த பகுதிகளைக் குறியிட்டிருந்தார். அதுபோக இன்று பார்க்கவேண்டிய தெருக்களைக் குறித்துக்கொண்டு நானும் சத்யாவும் கிளம்பினோம். முதலில் ஒவ்வொரு வீட்டுக்கும் இருவருமே போய்க் கதவைத் தட்டிப் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தோம். மிடில் கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ், ஏழை மக்கள் என்று கலந்துகட்டிய பகுதி. பக்கிங்காம் கால்வாய்க்கும் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி. களத்துமேட்டுத் தெரு, வெங்கடேச நகர் பகுதிகளில் சில பல தெருக்களிலும் சந்துகளிலும் வீடு வீடாகச் சென்றோம்.
மக்கள் அனைவருமே நின்று நாங்கள் பேசியதைக் கேட்டனர். பலரும் எங்களை வீட்டுக்கு அழைத்து தண்ணீர் கொடுத்தனர். காபி குடிக்கிறீர்களா என்று கேட்டனர்.
இந்தப் பகுதிக்கு நீங்கள் ஒருமுறை சென்றால் தெரியும். திறந்த சாக்கடை. ஆங்காங்கே குளம் குட்டையாக நீர் தேங்கி பல்வேறு உயிரினங்கள் பல்கிப் பெருகுகின்றன. குப்பைகள் எடுக்கப்படுவதே இல்லை. சாலைகள் சரியாக இல்லை. டீ வீலர், ஃபோர் வீலர் என்று எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் பஞ்சர் ஆகிவிடும் அல்லது சஸ்பென்ஷன் போய்விடும். அனைத்து வீடுகளுக்கும் ஒழுங்காகக் குடிநீர் வருவதில்லை. இப்படிப் பலவிதப் பிரச்னைகள்.
இதுவரையில் கொட்டிவாக்கம் பஞ்சாயத்தாக இருந்த இந்த இடம் இப்போது ஒரு வார்டாக சென்னை மாநகராட்சியில் சேருகிறது. ராஜ் செருபால் போன்ற ஒருவர் கவுன்சிலராக வந்தால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற எங்கள் நம்பிக்கையை அங்குள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டதாகவே எனக்குத் தோன்றியது.
சிறிது நேரம் கழித்து வேறு இரு நண்பர்கள் சேர்ந்துகொண்டனர். ராஜும் சேர்ந்துகொண்டார். மேலும் பல வீடுகளுக்குச் சென்றோம். சுயேச்சை வேட்பாளர் இவர் என்பது அனைத்து இடங்களிலுமே வரவேற்பைத் தந்தது. சிலர் ‘படித்த ஆசாமி’ என்று வரவேற்றனர். அமெரிக்கா சென்று படித்தவர் என்பது மட்டுமின்றி குடிமைச் சமூக வேலைகளில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் ஈடுபட்டவர், தில்லியில் மட்டுமின்றி சென்னையிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறையில் ஈடுபட்டு வருகிறவர் என்பதைச் சுட்டிக் காட்டினோம். ஒரு சிலர், இவர் ஏழை மக்களுடன், குப்பத்தில் உள்ளவர்களுடன் பேசுவாரா என்று சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் குப்பம் ஒன்றுக்கு ராஜ் செருபால் சென்றபோது, அங்குள்ள இளைஞர்கள் பலரும் தன்னார்வலர்களாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்குக் காசு பணம் கொடுக்க முடியாது என்பதை ராஜ் செருபால் விளக்கியபோது, அவர்கள் காசு ஏதும் தேவையில்லை என்று தெளிவாகவே கூறினர். இதுவரை காசு கொடுத்த கட்சிகள் மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை என்பதை இந்த இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். நேற்று இரவு முழுதும் கண் விழித்து தெருவெங்கும் போஸ்டர்களை அவர்கள்தான் ஒட்டினர். 150-க்கும் ஏற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு ஒன்றைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் அனைவரும் ராஜ் செருபாலின் பிரசாரத்துக்கு ஆதரவு தந்து கூட வந்து வாக்கு கேட்பதாகச் சொல்லியுள்ளனர்.
வார்டு எண் 183-ல் இருக்கிறீர்களா? செயலூக்கம் கொண்ட கவுன்சிலர் உங்களுக்குத் தேவையா? தன்னார்வலராக ராஜ் செருபாலுக்கு வாக்கு சேகரிக்க விரும்புகிறீர்களா? என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Posted by Badri (noreply@blogger.com) on October 09, 2011 11:10 AM· permalink

ராமபிரானின் பெருமையை தியாகராஜர் பலவாறு போற்றுகின்றார் ஒரு பாடலில்.என்றும் அழியாத உருவததாய்.
மகிமையின் உறைவிடமான உன்னிடம் யாருடைய திறமை என்ன செய்யமுடியும்?
சத்தியமான உன் ஆணைகளை மீற யாருக்கு சாமர்த்தியம் உள்ளது?
(உன் ஆணையை மீற முடியாமல்) சூரியன் இரவு பகலாக மகாமேரு பர்வதத்தை சுற்றவில்லையா?
ஆதிசேஷன் மிகுந்த பாரமுள்ள இப்பூமியை சுமக்கவில்லையா?
காசிபதியாகிய சிவன் காசியில் மரணமடையும் மாந்தரின் செவிகளில் உனது
பெயராகிய தாரக மந்திரத்தை உபதேசிக்கவில்லையா?
(ஆகவே உன் கட்டளையை மீற யாருக்கு திறமை உள்ளது?)
எனவே இக்கணம் முதலே ராம நாம ஜபம் செய்யுங்கள்
Posted by enpaarvaiyil (noreply@blogger.com) on October 09, 2011 09:18 AM· permalink

ராம நாமத்தை எப்போதும் துதிப்பவர்களுக்கு மற்ற பக்தி சாதனங்கள் தேவையில்லை என்று தியாகராஜ ஸ்வாமிகள் பாடுகின்றார்.
மனம் தன்வயப்பட்ட ஞானிக்கு மந்திர தந்திரங்கள் எதற்கு?
இவ்வுடல் ஆத்மாவல்ல(தானல்ல)என்று நினைப்பவனுக்கு தவம் செய்ய வேண்டிய அவசியம் ஏது?
அனைத்தும் நீயே என்று எண்ணுபவனுக்கு (சன்யாசம் முதலிய)ஆசிரம வேறுபாடுகள் ஏது?
(உலகம்) கண்கட்டு ,மாயை என்று துணிந்தவனுக்கு பெண்டிர்(பொருள்)முதலியவற்றின் மீது மோகம் ஏது?
பிறந்தது முதல் கெட்ட விஷயங்களை நாடாமலிருப்பவனுக்கு,இறந்த கால எதிர்கால சிந்தனை எதற்கு?
ராஜாதிராஜனே! நிர்விகாரனே!இணையற்றவனே!மதிவதனனே!
ராம பக்தி பண்ணுவோம் திட சித்தத்துடன்
Posted by enpaarvaiyil (noreply@blogger.com) on October 09, 2011 09:05 AM· permalink
என்னுடைய இந்த பதிவைப்பார்த்து இந்து தீவிரவாதிகள் என்னை திட்டித் தீர்க்கலாம். நானும் ஒரு இந்து தீவிரவாதிதான். அளவு கடந்த கடவுள் நம்பிக்கை உடையவன்.
இருந்தபோதும் இந்துக்களின் மூட நம்பிக்கைகள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவன்.
இந்துக்களின் சமய சம்பிரதாயங்கள் அர்த்தம் மிக்கவை ஆனாலும் சில விடயங்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.
அண்மையில் எனது கிராமத்திலே ஆலய திருவிழா ஒன்று நடைபெற்றது. ஒரு நாள் சுவாமி கிராமத்தின் அத்தனை வீதிகளிலும் வீதி உலா வருகின்ற நிகழ்வு இடம் பெற்றது.
கிராமத்தில் இருக்கின்ற அத்தனை வீடுகளுக்கு முன்னாலும் நிறைகுடங்கள் வைக்கப்பட்டிருந்தன. நிறைகுடம் வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் தகர்த்து எறியப்பட்டன. எமது கிராமத்திலே 2500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. ஆனைத்து குடும்பங்களும் நிறைகுடம் வைத்திருந்தனர்.
2000 குடும்பங்கள்தான் நிறைகுடம் வைத்திருந்தாலும் 2000 தேங்காய்கள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தேங்காய் 30 ரூபாய் படி பார்த்தாலும் 60000 ரூபாய் வீணடிக்கப்பட்டிருக்கின்றது. எத்தனையோ பேர் ஒருவேளை உணவின்றி கஸ்ரப்படுகின்றனர்.
இது ஒரு புறுமிருக்க எமது கிராமத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தாழ்த்தப்பட் சாதியினர் இருக்கின்றனர். அவர்களின் வீதிகளுக்கு சுவாமி வீதிவலம் வருவதற்கு கொண்டு செல்லப்படவில்லை. இங்கே கடவுளும் சாதி பார்க்கின்றாரா? அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கடவுள் தரிசனம் கொடுக்கக் கூடாதா?
இன்று இந்து ஆலயங்கள் வியாபார நிலையங்களாக மாறிவிட்டன. இங்கு கற்பூரம் எரிக்க கூடாது என்று எழுதி வைத்திருக்கின்றனர். கற்பூரத்தை வைப்பதற்கு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கற்பூரம் மீண்டும் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றன.
வுpரதம் பிடித்து காப்பு கட்டுவதாக இருந்தாலும் சரி தீ மிதிப்பதாக இருந்தாலும் சரி பணம் கட்ட வேண்டும். பணம் கட்ட முடியாமல் கஸ்ரத்தின் மத்தியிலும் இருக்கின்றவர்களுக்கு தெய்வம் இல்லையா?
ஒரு கோவில் கட்டவேண்டும் என்றால் கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் பணம் அறவிட்டு ஏனைய கோவில்களைவிட பெரிதாக கோவில் கட்டவேண்டும் என்று போட்டிபோட்டுக்கொண்டு கோவில் கட்டுகின்றனர்.
கோவில்களை அமைப்பதற்காக இந்துக்கள் எவ்வளவு பணத்தினை செலவு செய்கின்றனர் என்பதனை சிந்தித்து பாருங்கள். பெரிதாக பிரமாண்டமாக கோவில்களை அமைத்தால்தான் கடவுள் அந்த கோவிலில் இருப்பாரா? இந்த பணம் முழுவதும் முடக்கப்படுகின்றதல்லவா?
இவ்வாறெல்லாம் செலவு செய்யும் இந்து ஆலயங்கள் கஸ்ரப்படும் மக்களுக்காக எத்தனை இந்து ஆலயங்கள் உதவி செய்கின்றன?
Posted by சந்ரு (shanthruslbc@gmail.com) on October 09, 2011 06:00 AM· permalink

Rama means rightiousness.
Rama means truth
Rama means embodiment of compassion
Rama means dispeller of ignorance
Rama nama is nectar
layman cannot understand his actions
It requires great knowledge and humility and love towards all creations around him
Only a few in this world understood him.
One is Lord Shiva.
He who has taught the sacred Rama Nama to Goddess Parvathi.
This truth was revealed by Bhishma to this world at the end of Kurushetra War.
Mahatma Gandhi has realised the importance of RAMA Nama and made everybody to chant RAMA NAMA.during freedom struggle.
Glory to Lord Rama
Posted by enpaarvaiyil (noreply@blogger.com) on October 09, 2011 05:31 AM· permalink
எப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்
வீடு திரும்பிய அப்பனின் தூக்குச்சட்டிக்குள்
எதாவது சில எட்டாவது அதிசயங்கள்.
மஞ்சளும் பச்sசையுமாய் சில மிதுக்கம் பழம்
அரக்குக் கலரில் அரைப்படி எலந்தைப் பழம்
ஆகாய நிறத்தில் புள்ளிகள் நிறைந்த காடைமுட்டை
அம்மையின் முகத்தைகாணாமல் கத்தும் மைனாக்குஞ்சு
கிட்டிப் புல்லும் கவட்டைக் கம்பும்
ஆணியில்லாதபம்பரமும் கயிறு இல்லாத வில்லுமாக
எப்போதும் எனக்காகத்
Posted by காமராஜ் (skaamaraj@gmail.com) on October 09, 2011 05:28 AM· permalink
நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 23 உள்ளுராட்சி சபைகளில் 21 சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
கைப்பற்றியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் 5 பிரிவுகளையும் ஜக்கிய தேசியக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று கைப்பற்றியுள்ளது.
கல்முனை மாநகர சபையினை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புதிய பத்திரிகை ஒன்று புதிய விடியல் எனும் பெயரில் வாரம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதில் செய்திகள் மற்றும் அரசியல் கலை கலாசார அம்சங்களுடன் சமுகத்தின் பிரச்சினைகள் பற்றியும் அலசி ஆராயும் பல அம்சங்களை தாங்கி வெளிவருகின்றது.
அத்துடன் புதிய விடியல் எனும் இணையத்தளத்தினையும் ஆரம்பித்துள்ளனர். இந்த இணையத்தளம் மூலம் உடனுக்குடன் செய்திகளை வழங்கவும் இருக்கின்றனர். உடனுக்குடன் செய்திகளைப் பெற நீங்களும் புதிய விடியலுடன் இணைந்திருங்கள். http://puthiyavidiyal.com
Posted by சந்ரு (shanthruslbc@gmail.com) on October 09, 2011 04:35 AM· permalink
ஈரைந்து புலன்கள்
இருளில் கனல்கிறது
ஒளி தராமல்
ஒலி தரும்
‘இதை’
போய்
தீ
எனச் சொல்கிறார்களே!
*
Posted by சத்ரியன் (ramheartkannan@gmail.com) on October 09, 2011 04:18 AM· permalink


நாளை முக்கியமான கொழும்பு மாநகரசபை உட்பட சபைகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கட்சிகளின் பலத்தைத் தீர்மானிக்கவும், கூட்டணிகளுக்கான பேரம் பேசவும் மட்டுமே இந்தத் தேர்தல் பயன்படப் போகிறது என்று நீங்கள் யாராவது நினைப்பீர்களேயானால், அது தவறு.
அடி மட்டத்திலிருந்து மேல் செல்லும் அரசாங்கப்படிகளின் முதலாவது அடியாக
Posted by LOSHAN (arvloshan@gmail.com) on October 09, 2011 12:31 AM· permalink
கிழக்கு பதிப்பகத்தின் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி மீண்டும் தி.நகருக்கு வருகிறது. அதே பழைய இடம். ஆனால் பல புதுப் புத்தகங்கள்.
தீபாவளி பர்ச்சேஸுசுக்கு என்று தி.நகர் செல்லாதோரும் உண்டா என்ன? அப்படியே ஒரு நடை நடந்து சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே எல்.ஆர்.ஸ்வாமி ஹாலில் நடக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பார்த்துவிடுங்கள்.
முன்னர் ஏப்ரல் மாதத்தில் நடந்த கண்காட்சியின்போது இல்லாத பல புத்தகங்கள் இப்போது கிடைக்கும். எனவே கட்டாயம் ஒருமுறை சென்று பார்த்துவிடுங்கள்.
இடம்: எல்.ஆர்.ஸ்வாமி ஹால், சிவா விஷ்ணு கோவில் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில், தி. நகர்.
நாள்: 8 அக்டோபர் முதல்.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.
தொடர்புக்கு: 95000 45608
Posted by Badri (noreply@blogger.com) on October 08, 2011 03:27 PM· permalink
அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொரு தரம் அப்படிச் சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பிலே தான் எத்தனை விதம்!
கண்களால் மட்டும் சிரித்துக்காட்டுவது.
கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும்!
கடைக்கண்ணால் சிரிப்பது.
முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலே இதுதான் அழகு) கண்களை சுழற்றி - பறவையாட விட்டு - ஒரு சிரிப்பு காட்டுவாள் (அப்போது கண்கள் ஜொலிக்கும் )சில சமயம், சற்றே மூக்கை மட்டும் விரித்து மூக்கிலும் ஒரு சிரிப்பை வரவழைப்பாள்!
உதடுகள் புன்னகைக்கும் போது வாயின் அழகு பல மடங்கு அதிகமாகிவிடும், சிரிப்பை அடக்க உதடுகளை நமட்டும் போது அவைகள் இளஞ்சிகப்பின் எல்லையைத் தாண்டி குருவி இரத்தம் போல் செஞ்சிகப்பாகிவிடும்.
அவளின் மூக்கில் தொங்கும் புல்லாக்கின்கீழ் ஒரு முத்து தொங்கும்.பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கும் பற்களுக்கும் போட்டிதான்! புல்ல்லாக்கில் அப்படி ஒரு முத்தைக் கோத்து, பற்களுக்கு நேராய்த் தொங்கவிடனும் என்று ஒரு ஆசாரிக்குத் தோணி இருக்கே,அது எப்பேர்ப்பட்ட ரசனை!
_________________________________________________________________________________
நமக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் அவ்வளவாக கிடையாது,நேரமின்மையும் ஒரு காரணமென்பதால் படங்கள் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டிருந்தேன்,நம்ம இலக்கியவாதி கொளந்தை அவர்கள் கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய இலக்கிய நாவலான "கோபல்ல கிராமம்" நாவலை சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார்,
நாவல் நடைபெறும் காலம் இந்திய சுதந்திரத்திற்கு முன்,
கோட்டையார் வீட்டு மூத்த கிழவி மங்கையதாயாரு அம்மாள் தன் ஒன்பது வயதில் நடந்தவைகளை பாதி மறந்த நிலையில் தன் கற்பனை கலந்து மிகைப்படுத்தி கூறுவது போல் நாவல் செல்கிறது,
ஆந்திராவில் துலுக்க ராஜ தொல்லை காரணமாக இங்கு தமிழ்நாட்டில் குடிபெயர்ந்த நாயக்கர் இன மக்கள் இங்கு காடுகளை எப்படி அழித்து விளை நிலமாக்கினார்கள் என்பதை கோபல்ல கிராமம் அருமையாக விளக்குகின்றது,
தமிழில் வழக்கில் இல்லாத சொற்கள்,நாம் அறிந்திராத விலங்குகள்,பறவைகள் ,அவைகளை கொண்டு மருந்து தயாரித்தல், அந்த கால மக்களின் பழக்கவழக்கங்கள் இவைகள் அனைத்தையும் நாம் அறிய இந்த நாவல் பெரிதும் உதவுகின்றது,
அந்த காலத்தில் கொலை குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனையான கழுவில் ஏற்றுவது பற்றி இந்த நாவலில் கி.ராஜநாராயணன் அருமையாக விளக்கியுள்ளார்,
மேலே இருப்பது சென்னா தேவி என்ற பெண்ணின் அழகைப் பற்றி அவர் நாவலில் வர்ணிக்கும் வரிகள்,கோட்டையார் வீட்டில் வேலை பார்க்கும் அக்கையா பாத்திரப் படைப்பு அருமையானது,மிகுந்த நகைசுவை உணர்வு உள்ளவர் போல காட்டி இருப்பதும் அவர் செய்யும் நகைச்சுவைக்கு முதல் முறையாக ஒரு நாவலை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்,
நாவலில் இருந்து சில,
__________________________________________________________________________________
ஆண் பெண் அனைவருமே இந்தக் காட்டை அழித்துநிலம் உண்டாக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.
சீறிக்கொண்டுவரும் அடைகாக்கும் பாம்புகள், சோடா, நட்டுவக்காலி, தேள், பூரான் முதலிய விஷ ஜந்துக்களை சந்தித்தார்கள். அடையாளம் தெரியாத முன்பின் பார்த்திராத சில வண்டுகள் வந்து தாக்கிக்கடித்தன, இதனால் மேலெல்லாம் சிலருக்கு பொரி பொரியான பொக்களங்கள் ஏற்பட்டு நீராய் வடிந்தது.
ஏராளமான உடும்புகள் அகப்பட்டன. உடும்பைப் பிடிக்கிறது ரொம்பவும் லேசு, ஆட்களைக்கண்டவுடன் அது வலைக்குள் பூராவும் நுழைந்து மறைந்துகொண்டு முகத்தின் நுனியை மட்டும் லேசாகத் தெரியும் படி வைத்துக்கொண்டிருக்கும். ஒரு குச்சியை எடுத்து வலைக்குள் விட்டால் போதும்; அந்தக் குச்சியை பலமாக கடித்துக் கொள்ளும்; விடாது. அப்படியே இழுக்க வேண்டியதுதான். குச்சியை கடித்துக் கொண்டே வந்துவிடும்.அதுக்கு நினைப்பு. எதிரி வந்து அதனிடம் வகையாக மாட்டிக்கொண்டதாக!
சோடாவைக் கொள்ளும் போது கோளாறாக அதன் தலையை மட்டும் நைந்து, அப்படியே ஒரு அடையாளமான இடத்தில் புதைத்துவிடுவார்கள், கொஞ்ச நாள் கழித்துத் தோண்டி எடுத்தால் அதன் சதைப் பகுதியையெல்லாம் மண்தின்றது போக அதன் உடம்பிலுள்ள அழகான கருப்பும் மஞ்சளும் கலந்து சிறிய வளையங்கள் கிடைக்கும். அதை குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் கோர்த்துப் போடுவார்கள்.பார்க்க ரொம்ப நன்றாய் இருக்கும் ஒரு ஆபரணம் போல.
கொழுத்த சாரைப் பாம்பின் தோலை உரித்து அதன் கொழுப்பை எடுத்து காய்ச்சி "பாம்பு நெய்" தயாரித்து வைத்துக்கொள்வார்கள், மருந்துக்கு.
முள்ளேலிகளைப் பிடித்து அதன் சதைகளை எடுத்து வாட்டி உப்பிட்டு குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு அதன் முட்கள் நிறைந்த தோலை நிழலில் காயவைத்து பத்திரப் படுத்தி வைத்துக்கொள்வார்கள் குழந்தைகளின் குன்ம இருமலுக்கு மருந்தாக கொடுக்க என்று. முள்ளேலிகளைப் பிடிப்பதுவும் ரொம்ப சுலபம். அவைகள் மெதுவாகவே ஓடும். அவைகளின் மேல் கொஞ்சம் மண்ணை அள்ளி வீசினாலும் போதும்; அதன் மேலே விழவேண்டும் என்று கூட கிடையாது,உடனே பந்து போல் சுருண்டு கொள்ளும்.அப்படியே எடுத்துக் கொண்டு வந்து விட வேண்டியதுதான்
_________________________________________________________________________________
கல்யாணம் ஆகாதவர்கள் அந்தக் காலத்தில் திருமணத்தன்றுதான் முகச்சவரம் செய்துகொள்ளுவார்கள்,அது வரையில் தாடிதான்!
அபூர்வமாக சிலர் ஒரு தாரம் மட்டுமே கல்யாணம் செய்து கொள்ளுவார்கள். அந்தக் சமூகத்தில் குறைந்தது இரண்டு தாரங்களாவது இருக்க வேண்டும். ஒரு பொண்டாட்டிதான் என்று இருப்பவனை "அந்த ஒத்தைப் பொண்டாட்டிக் காரனையா சொல்லுதே; சை அவன் என்ன மனுஷன்" என்று ரொம்ப கேவலமாகப் பேசுவார்கள்!
___________________________________________________________________________________
இந்த நாவல் ஏற்ப்படுத்திய தாக்கம் அதிகம்,இந்த நாவலை அறிமுகப்படுத்திய இலக்கியவாதிக்கு நன்றி.
Posted by டெனிம் (denimmohan@gmail.com) on October 08, 2011 03:11 PM· permalink
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் இல்லை இந்தப் பதிவு.
* ஆப்பிள் அற்புதமான கணினியாக இருந்தாலும் எதையெடுத்தாலும் நான்தான், நானேதான் செய்வேன் என்று தொங்கிக்கொண்டிருந்த காரணத்தால் வளரவேயில்லை. மைக்ரோசாஃப்ட் செழித்தது; பிசி பிசினஸ் வளர்ந்தோங்கியது. இன்றும்கூட ஒரு சிறு குழுவைத் தாண்டி மேகிண்டாஷ் கணினிகள் பரவவில்லை என்பது நிதர்சனம்.
* ஜாப்ஸின் உண்மையான மார்க்கெட்டிங் மாயாஜாலம் ஐபாட், ஐட்யூன்ஸில் ஆரம்பித்தது. அதுவரையில் வெறும் தொழில்நுட்ப, அழகியல் கலைஞராக இருந்தவர் பணம் பண்ணும் ஒரு மாபெரும் ஐடியாவை எடுத்தாண்டது இந்த விஷயத்தில்தான். இன்றுவரை ஆப்பிள்தான் இந்தத் துறையில் கிங். ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. காரணத்தை அடுத்து பார்ப்போம்.
* ஐபாட், ஐஃபோன், ஐபேட் - தமிழ்கூறும் நல்லுலகின் பாஷையில் சொல்லப்போனால், ‘சான்ஸே இல்ல’. ப்ராடக்ட் இன்னோவேஷன் + மார்க்கெட்டிங் சென்ஸ் சரியான கலவையில் கலந்து செய்த வித்தை.
* ஸ்டீவ் ஜாப்ஸின் தோல்வி - புத்தகச் சந்தையைப் புரிந்துகொள்ளாதது; அமேசானின் திறனைச் சரியாகக் கணக்கிடாதது.
* ஆப்பிளின் போட்டிக்காரன் அமேசான். ஐக்ளவுட் என்று ஆப்பிள் பேசிக்கொண்டிருக்கும்போதே அமேசான் அதனைச் செய்துமுடித்துவிட்டது. கிண்டில் ஃபயர் என்னும் கலர் டேப்ளட் ஐபேடை ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலை. ஆப்பிள் அதற்குப் போட்டியாக ஒன்றைச் செய்து முடிப்பதற்குள், இதுவரை ஐபேட் வாங்கியிராத உலக மக்கள் பலரும் கிண்டில் ஃபயருக்குத் தாவியிருப்பார்கள்.
* கிண்டில் ஃபயரில் என்னவெல்லாம் செய்யமுடியும்? புத்தகங்களை வாங்கி, படிக்கலாம். புத்தகம் கிளவுடில் இருக்கும். சினிமாக்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். பாடல்களை இறக்கிக் கேட்கலாம். அமேசானின் கிளவுட் வழியாக வெப் பிரவுசிங் செய்யலாம். (இது எனக்குப் பிடிக்கவில்லை!) ஆப்பிள் இந்த நிலைக்கு வர கனகாலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்த ஐந்தாண்டுகள், அமேசானின் ஆண்டுகள்.
இதில் ஆப்பிள் ஒரு லூஸர் என்றால், கூகிள் மாபெரும் லூஸர்!
Amazon > Apple > Google !
Posted by Badri (noreply@blogger.com) on October 08, 2011 12:26 PM· permalink
இரண்டு வருடங்களுக்கு முன்பாக, புதியதாக தொடங்கப்படவிருக்கும் ஒரு பத்திரிகைக்கு ஆட்கள் தேவையென்று மாலன் தன்னுடைய வலைப்பூவில் கேட்டிருந்தார். விண்ணப்பித்திருந்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைத்தார்.
தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் இருந்த அந்த அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். பத்திரிகை உரிமையாளரோடு, மாலன், ரமேஷ்பிரபா இருவரும் நேர்முகம் நடத்தினார்கள். பத்திரிகையில் வேலையை தொடங்கி, பிற்பாடு விளம்பர நிறுவனங்களுக்கு போய்விட்டவன். மீண்டும் பத்திரிகைத்துறையில் பணியாற்ற ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன்.
உரிமையாளர் திடீரென ஒரு கேள்வி கேட்டார். “உங்களுடைய லட்சியம் என்ன?”
லட்சியம் மாதிரியான எந்த சமாச்சாரமும் இல்லாத எனக்கு அக்கேள்வியை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் கேள்வி கேட்கப்பட்டால், திணறாமல் உடனடியாக ஏதாவது பதிலை சொல்லியாக வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னேன். “ப்ரியா கல்யாணராமன் ஆகவேண்டும் என்பதுதான் என் லட்சியம்”
ப்ரியா கல்யாணராமனை உரிமையாளருக்கு பரிச்சயமில்லை போல. “புரியலியே?” என்றார்.
எனக்கும் புரியவில்லை. உள்மனசுக்குள் இருந்தது, நான் அறியாமலேயே வார்த்தையாக வெளிப்பட்டுவிட்டது. அந்த லட்சியத்தை எப்படி விளக்கிச் சொல்வது என்று புரியாமல் திணறினேன்.
மாலன் எனக்காக சமாளித்தார். “ப்ரியா கல்யாணராமன் குமுதம் பத்திரிகையோட ஆசிரியர். அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆகவேண்டும் என்பது இவரோட லட்சியம்”
அட. இதுவும் நல்லாருக்கே. இப்படியே வைத்துக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டேன்.
உண்மையில் அந்த கேள்விக்கான என்னுடைய விடை, இந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கான நேர்முகத் தேர்வில் irrelevant ஆன விஷயம். நியாயமாகப் பார்க்கப் போனால், அவர்கள் என்னை உடனடியாக தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் திட்டமிட்டிருந்த இதழ், இன்று வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கும் ‘புதிய தலைமுறை’. உள்ளடக்க ரீதியில் குமுதத்துக்கு நேரெதிரானது. ஆனால், என் லட்சியம் (?) அப்படியிருந்தும், என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள்.
இப்படித்தான் புதிய தலைமுறையின் முதல் ஊழியனாக நான் பணிக்குச் சேர்ந்தேன். காரணம் மாலன். தமிழில் சுமாராக எழுதத் தெரிந்தால் போதும். எப்படியும் ‘மோல்ட்’ செய்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இம்மாதிரியான உள்ளடக்கம் கொண்ட பத்திரிகைக்கு ஏற்ப ‘மோல்ட்’ ஆகமுடியுமென்ற நம்பிக்கை எனக்குத்தான் அப்போது இல்லை.
கடந்த முப்பது வருடங்களாக என்னைப்போல நூற்றுக் கணக்கானோரை அவர் ‘மோல்ட்’ செய்திருக்கிறார். இதை தன்னுடைய பணி தொடர்பான கடமை என்று நினைக்காமல், ஒரு இயக்கமாகவே செய்துவருகிறார். ஏனெனில் அவருக்கு இந்த உலகில் மிகவும் பிடித்தமான விஷயம் துறுதுறுவென்றிருக்கும் இளைஞர்கள்.
ஒவ்வொரு இளைஞனும் ஒரு unique என்று நினைப்பார். எனவே ஒவ்வொருவரின் கருத்தும் அவருக்கு முக்கியம். அக்கருத்து அவருக்கு உவப்பானதாகவோ, அறிவுப் பூர்வமானதாகவோ எல்லாம் இருந்தாக வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் ‘கருத்து’ இருந்தாக வேண்டும் என்பது அவருடைய எதிர்ப்பார்ப்பு.
1981ல் சாவி குழுமத்தின் ‘திசைகள்’ பத்திரிகைக்கு ஆசிரியராக மாலன் பொறுப்பேற்றபோது, என்னுடைய இப்போதைய வயதைவிட இரண்டு, மூன்று வயது அவருக்கு குறைவுதான். மிகக்குறைவான இதழ்கள்தான் வெளிவந்தன. வணிகரீதியாகவும் பெரிய வெற்றி கண்டதாக தெரியவில்லை. ஆனாலும் இன்றுவரை தமிழ் பத்திரிகையுலகில் ‘திசைகள்’ ஒரு சாதனை.
பத்திரிகையாளர்கள் என்றாலே வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெற்றிலை குதப்பிய வாய், நரை விழுந்த பழுத்த அனுபவம், பவுண்டன் பேனாவை எழுதத் திறந்தாலே அட்வைஸ் மழை போன்ற பழமையான சம்பிரதாயங்களை தயவு தாட்சணியமின்றி உடைத்தெறிந்தது திசைகள். இளைஞர்கள்தான் இனி தமிழ்ப் பத்திரிகைகளின் எதிர்காலம் என்கிற நிலையை உருவாக்கியது. திசைகளின் ஆசிரியரும் இளைஞர். பணியாற்றிய குழுவினர் மொத்தமும் இளைஞர்கள். இந்த இளையபடை தமிழ் பத்திரிகைகளுக்கான உள்ளடக்கம், வடிவம் என்று எல்லாவற்றையுமே மாற்றிப் போட்டது. திசைகளில் பணியாற்றிய இளைஞர் கூட்டம் பிற்பாடு எல்லாத் திசைகளுக்கும் பயணித்து, அவரவர் தேர்ந்தெடுத்த துறைகளில் திறன்ரீதியாக உச்சம் தொட்டார்கள். சுதாங்கன், ரமேஷ்பிரபா, அரஸ், சாருப்ரபா சுந்தர், மணா, ஏ.எஸ்.பன்னீர்செல்வம், மருது, பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குனர் வஸந்த், பால.கைலாசம் என்று ஏராளமானவர்கள் திசைகளில் துளிர்த்தவர்கள்.
மாலன் தன்னிடம் பணியாற்றுபவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் அளவில்லாதது. ஒரு கருத்தை அவர் சொல்லியவுடனேயே, அதற்கு எதிர்வினையாக மறுப்பையாவது தன்னுடைய குழுவினரிடமிருந்து எதிர்ப்பார்ப்பார். அவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்த மாட்டார். உரையாடலில் மிகுந்த விருப்பம் கொண்டவர். எந்த ஒரு விவாதத்துக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கும். அவருடைய கோணத்தை தெளிவாக சொல்லிவிட்டு, மற்றவர்களின் கோணம் என்னவென்பதை அறிய அவருக்கு ஆவல் அதிகம். ஒரு கட்டுரை எழுதி, அச்சாகி விட்டால் அதோடு முடிந்தது என்று நினைக்காமல், வாசகர்கள் அக்கட்டுரை குறித்து என்னமாதிரியாக எதிர்வினைகிறார்கள் என்று இன்றளவும் ஆவலோடு வாசகர் கடிதங்களுக்கு காத்திருக்கும் ஆசிரியர் அவர். குறிப்பாக இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவார்.
பத்திரிகையாளன், சமூக ஆர்வலன், இலக்கியவாதியென்று அவருக்கு பலமுகங்கள் இருந்தாலும், அவரது ப்ரியாரிட்டி ‘பத்திரிகை’தான். நீண்டகால பத்திரிகை வாழ்வில் அவர் பெற்ற புகழைவிட பன்மடங்குப் புகழை மிகக்குறுகிய காலத்திலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெற்றிருக்கிறார். ஆனாலும் அச்சுப் பத்திரிகை மீதான அவருடைய மோகம் அளவில்லாதது.
இன்று எங்கள் ஆசிரியர் மாலனுக்கு பிறந்தநாள். நீண்ட நாட்களாக அவருக்கென்று ஒரு பிரத்யேக இணையத்தளத்தை உருவாக்கி வந்தார். இன்றுமுதல் அது பயன்பாட்டுக்கு வருகிறது. இணையத்தள முகவரி : http://maalan.co.in
காலையில் இருந்து ஒரு மணி நேரமாக இந்த இணையத்தளத்தை மேய்ந்ததில் ஒன்று புரிந்தது. தமிழில் எந்த ஒரு ஆளுமையின் இணையத் தளமும் இவ்வளவு விரிவான தரவுகளையும், தகவல்களையும் (அதிரடி எளிமை வடிவத்தில்) கொண்டதில்லை. இவ்வகையிலும் கூட மாலன் ஒரு முன்னோடிதான்.
Posted by யுவகிருஷ்ணா (yuvakrishna@gmail.com) on October 08, 2011 07:51 AM· permalink
ஏதோ
கொழந்த மாதிரி பிரபல பதிவராக இல்லாவிட்டாலும்,பல பதிவர்களில் என்னையும் ஒருவராக ஏற்றுக்கொண்ட சில அனானிகள் (நம்மளை மாதிரியே ஹாரர் வெறியர்கள்) ஹாரர் படங்களின் லிஸ்ட் கேட்டு சில மெயில் அனுப்பிருந்தார்கள்,அவர்களுக்காக ஏதோ என் சிறு அறிவுக்கு எட்டிய வகையில் வகைப்படுத்தி உள்ளேன்,இவைகள் அனைத்தையும் ஒரே பதிவில் எழுத முடியாத காரணத்தால்,தொடர் பதிவு மாதிரி இனி வரும் நாட்களில் எழுத எண்ணம். let's see !!!!
கடந்த பத்து ஆண்டுகளில், பிரெஞ்சு திரைப்பட இயக்குனர்கள் வன்முறை மற்றும் கற்பழிப்புகளை தங்கள் படங்களில் வேறெந்த இயக்குனர்களையும் விட சித்தரிக்க கொடூரமான முறைகைளை கையாண்டுள்ளனர், இதனால் பிரெஞ்சு ஹாரர் என்ற பெயர் மாறி new french extremism என்ற புதிய Genre உருவானது,
நான் கீழே வகைப் படுத்தி இருக்கும் படங்கள் New French Extremity படங்களின் கீழ் வரும், அல்லது அதே போன்ற உணர்வை எற்படுத்த கூடிய படங்களாக இருக்கும்,கீழே உள்ள படங்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட படங்கள்,
இந்தப் படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கலாம்,இந்தப் பதிவு அந்தப் படங்களைப் பார்க்காதவர்களுகானது,நீங்கள் jeepers creepers பார்த்தே டர்சானவரா அப்ப கீழே இருக்கும் படங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள்.
__________________________________________________________________________________
Inside (A l interieur) - 2007
எனது ஆல் டைம் பேவரிட்,மற்றும் எனது வாழ்நாளில் நான் திரும்பவும் பார்க்க கூடாது என நினைக்கும் படம்,Alexandre Bustillo மற்றும் julien maury இருவரும் சேர்ந்து இயக்கியப் படம்,இருவருக்கும் இது முதல் படம்,
கணவனை இழந்து தனியாக வீட்டில் வசிக்கும் கர்பிணிப்பெண்,காலையில் குழந்தை பிறந்துவிடும் நிலையில் முதல் நாள் இரவு வீட்டிற்குள் நுழையும் பெண் ஒருத்தி,இவளை கொல்ல முயற்சிக்கிறாள்,ஓடக்கூட முடியாத நிலையில் அவளை எப்படி சமாளிக்கிறாள் என்பதே ப(தட்)டம்,
ஒரு வீட்டிற்குள் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு ஒரு படத்தை இவ்வளவு விறுவிறுப்பாக ஒருவரால்(இருவரால்) எப்படி கொடுக்கமுடிந்தது,அவ்வளவும் ஸ்பெஷல் எபக்ட் (special effect),நம்ம ஊர் ஆட்களுக்கு special effect க்கும் Visual effect க்கும் அவ்வளவாக வித்தியாசம் தெரிவதில்லை,effect என்ற வார்த்தையைக் கேட்டாலே அது ஏதோ கணிப்பொறியில் செய்யப்படுவதாகவே ஒரு தவறான எண்ணம், special effect என்பது on the spot effect,சூட்டிங்கின் போதே செய்யப்படுவது,மேக்கப்,குண்டுவெடிப்பு காட்சிகள் போன்றவை special effect கீழ் வரும்,அப்படி இந்த படத்தில் ரத்தம்,மற்றும் கொடூரமான அந்த இறுதி காட்சி ஆகியவற்றிக்கு மிக அற்புதமான முறையில் special effect பயன்படுத்தப் பட்டு இருக்கும்,
பெண் சைக்கோவிற்கான விருது கொடுத்தால் Beatrice dalle (betty blue வில் ரோமன்ஸ் போட்டவர் ) கண்டிப்பாக அதனை தட்டிக்கொண்டு விடுவார்,இவ்வளவு கொடூரமான பெண் கதாப்பாத்திரத்தை நான் இதுவரை பார்த்ததில்லை,
படத்தில் தான் இவர் இப்படி என்றால் இவரது பர்சனல் வாழ்கையும் கொஞ்சம் டெரர் தான்,நகை திருட்டு,காவலரை அடித்தது,போதை பொருள் பயன்படுத்தியது,போன்ற காரணங்களுகாக மூன்று முறை சிறைச்சாலைக்கு சென்று உள்ளார்,மேலும் தனது காதலியை கற்பழித்து கொன்றவனை சிறைச் சாலையில் சந்தித்த 24 வது மணிநேரத்தில்
அங்கேயே திருமணம் செய்துள்ளார்,
___________________________________________________________________________________
Martyrs - 2008
இந்தப் படத்திற்கு கொஞ்ச நாள் முன்னாடி பெரிய அடிதடி சண்டையே நடந்தது ,நம்ம கருந்தேளுக்கு பரிந்துரைத்து அவர் சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்,இதுவும் ஒரு பிரெஞ்சு படம் inside வெளியான அடுத்தவருடம் வெளிவந்து எல்லோராலும் அடுத்த inside என பாராட்டைப் பெற்ற படம்,பெண் ஒருத்தியை வலியை மிஞ்சுகிறவரை சித்திரவதை செய்து அடுத்த நிலையான Martyrs ஆக்குவது படத்தின் கதை,படத்தில் வரும் வன்முறை காட்சிகள் ரொம்ப கொடுரமானவைகள்,
பி.கு : இந்தப் படத்தை பார்த்து விட்டு பிடித்தவர்கள் கமெண்ட் மூலம் தெரியப்படுத்தலாம்,அவர்களுக்கு கோவில் கட்டி
கொழந்த நாக்கில் அலகு குத்தி அங்கபிரதச்னம் செய்வதாக வில்பரிடம் வேண்டிக் கொள்கிறேன்.
(மறந்தே விட்டேன் நம்ம
நாஞ்சில் படத்தை பார்த்துவிட்டு பிடித்து இருந்தது என்று சொல்லி இருந்தார்,தல எங்க இருக்கீங்க.....)
___________________________________________________________________________________
High Tension - 2003
இரண்டு கல்லூரி பெண்கள் தங்கள் வார இறுதி நாட்களை பண்ணை வீட்டில் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட செல்கின்றனர்,அங்கு ஒருவனால் அவள் குடும்பம் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகின்றது,அந்த இரண்டு பெண்களும் அவனை நேருக்கு நேராக எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்படுகின்றது,
படம் பார்க்கும் போது கொஞ்சம் கிளாசிக் ஹாரர் போன்று தோன்றினாலும் இது மாடர்ன் ஹாரர் வகையைச் சேர்ந்ததே,இது ஒரு சைக்கலாஜிக்கல் திர்ல்லர் என்றும் சொல்லலாம்,
இந்த படத்தின் இயக்குனர் நமக்கு கொஞ்சம் அறிமுகமானவர் (Alexandre aja,) Mirrors,The Hills have eyes,Piranha போன்ற படங்களை இயக்கியவர்,இவரின் படங்களில் நான் மாஸ்டர் பிஸாக கருதுவது High Tension,
படத்தின் இறுதி காட்சியைப் பற்றி ஒரு அரை மணி நேரமாவது யோசித்துக் கொண்டு இருப்பீங்க,அப்படி குழப்பிவிட்டு இருப்பார்.
__________________________________________________________________________________
Frontier(s) - 2007
ஒரு கொடூரமான சைக்கோ குடும்பத்திடம் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண்ணின் கதை, இந்தப் படத்தைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம் படம்,மிக அற்புதமான திரைக்கதை,நிறைய கதாப்பாத்திரங்கள்,அவர்களின் பாத்திர அமைப்பு,அவ்வளவும் அருமை,ஹாரர் படங்களுக்கு தேவையான அனைத்தும் நீங்கமற நிறைந்துள்ள படம்,இது ஒரு இன்டி பிலிம்,இந்தப் படம் after dark Fest -ல் 2007 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது,கொஞ்சம் வீக் ஹார்ட் படம் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது,
படத்தில் ஒரு காட்சி:
மனிதர்களை சமைப்பதற்காக தனியாக தயாரிக்கப்பட்ட ஓவனில் உயிரோடு ஒருவனை வேகவைத்து குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்,
இது ஒரு எடுத்துக்காட்டே! இது போல பல காட்சிகள் உண்டு,
டிஸ்கி:
இந்தப் பதிவை எழுதி பல நாள் ஆகுது,கடந்த ஒரு மாதமாக எந்த பதிவும் போடாததால் டிராப்ட்டில் இருப்பதை அப்படியே பப்ளிஸ் செய்கிறேன்.
Posted by டெனிம் (denimmohan@gmail.com) on October 08, 2011 04:51 AM· permalink

சில படங்கள் எப்போது வந்தாலும் காலத்தினால் அழியாமல் இருக்கும். சில படங்கள் காலத்தே பின் தங்கி வந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமோ? என்று தோன்றும். இன்னும் சில படங்கள் காலத்தே வந்திந்திருந்தால் அதன் சிறப்பை பெற்றிருக்குமோ? என்று கேள்வியோடு இருக்கும். சதுரங்கம் மூன்றாவது வகை.
திசைகள் எனும் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் பத்திரிகையில் வேலை செய்யும் ஸ்ரீகாந்த்தை சுற்றி கதை ஓடுகிறது. இவர் கவர் செய்யும் விஷயங்களினால் ஒரு அமைச்சர், ஒரு மாபியா பிஸினெஸ்மேன், ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசர் என்று பல பேர் பாதிக்கப்பட, அதற்கு பழிவாங்க அவரின் காதலியை கடத்திப் போகிறார்கள். ஸ்ரீகாந்த தன் காதலியை யார் கடத்தினார்கள் என்று கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.

பையில் பத்து காசில்லாமல் பஸ் டிக்கெட் வாங்காமல் டிக்கெட் செக்கரிடம் மோதல், பின்பு, நடமாடும் நீதி மன்ற ஜட்சிடம் வாக்குவாதம் என்று ஆரம்பித்து 15 நாள் சிறைச்சேதம் செய்யப்பட்டு சிறைக்குள் வரும் போது அட வித்யாசமான ஹீரோ அறிமுகமாய் இருக்கிறதே என்று கைத்தட்ட தோன்றுகிறது. அதன் பிறகு நடக்கும் காட்சிகள் ஒரு பத்திரிக்கையாளனின் பார்வையாய் வெளியாகி அதனால் நடக்கும் தொடர் பிரச்சனைகள் சுவாரஸ்யம். பத்திரிக்கையாளன் கேரக்டரில் ஸ்ரீகாந்த் நன்றாக செய்திருக்கிறார். தன் கட்டுரைக்கான மிரட்டலை அவர் எதிர் கொள்ளும் விதம், டாமினெண்டான ஒரு பத்திரிக்கையாளனின் திமிர் எல்லாம் ரசிக்க வைக்கிறது.

சோனியா அகர்வால் இளமையாய். தேடித் தேடி காதலிக்கிறார். கடத்தப்படுகிறார். பார்த்த மாத்திரத்தில் காதல் என்றில்லாமல் சின்னச் சின்ன நிகழ்வுகளின் மூலமாய் காதல் வருவதும், காதலை சொல்ல வீட்டிற்கே போய் வழிந்து கொண்டு நிற்பதும், பின்பு காதலனிடமே ஒரு முத்தம் கொடுக்க மாட்டாயா? என்று கேட்பதும் கொஞ்சம் செயற்கையாய் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.
திவாகரின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுக்க வேண்டிய இம்பாக்டை சரியாக கொடுத்திருக்கிறது. வித்யாசாகரின் இசையில் பின்னணியிசையும், விழியில் பாடலும் சுகம்.

எழுதி இயக்கியிருப்பவர் கரு.பழனியப்பன். அச்சு அசலான ஒரு பத்திரிக்கை ஆபீஸை காட்டியிருக்கிறார். இவரே ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் ஸ்ரீகாந்தை அக்கேரக்டரில் இயல்பாய் உலவ விட்டிருக்கிறார். படம் நெடுக கைத்தட்டல் பெறுகிற வசனங்கள் நிறைய. “எங்கள மாதிரி தப்பானவங்க ஜெயிப்போம்னு நம்புறோம். உங்களை மாதிரியான நல்லவங்க தோத்துடுவோம்னு நம்புறீங்க. முதல்ல ஜெயிப்போம்னு நம்புங்க..” முக்கியமாய் பத்திரிக்கையாளர்களை உயர்த்துவது மட்டுமில்லாமல், அதே நேரத்தில் அவர்களைப் பற்றிய விமர்சனமும் வைத்தது இண்ட்ரஸ்டிங். வில்லன் தான் யார் என்று கண்டுபிடி என்று சொல்லி ஹீரோவை அலைய வைப்பது, விபசார நெட்வொர்க், என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் ஆறு வருஷ்ங்களுக்கு முன் வந்திருந்தால் அதிர்ச்சியாக இருந்திருக்கும் இப்போதைய காலகட்டத்தில் இதைவிட பரப்ரப்பான படங்களை பார்த்துவிட்டதினால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாக தெரிவதை தவிர்க்க முடியவில்லை. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நிறைவாய் இருந்திருக்கும்.
சதுரங்கம்- காரம் கொஞ்சம் குறைந்த ஆட்டம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Posted by சங்கர் நாராயண் @ Cable Sankar (sankara4@gmail.com) on October 08, 2011 04:31 AM· permalink
இன்று பெரும்பாலானோர், சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்கின்றனர். இதில் சமைப்பதால் நன்மை, தீமை ஏதுமில்லை.
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, "புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.
செம்புப் பாத்திரங்களில் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டால், ரத்தம்
Posted by நிகழ்காலத்தில்... (arivhedeivam@gmail.com) on October 08, 2011 02:29 AM· permalink

நண்பர்களே ,
என் புதல்வன் 5 வயதான சர்வேஷ்வர் ஒரு வருடமாக டிரம்ஸ் பயின்று வருகிறார் .அவர் தற்சமயம் u.k.g படித்து வருகிறார் .அவர் டிரம்சில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார் .கோவையில் சலிவன் வீதியில் மல்லிசேரி ஸ்கூல் ஆப் மியுசிக் -ல் டிரம்ஸ் பயின்று வருகிறார் .இங்கு எல்லா வகையான இசை கருவிகளும் பயிற்றுவிக்கிறார்கள் .இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இசை பயில்கிறார்கள் .

சர்வேஷ்வர் ஒரு இசை நிகழ்ச்சியில் ( drums solo performance ) தனி திறமை நிகழ்ச்சி டிரம்ஸ் இசை வாசித்தார் .அவர் வாசித்த இசை நிகழ்ச்சி வீடியோ தொகுப்பு எல்லா நண்பர்களின் பார்வைக்காக பதிவிட்டுள்ளேன் .எல்லோரும் இந்த இசை நிகழ்ச்சி தொகுப்பை கண்டு என் புதல்வன் மேலும் மேலும் இசையில் பல சாகசங்கள் புரியவும் ,இசையில் வல்லவனாகவும் வாழ்த்துமாறு வேண்டிக்கிறேன் .

பெற்றோர்களுக்கு வேண்டுகோள் :குழந்தைகளிடம் எந்த துறையில் ஆர்வம் இருந்தாலும் அதை ஊக்குவிக்கலாம்.
Posted by sakthi (jstar83@gmail.com) on October 07, 2011 05:33 PM· permalink
சில பதிவுகளுக்கு முன்னர் குரோர்பதி பற்றி பதிவிட்டிருந்தேன். இன்று அதைப்போலவே மில்லியனர் விளையாட்டினை காணலாம்.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதிலும் உங்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.அதற்கு 4 விதமான விடைகள் இருக்கும்.20 வினாடிக்குள் நீங்கள் சரியான பதிலை தேர்வு செய்யவேண்டும். நீங்கள் தேர்வு செய்த விடை சரியானதுதானா உங்களை


Posted by வேலன். (noreply@blogger.com) on October 07, 2011 05:03 PM· permalink


எனது உலகம் இசையாலும் தமிழாலும் உறவுகளாலும் நிரப்பப்பட்டது என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு..
வானொலி வாழ்க்கையில் இருப்பதால் இசை என்னைச் சுற்றியே இருக்கும்..
அதிகமாக சினிமா இசை தான்..
அந்தந்தக் காலகட்டத்தில் வருகின்ற பாடல்களில் பிடித்த பாடல்களைப் பற்றி இடுகைகளினூடாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி.
அண்மைக் காலத்தில் வெளிவந்த பாடல்களை அமர்ந்திருந்து ஆறுதலாகக் கேட்க நேரம்
Posted by LOSHAN (arvloshan@gmail.com) on October 07, 2011 09:04 AM· permalink
இழிவால் புகழடைந்தவர்களாக உலகில் பலர் உள்ளனர், அவர்களை பின்பற்றவேண்டாம் என்பதற்கான பாடம் என்ற வகையில் அவர்களது செயல்பாடுகள், வாழ்கை வரலாறுகளும் சேர்த்தே பதியவைக்கப்படுகிறது. ஒருவரின் பாலியல் நாட்டம் அல்லது விருப்பம் என்பவை பிறருக்கு துன்பம் விளைவிக்காவிடில் அவரது செயல்பாடுகளில் அரசுகள் தலையிடத் தேவை இல்லை என்பதாக ஐரோப்பிய நாடுகளில், தனிமனித பாலியல் சார்ந்த நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாடுகள் என்று எதுவும் கிடையாது. தனிமனித பாலியல் விருப்பில் இந்தத் கட்டுப்பாடின்மையை பாலியல் தொழில் சார்ந்து பயன்படுத்திக் கொள்ளும் ஐரோப்பிய மற்றும் அவர்களைப் பின்பற்றும் நாட்டினரில் சிலர் வெளிப்படையான பாலியல் தொழிலிலும் அடல்ட் இன்டஸ்ட்ரி என்னும் வயதுவந்தோருக்கான பாலியல் நாட்டம் தொடர்பான நீலப்படம் உள்ளிட்டவைகளை தயாரித்தும் நடித்தும் அதைத் தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
*****
சிங்கப்பூரில் ஆண்டு 2000 க்கு முன்பு சற்று அதிர்ச்சி ஏற்படுத்திய பெயர்களில் அன்னபெல் சாங்க் என்ற பெயரும் ஒன்று, காரணம் தங்கள் குழந்தைகளுக்கு இங்கு இடம் கிடைக்காதா ஏங்கும் ஒரு நல்லப் பள்ளியில் முதல் மாணவியாக இருந்த ஒருவரின் பெயர் புகழ்பெற்ற நீலப்பட நடிகையாகவும் இருந்தது என்பதே அந்த அதிச்சிக்கு காரணம், அவர் பெயர் கிரேஸ் கெக், அவர் எப்படி 'அன்னபெல் சாங்க்' எனப்படும் நீலப்பட நடிகை ஆனார் என்பதே பரவலான பேச்சாக இருந்ததாம். கிரேஸ் கெக் அடிப்படையில் மிகவும் அறிவுள்ள மாணவி அதனால் தான் அவளுக்கு அந்த புகழ்பெற்ற பள்ளியில் இடம் கிடைத்தது. பின்னர் சட்டக் கல்லூரிப் படிப்பிற்காக லண்டன் சென்ற போது தான் அவளது வாழ்க்கைப் பாதையே மாறியது, போதைக்கு அடிமையான அவளுக்கு உதவுவதாகக் கூறிய ஆடவன் ஒருவன் அவளிடம் பேசி உடலுறவுக்கு அழைக்க, அவளும் இணங்க, அவன் தனது நண்பனையும் அழைத்து வந்து குப்பைகள் குவிந்த இடத்தில் வைத்து அவளது விருப்பத்தை மீறி பாலியல் வன்புணர்வில் ஈடுப்பட்டார்களாம். போதைப் பழக்கத்தில் இருந்து மீள முடியதவளாகவும், ஒழுக்கம், ஒழுங்கீனம் தொடர்பில் கல்லூரி அவளை இடைநீக்கம் செய்ய, பிறகு அமெரிக்கா சென்று புகைப்படக் கலைத் தொடர்பான படிப்பில் பட்டப்படிப்பை தொடர்ந்தாள், கூடவே அவள் தன் செலவிற்கு வழிதேட நீலப்பட உலகம் அவளை வேலைக்கு அமர்த்திக் கொன்டது. 'அன்னபெல் சாங்க்' என்ற பெயரில் நீலப்பட நடிகை ஆனாள்.
22 வயதில் நீலப்பட நடிகையாக தொடர்ந்த தன் தொழிலை 52 படங்களுக்குப் பிறகு, தன் 31 வயதில் விட்டுவிட்டு தற்போது தகவல் தொழில் நுட்பத் துறையில் வெப் டிசைனராக பணிபுரிந்து வருகிறாராம்.

எல்லோரையும் போல இவள் ஒரு நீலப்பட நடிகை தானே ? எப்படி அவளது பெயர் பேசப்படும் பெயராகிற்று ? அவர் தொழிலில் அவர் செய்த சாதனை தான் அதற்கு காரணம். அதாவது ஒரே நாளில் 10 மணி நேரத்திற்குள் 251 ஆடவர்களுடன் இவர் உடலுறவு கொண்டதாக விளம்பரம் செய்து வெளியிடப்பட்ட தகவலும் அந்த நீலப்படமும் (World's Biggest Gang Bang') பெரும் சாதனையாக பரப்பப்பட்டது. இதனை கேள்விப்பட்ட சிங்கப்பூர் சீனமக்கள் 'சிங்கப்பூர் பெண் நிகழ்த்தி இருப்பது கேவலமான சாதனை, நாம் வெட்கப்பட வேண்டி இருக்கிறதே' என்று அதிர்ச்சி அடைந்தனர்.
*****
நான் படித்த தகவல் அடிப்படையில் நீலப்படங்களில் நடிப்பவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் ஒன்றும் கிடையாது, மற்ற தொழில்களில் முகவர்கள் வருமானம் ஈட்டுவதைப் போலவே பாலியல், நீலப்படத் தொழில்கள் முகவர்களும், தயாரிப்பாளர்களும் மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர், ஒரு நீலப்படம் நடிப்பவர்களுக்கு நாள் கூலியாக அவர்களின் வயதிற்கேற்ப ஒரு சில ஆயிரங்கள் வரைக்கும் கிடைக்கும், அவர்களுக்கு மருத்துவ உதவியோ பிற உதவிகளோ கிடைக்காது, அன்றாடம் மருத்துவ சோதனைகளை சொந்தப் பணத்தில் தான் அவர்கள் செய்து கொள்ள வேண்டும். இந்த தொழில் வரும் பெண்கள் 30 வயதிற்குள் அவை கசந்து போய்விடும், காரணம் சொன்னபடி தயாரிப்பாளர்கள் அவருக்கு ஊதியத்தைத் தருவதில்லை, சாதனை நிகழ்த்திய அன்னபெல் சாங்கிற்கு தயாரிப்பாளர் பேசியபடி 10000 டாலர் கொடுக்கவும் இல்லையாம்.

நீலப்பட நடிகையாக வலி நிறைந்த தன் கதையை டாக்குமெண்ட்ரியாக எடுத்தப்பிறகு, தொழில் இருந்து ஓய்வு பெற்ற சாங்க், தனது இணையப்பக்கத்தை மூடிவிட்டு 'முகப்பில் அன்னபெல் சாங்க் இறந்துவிட்டாள்' என்று அறிவித்துவிட்டு தற்போது தான் பார்த்துவரும் கணிணி தொழில் நுட்பத்துறையில் பணி புரிந்துவருகிறாளாம், அவரது பழைய வாழ்க்கைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேள்விகளை தவிர்க்கிறாராம், 'நான் மறந்த ஒன்றைப் பற்றி என்னிடம் சொல்ல ஒன்றும் இல்லை' என்று ஒதுங்குகிறாராம். அவர் படித்தவர் என்பதால் அதிலிருந்து விலகி புதிய வழிக்குச் செல்ல முடிந்தது, படிக்காதவர்களுக்கு உடல் தளர்வுறும் வரையில் சொற்ப பணத்திற்கு அதே தொழில் தான்.
இதுபோன்ற தொழில்களை யாரும் விரும்பிச் செய்வதோ, தொடர்வதோ கிடையாது, தவறான பழக்க வழக்கங்கள் அவர்களை அங்கு தள்ளிவிடுகிறது
இன்றும் கூட எதோ ஒரு நடிகையின் நீலப்படம் கிடைப்பதாகத் தகவல் வந்தால் பார்க்க விருப்பமில்லாதவராகோ, அது இங்கு கிடைக்குமா என்று வீடியோ கடைக்காரர்களிடம் கேட்காதவர்கள் மிகக் குறைவே. எந்த ஒரு சந்தைகளும் தேவைக்கு முன்பே தோன்றிவிடுவதில்லை, தேவைகள் உருவாகும் போது அதனை நிரப்ப சந்தைகள் உருவாகின்றன, சதைத் தொழில்களான பாலியல் மற்றும் நீலப்படப் சந்தைகளின் பெருக்கத்திற்கும் இதே தான் காரணம். விருப்பமின்மையால் தள்ளப்படும் பெண் பாலியல் தொழிலாளிகள், நீலப்பட நடிகைகளின் வாழ்க்கை என்பது 'தீயில் விழுந்த தொழுநோயாளியின் போராட்டம் போன்றது, தானாக மீளவோ, அறுவெறுப்பின்றி அவர்களை மீட்க முன்வருபவர்களோ மிகக் குறைவே. அன்னபெல் சாங்க் மீண்டுவிட்டார். ஆனால் அவரால் அவரது பெற்றோர்கள் பட்ட மனக்காயத்தை அவரால் ஆற்ற முடியாது.
விக்கி இணைப்பு :
Annabel Chong*****
சிங்கப்பூரில் பிறந்து தற்போது நியூசிலாண்டில் வசிக்கும் மற்றொரு பெண்ணின் நீலப்பட நடிகையாகும் விருப்பம் சென்றவாரம்
செய்தியாகி இருந்தது, அதில் அவர் தனது முன்னோடியாக குறிப்பிட்டு இருப்பவர்களில் 'அன்னபெல் சாங்க்' கும் ஒருவர், என்பதால் அன்னபெல் சாங்க் பற்றிய குறிப்புகள் கிடைத்தது
Posted by கோவி.கண்ணன் (noreply@blogger.com) on October 07, 2011 06:20 AM· permalink
அந்த ஆலமரம்தான் அனைத்துக்கும் சாட்சி.
பத்தொன்பது வருடங்களுக்கு முன்பாக இம்மரத்துக்கு கீழேதான் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒட்டுமொத்தமாக நிற்கவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் முதியவர்களும், பெண்களும். அடி, உதை, அநியாயம், அட்டூழியம், அட்டகாசம்.
அப்போது துடிப்பான இளைஞர்களாக இருந்த பலரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தப்பியவர்கள் மலைகளுக்கு மேலே சென்று காடுகளில் உணவின்றி, மாற்று உடையின்றி, மனம் பேதலித்துப் போய் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஆலமரத்தின் அடியில் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் இருந்து, திருமணமாகாத பதினெட்டு இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்தார்கள். அவர்களை ஒரு லாரியில் ஏற்றி, ஏரிக்கரைக்கு கொண்டுச் சென்று.. அங்கிருந்த புதர் மறைவுகளில்... கூட்டம் கூட்டமாக...
அப்படியும் வெறி அடங்காதவர்கள் அப்பெண்களை அழைத்துச் சென்று அரூரில் ஒரு வாரம் வைத்திருந்தார்கள். அங்கும் தொடர்ந்தது பாலியல் வன்முறை. பின்னர் இவர்களை சிறைகளுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களில் பலர் குற்றுயிரும், குலையுயிருமாக ஆகியிருந்தார்கள்.
சம்பவம் நடந்த கருப்பு ஜூன் நாட்களை மீண்டும் நினைக்கும்போதே கதறியழுகிறார் முதியவரான பரந்தாயி.
“நாய்களை விட கேவலமாக நடத்தப்பட்டோம். எங்கள் இளைஞர்கள், பெண்கள் அனுபவித்த சித்திரவதைகளை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. இப்போது கிடைத்திருக்கும் தீர்ப்பினை எங்களுக்கான நியாயமாக நினைக்கவில்லை. கவுரவமாக நினைக்கிறோம். பத்தொன்பது வருடங்கள் கழித்து எங்கள் ஊர் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கிறது. எங்கள் மீது அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள் தவறென்று நிரூபணம் ஆகியிருக்கிறது. தாமதமான தீர்ப்பாக இருந்தாலும், நாங்கள் வரவேற்கத்தக்க தீர்ப்பு. வெளியூர்களுக்கு செல்லும்போதெல்லாம் ஊர்ப்பெயரை கேட்டால் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்த எங்கள் இளைஞர்கள், இனி தைரியமாக சொல்வார்கள் ‘நான் வாச்சாத்திக்காரன்’ என்று”
பரந்தாயிக்கு ஏற்பட்டிருக்கும் பெருமிதம்தான் ஊர்க்காரர்கள் அனைவருக்குமே. தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, இத்தனை வருடங்களாக தங்கள் மீது திணிக்கப்பட்ட இழிவினை ஒட்டுமொத்தமாக துடைத்து எறிந்திருப்பதாக கருதுகிறார்கள்.
தீர்ப்பினைக் கேள்விப்பட்டதுமே அதே ஆலமரத்தின் கீழ், ஒட்டுமொத்த கிராமமும் குழுமியது. பட்டாசு வெடித்து தீபாவளியாய் கொண்டாடியது. அருகிலிருக்கும் குலத்தெய்வக் கோயில் நேர்த்திக் கடன்களால் மூச்சு திணறுகிறது. தீர்ப்புக்கு முன்னதாக குலத்தெய்வத்திடம், நல்லத் தீர்ப்பு கிடைத்தால் அவரவர் வசதிக்கு நேர்த்தி செய்வதாக ஒவ்வொரு கிராமத்தவரும் வேண்டிக் கொண்டார்களாம்.
சித்திரவதை அனுபவித்தவர்களை விட, அதை கதைகதையாய் கேட்டு, கேட்டே வளர்ந்த அடுத்த தலைமுறை, அதிகார வர்க்கம் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. இந்த இளைஞர்களின் கோபம் நல்லவேளையாக முறைப்படுத்தப்பட்டு, அறச்சீற்றமாக மட்டுமே வெளிப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு மாறியிருந்தால்..? எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.
ராமதாஸ் பிறந்த அன்றுதான் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக்குழு வாச்சாத்திக்குள் நுழைந்தது. தங்கள் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பிருக்கும் இளைஞர்களை முதலில் கைது செய்தது. ராமதாஸின் அப்பாவும் அந்த இளைஞர்களில் ஒருவர்.
ஏழு நாள் குழந்தையாக முதன்முதலாக தனது தந்தையை ராமதாஸ் சேலம் சிறைச்சாலைக்குப் போய் பார்த்தார். கையில் கைக்குழந்தை, கணவனோ சிறையில். காட்டில் விறகுவெட்டிதான் வாழ்க்கையே. ஊரில் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் சித்திரவதை. ராமதாஸின் அம்மா செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
“என் அம்மாவும், நானும் இன்றும் உயிரோடு இருப்பதே அதிசயம்தான்!” என்கிறார் இப்போது பத்தொன்பது வயது ஆகும் மாணவரான ராமதாஸ். போலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பது இவரது லட்சியம். “எங்க ஊருலே எல்லாருக்கும் போலிஸுன்னா கெட்ட போலிஸுதான். நல்ல போலிஸ்னா எப்படியிருக்கும்னு நானே மாறிக் காட்டணும்னு ஆசை” என்கிறார்.
இவரைப்போலவே வாச்சாத்தியின் இன்றைய இளைய தலைமுறை ஒட்டுமொத்தமாக கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. தங்களது முந்தைய தலைமுறையின் அறியாமைதான் அவர்களுக்கு நேர்ந்த அத்தனை கொடுமைகளுக்கும் காரணமென்று நம்புகிறது. எனவே நல்ல கல்வி கற்று, அரசுத்துறை பணியிடங்களில் அமர்ந்து, அதிகாரம் பெற்றவர்கள் அத்தனை பேருமே கெட்டவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கத் துடிக்கிறது.
“எதிர்த்துப் பேசத் தெரியாதவர்கள் என்பதால், அதிகாரம் கையில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியுமா? இந்திய அரசியல் அமைப்பு சட்டமே பழங்குடியினத்தவருக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாக இருக்கும்போது, சட்டத்தைக் காப்பவர்களே அதை மதிக்காமல் போனதுதான் கொடுமை” என்று பாயிண்ட், பாயிண்டாக பேசும் விஜயகுமாருக்கு இருபத்தி ரெண்டு வயது. மூன்று வயது குழந்தையாக இருந்தவரை தூக்கிக் கொண்டு மலைகாடுகளில் இவரது பெற்றோர் இலக்கின்றி அலைந்து திரிந்திருக்கிறார்கள். அந்த கொடூர நாட்கள் இன்னமும் இவருக்கு லேசாக நினைவில் நிற்கிறது. அவ்வப்போது இரவுகளில் கொடுங்கனவாக வந்து துன்புறுத்துகிறது. தற்போது கிடைத்திருக்கும் நீதி, கடந்த கால துன்பங்களுக்கு ஒத்தடம் தருவதாக அமைந்திருப்பதாக சொல்லும் விஜயகுமார், ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறார்.
இன்னும் கூட மாவட்ட நிர்வாகம், காவல்துறை போன்ற அரசுத்துறைகள் வாச்சாத்தி மக்கள் மீது வன்மமாக இருப்பதாக இவ்விளைஞர்கள் நினைக்கிறார்கள். ஏதேனும் அரசு வேலை தொடர்பான நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லும்போதோ, அல்லது வேறேதும் சான்றிதழ் பெறுவது மாதிரி சம்பிரதாயமான விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களை அணுகும்போதோ ‘வாச்சாத்திக் காரன்’ என்றாலே வெறுப்பினை உமிழ்கிறார்களாம்.
“எவ்வளவோ தடைகளை கடந்த இருபது ஆண்டுகளில் கடந்து வந்திருக்கும் வாச்சாத்தி, இதையும் கடந்துச் செல்லும். வாச்சாத்தியின் புதிய தலைமுறை ஒருநாள் அரசுப் பதவிகளில் ஆட்சி செலுத்தும். எங்களுக்கு அதிகார வர்க்கத்தால் நேர்ந்த அடக்குமுறையை கருத்தில் கொண்டு, இனி எந்தப் பிரிவு மக்களுக்கும் இம்மாதிரி கொடுமைகள் ஏற்படாமல் எங்கள் இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கிராமவாசி முருகன்.
வாச்சாத்தியில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளின் கொடிகளும் இன்று பறக்கிறது. தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு வரும் இரு பிரதானக் கட்சிகளும், மத்தியில் ஆளும் தேசியக் கட்சிகளும் கூட வாச்சாத்தியை கண்டுகொண்டதில்லை. அன்று ஆதரவாக வந்து நின்ற ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் என்று ஊர்வாசிகள் தெரிவிக்கிறார்கள். அன்று மட்டுமல்ல. தொடர்ச்சியாக இந்த பத்தொன்பது ஆண்டுகளும் அக்கட்சி தங்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து இயக்கம் கட்டமைத்து, போராட்டங்கள் நடத்தி வருகிறது என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்கள்.
“அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை வெறியாட்டத்தால் பாதி பேர் சிறைக்குச் சென்றார்கள். மீதி பேர் மலைக்காடுகளுக்கு தப்பிச் சென்று பயந்து வாழ்ந்தார்கள். திரும்பவும் யாரும் இந்த ஊருக்கு குடிவந்துவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. ஓடுகள் பிரிக்கப்பட்டன. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் களவாடப்பட்டன. எங்கள் வாழ்வாதாரமான ஆடுகள் வனம், காவல், வருவாய்த்துறையினருக்கு உணவாகியது. மாடுகளை கொண்டுபோய் சந்தையில் விற்றார்கள். குடிநீர் கிணறுகளில் ஆடுகளின் மிச்ச எச்சங்களை எறிந்து பாழ்படுத்தினார்கள். யாரும் வாழத் தகுதியற்ற ஊராக வாச்சாத்தியை மாற்றி, மொத்தமாக வனப்பகுதியாக மாற்றிவிடுவது அவர்களது திட்டமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் காரணம் மலை மீது இருந்த சந்தனமரங்கள்” என்று நினைவு கூர்கிறார் கோவிந்தன்.
பெண்களும், அவர்களோடு இருந்த குழந்தைகளும் கூட சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். கர்ப்பிணியாக இருந்த பெண்களுக்கு சிறையிலேயே பிரசவம் கூட ஆனது. இந்திராணி என்பவருக்கு ஜெயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘ஜெயில்ராணி’ என்றுகூட பெயர் சூட்டினார்கள்.
ஊர் வெறிச்சோடிய நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை வாச்சாத்திக்கு வருகை தந்தார். மக்கள் யாருமில்லாததை கண்ட அவர், ஊர் மத்தியில் ஆலமரத்துக்கு அருகில் செங்கொடி ஒன்றினை நட்டார். இந்தக் கொடி இருக்கும் வரை உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஊருக்கு திரும்ப வாருங்கள் என்று மலைகளுக்குப் போய் மக்களை அழைத்தார். ஒவ்வொருவராக தைரியம் பெற்று வரத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேட்டறிந்த அண்ணாமலை, அரூர் போலிஸில் வாச்சாத்தி மக்கள் சார்பாக முதன்முறையாக புகார் அளித்தார்.
போலிஸால் புகார் கண்டுகொள்ளப்படாத நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தியது. இதன் பிறகே விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்காக போராடிய இயக்கங்களும் சி.பி.ஐ. விசாரணை கோரினார்கள். சி.பி.ஐ. மிக நேர்மையாகவும், விரிவாகவும் வழக்கை கொண்டு சென்றதாக கிராமத்தவர்கள் நன்றியோடு சொல்கிறார்கள். பின்னர் கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது. பின்னர் தர்மபுரி மாவட்ட அமர்வுநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, இப்போது தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
அண்ணாமலை செங்கொடி நட்ட காலத்திலிருந்தே, இம்மக்களுக்காக போராடி வருபவர் டில்லிபாபு. அப்போது இளைஞராக இருந்த இவர் (இப்போதும் இளைஞர்தான்), தற்போது அரூர் சட்டமன்ற உறுப்பினர். ஊருக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் இவருடன் நன்கு பழகியவர்களே. திண்ணை ஒன்றில் வசதியாக அமர்ந்துக் கொண்டு, மக்கள் புடைசூழ நம்மிடம் பேசினார்.
“தீர்ப்பினை எங்களுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதவில்லை. எங்களுடைய தொடர்போராட்டங்களில், நீண்டகாலமாக சலிப்படையாமல் பங்குகொண்ட வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி இது. நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட சிறப்பான தீர்ப்பை பெற்றிருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்று வாசிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றின் புதிய சாதனை. பழங்குடியினரையும், ஒடுக்கப்பட்டோரையும் கிள்ளுக்கீரையாக பார்க்கும் அதிகார வர்க்கத்துக்கு கிடைத்திருக்கும் மரண அடி இது.
அதே நேரத்தில் நீதிமன்றம் பரிந்துரைக்கும் நிவாரணம் எங்களுக்கு பெரிய திருப்தியில்லை. பழங்குடியினர் பாதிக்கப்பட்டால் தந்தாக வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் நிவாரணம் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். அது மிக மிகக்குறைவான தொகை. மற்ற கலவரங்களிலோ, சம்பவங்களிலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவுரீதியாக பல லட்சங்களையும், கோடிகளையும் அள்ளித்தரும் தமிழக அரசு வாச்சாத்தி மக்களுக்கும் அதே பரிவினை காட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் டில்லிபாபு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்திட பாடுபட்ட இயக்கம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். இவ்வியக்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகமும் நிவாரணம் குறித்து பலமாக வலியுறுத்துகிறார்.
“குற்றம் நடந்தது உண்மை. மக்கள் பாதிக்கப்பட்டதும் உண்மை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவே அரசு அனைத்துக்கும் முழு பொறுப்பேற்று, ஊரின் அத்தனை புனரமைப்பு வேலைகளையும் செய்துத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட பதினெட்டு பெண்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. எனவே எங்கள் போராட்டம் இதோடு முடிந்துவிடவில்லை. எனவே உரிய நிவாரணம் பெற சட்டப்படி எங்கள் போராட்டங்கள் தொடரும்” என்கிறார் சண்முகம்.
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் என்ன ஆனார்கள்?
பதினெட்டுப் பெண்களில் ஒருவரான சக்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்கிறார் :
“எங்கள் மீது விழுந்த கறையை உடனடியாக துடைக்க ஊர்ப்பெரியவர்கள் முயன்றார்கள். எல்லாவற்றையும் மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை நாங்கள் துவக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். அக்கம் பக்கம் ஊர்களில் எங்களை திருமணம் செய்துக்கொள்ள தயங்கினார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் ஊர் இளைஞர்களே முன்வந்து பரந்த மனப்பான்மையோடு எங்களை கட்டிக் கொண்டார்கள். இப்போது குழந்தை, குட்டி, குடும்பம் என்று பிரச்சினையில்லாமல், பழசையெல்லாம் மறந்து வாழ்கிறோம்.
நீதிமன்றத்தில் கிடைத்திருக்கும் தீர்ப்பு எங்கள் ஊர் மீதான பழியை துடைத்தெறிந்திருக்கிறது என்கிற வகையில் எல்லோரைப் போலவும் நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்”
வாச்சாத்தி மக்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், தீர்ப்பில் குற்றவாளிகள் என்று சுட்டிக் காட்டப்பட்டவர்கள் மத்தியில் குமுறல் நிலவுகிறது. வாச்சாத்தி சம்பவத்தின் போது வனகாவலராக பணியில் இருந்து, இப்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருவரை அரூரில் சந்தித்தோம். பெயர் வெளியிட விரும்பாத அவர், தற்போது தர்மபுரியில் வசிக்கிறார்.
“மக்கள் மீது அத்துமீறல் நடந்தது உண்மைதான். பணியில் இருந்த பலரும் கூட இதை சகிக்க இயலாமல், மவுனசாட்சியாக மனம் ஒட்டாமல் இருந்தோம். இப்போது நீதிமன்றத்தில் ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவில் இருந்த எல்லோருமே குற்றவாளிகள் என்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது சரியல்ல. அப்படியெனில் எங்களை இந்த குறிப்பிட்ட பணிக்காக அனுப்பிய மேலதிகாரிகள் மீதும் வழக்குத் தொடுத்து குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டியதுதானே?
என்னைப் போன்றே நிறைய நிரபராதிகள் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். இங்கே நீதி நின்று, நிதானித்து செயல்பட்டிருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டதும், அவர்கள் மீது அதிகார அத்துமீறல் நடந்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சி.பி.ஐ. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், தீர்ப்பு கிடைக்க இத்தனை காலமாகியிருக்கிறது.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க காலதாமதம் ஆவதைக்கூட சகித்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க இருபது ஆண்டுகளா? இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்பது வாச்சாத்தி வழக்குத் தீர்ப்பினால் உறுதியாகியிருக்கிறது. ஆனால் அது விரைவான நீதியா என்பது உடனடியாக இந்திய சட்டமன்றங்களிலும், பாராளுமன்ற அவைகளிலும் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
சில புள்ளி விவரங்கள்
• வாச்சாத்தி கிராமவாசிகளில் ஆண்கள் 15 பேர், குழந்தைகள் 28 பேர், பெண்கள் 90 பேர் என மொத்தம் 133 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் புனையப்பட்டது. சந்தன மரம் கடத்தியது, கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது கொலைமுயற்சி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.
• வாச்சாத்தியில் மக்கள் மீதான வன்முறை சம்பவத்தின் போது, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த கூட்டுக்குழுவில் இருந்தவர்கள் மொத்தம் 269 பேர். இவர்களின் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதம் இருக்கும் 215 பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
• குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டவர்களில் 12 பேருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. 70 பேருக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் 2,000 ரூபாய் அபராதம்.
• குற்றவாளிகளிடம் இருந்து பெறப்படும் அபராதத்தொகை சம்பவத்தில் பாலியல் வன்முறையால் பாதிப்படைந்த 18 பெண்களுக்கு பிரித்துத் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏன் நுழைந்தார்கள்?
வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த கூட்டுப்படை 1992 ஜூன் மாதம் ஏன் வாச்சாத்திக்குள் நுழைந்தது?
பல்வேறு கதைகள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
சித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது வாச்சாத்தி. அக்காலத்தில் சந்தன மரங்கள் மிகுந்திருந்த மலைத்தொடர் இது. வாச்சாத்திக்குள் நுழைந்தால்தான் சித்தேரி மலை மீது ஏறமுடியும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரக அலுவலர்கள் இங்கே முறைகேடாக சந்தனம் வெட்டிக் கொண்டிருந்தார்கள். இரு தரப்பும் தங்கள் எல்லைகளை மீறி கடந்துப்போய் மரம் வெட்டியதால் ஏற்பட்ட மோதலே ‘வாச்சாத்தி ரெய்டு’க்கான முக்கியமான காரணம் என்கிறார்கள் கிராமவாசிகள் சிலர். ‘கடத்தல்’ என்று தெரியவந்ததுமே, இருதரப்புக்கும் மரம் வெட்ட வாச்சாத்தி மக்கள் மறுத்ததால், அவர்கள் மீது அதிகார அடக்குமுறை ஏவப்பட்டது என்பது இவர்களின் வாதம்.
‘வீரப்பன் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக இது நடந்தது’ என்று சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. “வீரப்பனை உங்களைப் போலவே நாங்களும் செய்தித்தாள்களிலும், டிவிகளிலும்தான் பார்த்திருக்கிறோம்” என்கிறார் ஊர்க்காரர் கோவிந்தன்.
வாச்சாத்தி கிராம மக்கள் சந்தன மரத்தை சட்டவிரோதமாக வெட்டி கடத்தினார்கள் என்பது வனத்துறை அவர்கள் மீது சாட்டிய குற்றச்சாட்டு. கூலிக்காக சிலர் வெட்டியது உண்மைதான். ஆனால் கடத்தல் போன்ற நோக்கங்கள் இம்மக்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை எனப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணை இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. வாச்சாத்தி கிராமவாசிகளில் சிலர் சந்தனக் கடத்தல் முதலைகளுக்கு கூலிகளாக பணியாற்றினார்கள் என்று விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சந்தனக் கடத்தலை தடுக்கவே வனத்துறை தனிப்படைப்பிரிவுகளை உருவாக்கி, ‘சிறப்பு ஆபரேஷன்களை’ நடத்தியதாகவும் சி.பி.ஐ. விசாரணை தெரிவிக்கிறது. இந்த ஆபரேஷன்களில் ஒன்றாக மலைவாழ் மக்கள் மீதான தறிக்கெட்ட வன்முறையும் அமைந்துவிட்டதுதான் துரதிருஷ்டம்.
வன்முறைக்குப் பிறகு
பாலியல் வன்முறைக்கு ஆளாகி, பின்னர் சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர் சூரியகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திரும்பவும் ஊருக்கு திரும்பிய கதையை சொல்கிறார்.
“முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை, இப்போது அரூர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் டில்லிபாபு ஆகியோர் சிறைக்கு வந்து எங்களை சந்தித்தார்கள். எங்களை வெளியில் எடுக்க ஏற்பாடுகளை அவர்கள்தான் செய்தார்கள்.
ஊருக்குள் நுழைந்தபோது ‘மயான அமைதி’ என்பார்களே? அதை உணர்ந்தோம். ஊருக்குள் யாருமே இல்லை. என்னுடைய பெற்றோர் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை. எந்த காலத்திலோ கைவிடப்பட்ட ஊர் மாதிரி, வெறிச்சோடி இடிபாடுகளுக்கு இடையே இருந்தது எங்கள் ஊர். எனக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.
எங்களுக்கான மாற்றுத்துணியை கூட மார்க்சிஸ்ட் கட்சிதான் ஏற்பாடு செய்தது. திரும்பவும் தாக்கப்படுவோமோ என்கிற அச்சத்தில் ஊர்க்காரர்கள் மொத்தமாக மலைகளுக்குச் சென்று வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். ஊர் மத்தியில் செங்கொடி நடப்பட்டு, ஒவ்வொரு மலையாகச் சென்று மக்களை அழைத்து வந்தார்கள் அண்ணாமலையும், டில்லிபாபுவும்.
எங்களுக்கு கொடுமை நடந்து பதிமூன்று நாட்களுக்குப் பிறகே வெளியுலகத்துக்கு தெரியவந்தது. அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது”.
(நன்றி : புதிய தலைமுறை)
Posted by யுவகிருஷ்ணா (yuvakrishna@gmail.com) on October 07, 2011 06:03 AM· permalink

வழக்கமாய் மதுரை, திருநெல்வேலி, கோவை என்றிருந்த்ததை வேலூருக்கு மாற்றியிருக்கிறார்கள் இப்படத்தின் மூலம். படம் முடிந்து ரொம்ப நாள் ஆகியும் வ்ளியிட சமயம் கிடைக்காமல் வெயிட் செய்து மேலும் வெளியிட லேட்டானால் வெளங்காது என்பதால் உடனடியாய் ஓடுகிற வரை ஓடட்டும் என்று பதட்டமாய் கிடைத்த தியேட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

வழக்கமாய் காக்க… காக்க முதல் சமீபத்தில் பார்த்த எல்லா போலீஸ் கதைகளைப் போல.. இதிலும் ஹீரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. ஒரு குக்கிராமத்தில் விவசாயக்கூலியின் மகன் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஐ.பி.எஸ் ஆகிறார். இதற்கு நடுவில் காதல், கல்யாணம் எல்லாம் முடிந்து வேலூர் மாவட்ட ஏ.எஸ்.பியாய் பதவியேற்கிறார். எல்லா தமிழ் பட போலீஸ் ஹீரோ போல் இவர் செல் நம்பரை விளம்பரப்படுத்தி ஊருக்கே ராஜாவாகிறார். வழக்கம் போல அரசியல்வாதி வில்லன் அல்லக்கை, அரசியல்வாதி மந்திரி என்று வில்லன் கும்பல். இவர்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பதுதான் கதை. முடிந்தால் பார்த்துக் கொள்ளூங்கள்.

நந்தா ஒரு நல்ல நடிகர். சரியான நேரம் அமையாமல் அலைந்து கொண்டிருப்பவருக்கு ஹீரோ ரோல். காக்கி சட்டை விரைப்புடன் நடிப்பது ஓகேதான் ஆனால் எல்லாக் காட்சியிலும் சிடுசிடுவென இருப்பது எரிச்சலாய் இருக்கிறது.
பூர்ணா தான் கதாநாயகி. பெரிதாய் ஸ்கோர் பண்ண ஏதுமில்லை. பார்க்கிறார், அழுகிறார், ரெண்டு டூயட் பாடுகிறார். அவ்வளவே. அமைச்சராக ஒரு புது வில்லன் பார்க்க ஓகேவாக இருக்கிறார். அழகம் பெருமாள் மந்திரியின் முக்கிய அல்லக்கை கேரக்டர். இவர் குரலில் இருக்கும் ந்டிப்பு பாடிலேங்குவேஜில் இல்லாதது வருத்தமே. படத்தை ஆங்காங்கே கலகலக்க வைப்பது சந்தானம் மட்டுமே.

சுந்தர் சி. பாபுவின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்கிறார்ப் போல இல்லை. ஒளிப்பதிவு பற்றியும் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.என்.ஆர். மனோகர். இதற்கு முன்பு மாசிலாமணி படத்தை இயக்கியவர். வழக்கமான மசாலா கதைதான் அதில் முடிந்த வரை சுவாரஸ்யத்தை தர முயற்சித்திருக்கிறார். நந்தாவின் சின்சியர் கேரக்டரை சொல்லிவிட்டு அவருக்கு வரும் ப்ரச்சனைகள் என்று எடுத்துக் கொள்ளூம் போது படு வழக்கமான ப்ரச்சனைகளையே எடுத்துக் கொண்டதால் சுவாரஸ்யம் கெட்டுப் போகிறது. வேலையை ரிசைன் செய்தவர் அடிபட்டு ஒரு மாதமாவது ஆயிருக்கும். மீண்டும் எப்படி விசாரணைக்கு பின் வேலைக்கு சேர்ந்தார் என்பதற்கான பதிலில்லை. படத்தில் முக்கியமான விஷயம் வேண்டாத இடத்தில் காதல் பாட்டுக்கள் போடாமல் சட்டு புட்டென காதல் காட்சிகளை முடித்தது. ஆங்காங்கே சிறு சிறு டயலாக்குகள் மூலம் காதலை, அன்பை சொன்னவிதம். எதிராளிகளை சமாளிக்கும் ஐடியாக்கள் எல்லாம் படு பழசு. பஸ்ஸில் ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு ஒண்ணுமில்லை வெறும் அஜீரணம் தான் என்று ஒரு ஆர்டினரி மாத்திரையை கொடுத்து விட்டு ஆஸ்பிட்டலில் சேர்ப்பது எல்லாம் அரத பழசு. மொத்தத்தில் மாவட்டத்தை தவிர வேறு ஏதும் புதிதாய் இல்லாத படம்.
வேலூர் மாவட்டம்- வறட்சிசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Posted by சங்கர் நாராயண் @ Cable Sankar (sankara4@gmail.com) on October 07, 2011 05:27 AM· permalink
ஆயுத வியாபாரியின் கதையை சொல்லும் படம்.
ஆபிரிக்காவில்,லெபனானில்,ஆப்கானிஸ்தானில் போராடும் "விடுதலை படைகள்" அவர்களை ஒழிக்க முயலும் அரசுகள் அனைத்துக்கும் ஆயுத சப்ளை செய்கிறார் யூரி ஆர்லொவ் (நிக்கலஸ் கேஜ்).கூட உதவிக்கு அவரது தம்பி.ஆயுதம் வாங்கும் குழுக்கள் அவருக்கு பிளட் டயமண்ட் எனப்படும் ரத்த வைரங்களை அளிக்கின்றன.சில சமயம் கொக்கெயினை அளிக்கின்றன.காரணம் அந்த நாடுகளில் பணம் இல்லை.
ஆயுத விற்பனை மூலம் கணக்குவழக்கற்ற பணத்தை சம்பாதிக்கிறார் யூரி. நடிகை ஒருவரை மணக்கிறார்.திரையுலகில் வெற்றி காணமுடியாத நடிகை யூரியை மணந்து இல்லத்தரசியாக இருந்து மனநிறைவு காண்கிறார். அவர் நடித்து சம்பாதிக்க ஆசைப்பட்டதை விட பணம்,வைரம்,உடைகள்,வீடு, என அனைத்தும் யூரியிடம் இருக்கிறது. அதனால் யூரியின் தொழிலை பற்றி அவர் அதிகம் கேள்வி கேட்பதில்லை. யூரி ஆயுதம் விற்கபோன இடங்களில் அப்படி, இப்படி இருந்தாலும் மனைவிக்கு படுக்கையில் எந்த குறையும் வைப்பதில்லை.மனைவிக்கு பகிரங்கமாக தெரியும் வகையில் தவறும் செய்வதில்லை.அதனால் அவரது மனைவி இந்த வாழ்க்கைக்கு தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்.அதில் மகிழ்ச்சியும் காண்கிறார்.
யூரியை துரத்தும் இன்டெர்போல் ஏஜென்ட் வாலைன்டைனை யூரி அனாசயமாக சமாளிக்கிறார்.விமானம் நிறைய ஆயுதம் ஏந்திபோகும் யூரியை நடுவானில் ஜெட் விமானம் மூலம் மறிக்கிறார் ஏஜென்ட் வாலன்டைன்.விமானத்தை ஆபிரிக்க சாலை ஒன்றில் இறக்கும் யூரி இன்டெர்போல் வருவதற்குள் அனைத்து ஆயுதங்களையும் அங்கிருந்த கிராம மக்களுக்கு கொடுத்து விடுகிறார்.
இறுதியில் வாலன்டைன் சென்டிமென்ட் அஸ்திரத்தை கையில் எடுக்கிறார்.யூரியின் மனைவியிடம் ஆயுதம் கடத்தும் ரகசியத்தை போட்டு உடைக்கிறார்.கணவன் மேல் உள்ல விசுவாசத்தால் வாலன்டைனுக்கு உதவ மறுக்கும் நடிகை கணவனை தொழிலை நிறுத்த சொல்லி நிர்ப்பந்திக்கிரார்.யூரியும் ஒப்புகொண்டு நேர்மையான தொழிலுக்கு செல்கிறார்.
ஆனால் பழைய குருடி கதவை திறடி கதையாக மீண்டும் தொழிலில் இறங்குகிறார்.அவரது மனைவி அவரை பின் தொடர்ந்து போய் அவர் ஆயுதம் பதுக்கி வைத்திருக்கும் கிடங்குகளை கண்டுபிடிக்கிறார்.அவரது மனைவியை பின் தொடர்ந்த இன்டெர்போல் ஆயுத கிடங்கை பிடித்துவிடுகிறது.
யூரி கைது செய்யபடுகிறார்.
"உன் ஆயுள் முழுவதும் இனி சிறையில் தான் கழிக்கவேண்டும்" என்கிறார் ஏஜென்ட் வாலன்டைன்
"உனக்கு புரியவில்லை" என்கிறார் யூரி."நான் ஆயுதம் விற்பது உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களுக்கு.உலகின் பல நாடுகளின் ஜனாதிபதிகளை நான் பெயர் சொல்லி அழைப்பது வழக்கம்.என்னை ஒரே ஒரு செகண்டு கூட உன்னால் ஜெயிலில் வைக்க முடியாது"
சொன்னதுபோலவே ஒரு செகண்டு கூட ஜெயிலில் இருக்காமல் வெளியே வருகிறார்.அவரது மனைவியும்,குழந்தையும் அவரை விட்டு பிரிகிறார்கள்.யூரி தன் தொழிலை தொடர்கிறார்
(கதையில் வரும் சம்பவங்கள் உண்மை என்ற டைட்டிலுடன் படம் முடிவடைகிறது)
படம் முழுக்க நம்மை கவர்வது நிக்கலஸ் கேஜின் ஆர்ப்பாட்டமில்லாத,மென்மையான நடிப்பு.
இது முழுக்க நெகடிவான கதாபத்திரம்.ஆனால் அந்த கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தையும் படம் நம் முன் நிறுத்துகிறது.நிக்கலஸ் கேஜின் கண்முன் அவர் அளித்த ஆயுதங்களை வைத்து இனபடுகொலை நடக்கிறது.ஆனால் அது தன் தவறு இல்லை என நிக்கலஸ் கேஜ் நம்புகிறார்.அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியதால் ஆயுதம் வேண்டாம் என சொல்லும் வாடிக்கையாளரை நிக்கலஸ் கேஜ் திட்டுகிறார்."என்ன அமைதி ஒப்பந்தமா?யுத்தம் செய்யுங்கப்பா...நான் தான் ஆயுதம் சப்ளை செய்யறேன்னு சொல்றேனில்ல?"
இறுதியில் அவர் வாலன்டைனுக்கு தன் தரப்பு நியாயத்தை விரிவாக எடுத்துரைக்கிறார்.."உலகிலேயே மிக பெரிய ஆயுத விற்பனையாளர் அமெரிக்க ஜனாதிபதிதான்....உலகின் டாப் ஐந்து ஆயுத விற்பனையாளர்கள் அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இங்கிலாந்து,பிரான்ஸ்..இவை ஐந்தும் ஐநா சபையின் நிரந்தர உறுப்பினர்கள்.நீ என்னை பிடிக்க வருகிறாய்..நான் செய்வது கடத்தல் இல்லை.சேவை.மக்களுக்கு தம்மை பாதுகாத்துகொள்ள ஆயுதம் தேவை.அதை தான் நான் தருகிறேன்"
Posted by செல்வன் (noreply@blogger.com) on October 07, 2011 03:11 AM· permalink
நிலவொளி
குழலிசை
கடல்
மாற்றமில்லா
அதே ஆர்பாட்டம்
நிலவொளி
குழலிசை
நதி
அதே சீரான ஓட்டம்
நிலவொளி
குழலிசை
குளம்
கல்லெறிந்தாலும்
சிதைந்து தெளியும்
நிலவொளி
குழலிசை
நான்
சலனம்
சபலம்
கூச்சல்
குழப்பம்
காமம்
குரோதம்
வன்மம்
மிருகம்
பொறாமை
தொலைதல்
தேடல்
ஆணவம்
விடியல்
சூரியன்
குழலிசை
நான்
நடிகன்
சாரசரி
மனிதன்
சுய நலம்
கடமை
தியானத்தில்
தொலைய முடிவதில்லை
முடிவற்ற இந்த
சிக்கல்களில்..
இருப்பினும்
பிடித்து தான் இருக்கிறது
மனிதனாய் வாழ...
Posted by தமிழரசி (thamilarasi2008@gmail.com) on October 07, 2011 02:04 AM· permalink
ரெட் ஃப்ரேம்ஸ் புகைப்படப் போட்டி
பிறந்த மண்ணின் பெருமையை
வசிக்கும் ஊரின் அருமையை
பிடித்த ஊரின் அழகை
உலகுக்குச் சட்டமிட்டுக் காட்டுங்கள்!
மூன்று இலட்சம் பெறுமானமுள்ள பரிசுகளை அள்ளுங்கள்!

மேலும் விவரங்களுக்கு PiT-ல் நான் பதிந்த இடுகை இங்கே: ‘என் நகரின் காட்சிகள்’-ரெட் ஃப்ரேம்ஸ் புகைப்படப் போட்டி 2011
அதீதம் ஃபோட்டோ கார்னர்

புதுப் பொலிவுடன் மீண்டும் மலர்ந்த அதீதம் இணைய இதழின் இரண்டாம் பதிப்பிலிருந்து (முதல் பதிப்பில் ‘எல்லாம் வல்ல..’) அதன் ரெடி ஸ்டெடி க்ளிக் கார்னர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. ‘ராமலக்ஷ்மி ராஜன் ஃபோட்டோ கார்னர்” என்றே அதை முகப்பில் நிறுத்தியிருக்கும் அதீதத்துக்கும் இங்கு என் நன்றி.
PiT Group Pool-வுடன் கைகோர்க்கிறது அதீதம்

ஃப்ளிக்கர் தளம் குறித்தும் அதில் பதியும் படங்களை PiT Pool-லில் பகிர்வது குறித்தும் “போகுமிடம் வெகுதூரமில்லை” எனும் என் இடுகையில் விரிவாகப் பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்த வாரப் படத் தேர்வு சில காரணங்களால் தொடராது போன சூழலில் மீண்டும் அதற்கு உயிர் கொடுக்கும் வண்ணமாக பிட் பூலில் பகிரப் படுபவற்றில் (இந்த வாரம்தான் என்றில்லாமல் நல்ல படங்கள் எவையும்) என் பார்வையில் சிறப்பானவை, கருத்தைக் கவர்ந்தவை தேர்வு செய்யப்பட்டு அதீதம் மாதமிருமுறை இணைய இதழில் இடம் பெறும். முன்னரே படத்தை எடுத்தவருக்குத் தகவல் தரப்பட்டு அனுமதியும் பெறப்படும். இதுவரை பிட் குளத்தில் நான் பிடித்தத் தங்க மீன்கள் எனது தலைப்பு மற்றும் வரிகளுடன் உங்கள் பார்வைக்கு:
அதீதம் ஜூலை II இதழில்..
1. குறையாத சந்தோஷம் (சரவணன் தண்டபாணி)

2. கரையாத கம்பீரம் (ஜேம்ஸ் வஸந்த்)

ஆகஸ்ட் I இதழில்..
அம்மா என்றால் அன்பு
1. (ஆன்டன் க்ரூஸ்)

2. (மல்லிகா-காவியம் ஃபோட்டோகிராபி)

ஆகஸ்ட் II சுதந்திர தினச் சிறப்பிதழில்..
கருவாயன் படங்கள்

தாய் மண்ணே வணக்கம்
***

நம்பிக்கை நட்சத்திரங்கள்
செப்டம்பர் I இதழில்..
சரவணன் தண்டபாணி படங்கள்

உழைப்பே வாழ்வில் ஒளியேற்றும்
***

இனிய தருணங்களின் அடையாளங்கள்
இடம் விட்டு அகன்ற பின்னும் அழியாமல்
***
செப்டம்பர் II இதழில்..
1. சுவடுகள்(ரமேஷ் கிருஷ்ணன்)
அழுந்தப் பதித்து நடப்போம்
கடந்த பின்
எழுந்து நின்று பேர் சொல்லுட்டும்
நாம் விட்டுச் செல்லும் சுவடுகள்!
***
2. கரங்கள் (ஜீவா சுப்ரமணியன்)

துடிப்பான
உதவிக் கரங்களா?
அல்லது
படிப்பைத் துறந்து
உழைக்க வந்த
பிஞ்சுக் கரங்களா?
***
அக்டோபர் I ஃபோட்டோ கார்னரில் இடம்பெற்றிருக்கும் படங்களைக் காண இங்கே செல்லுங்களேன்:)! இனி வரும் பதிப்புகளிலும் என் தேர்வைக் காண வருவீர்கள் என நம்புகிறேன்:)!
தினம் தினம் படங்கள் பகிரப்பட்டு ஒருவருக்கொருவர் ஆலோசனைகள் பரிமாறி உற்சாகமாக இயங்கி வருகிறது பிட் பூல். ஃப்ளிக்கரில் இருக்கும் நண்பர்கள் அதில் இணையக் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இணைந்து படங்களை சேர்க்காமல் இருப்பீர்களாயின் சேர்த்து வரக் கேட்கிறேன். அதீதம் இதழ் கூடிய விரைவில் பிட் பூல் படங்களைத் தனது பக்கத்தில் Slide Show-ஆகக் காட்ட இசைந்துள்ளது. இதன் மூலமாக பிட் குடும்பத்தினரின் படங்கள் மேலும் பல பார்வையாளர்களைப் பெறுகிறது.
‘எனக்கு ஃப்ளிக்கரில் கணக்கு இல்லை, ஆனால் அதீதத்துக்கு படம் அனுப்ப ஆவல்’ என்பவர்களும் கவலைப்பட வேண்டாம். உங்கள் படங்களை articlesatheetham@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இதே முகவரிக்கு உங்கள் கவிதை, கட்டுரை, கதைகள் மற்றும் புத்தக விமர்சனங்களை அனுப்புமாறும் அதீதம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது. படைப்புகள் இதுவரை வேறெங்கும் வெளிவராதவையாக இருக்க வேண்டுமென்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதீதத்தில் வெளியான பிறகு உங்கள் தளங்களில் பதிந்து கொள்ளலாம்.
புகைப்படப் பிரியன்
ஃப்ளிக்கர் தளத்தின் ஒரு குறைபாடு 1GB-க்கு மேலே படங்கள் பகிர பணம் செலுத்தி நமது கணக்கை pro-account-ஆக upgrade செய்து கொள்ள வேண்டும். இதை விரும்பாத சிலர் 1 GB ஆனதும் நிறுத்தியோ அல்லது எப்போதேனும் மட்டுமோ படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். கேமராக்களில் டிஜிட்டல் புரட்சி வரவும் அதன் பயன்பாடுகள் மேலும் மேலும் சுலபமாக இன்று கேமரா இல்லாத நபரே இல்லை எனலாம். ஆர்வமாக படமாக்கி வருபவர் ஃப்ளிக்கர் தவிர்த்து படங்களைப் பகிர ஒரு தளம் இருக்கிறதா எனத் தேடக் கூடும். நீங்கள் அப்படியானவரா? உங்களுக்கு முகநூலில்(Face Book) கணக்கு உள்ளதா? கவலையை விடுங்கள். புகைப்படப் பிரியனில் இணைய விண்ணப்பம் அனுப்புங்கள்.
புகைப்படக் கலைஞர் மெர்வின் ஆன்டோவினால் தமிழர்களுக்கெனப் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப் பட்டுள்ள Closed Group இது (இதன் admin பொறுப்பிலும் உள்ளேன்). இதில் படங்களைப் பகிர கண்டிப்பாக தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும். தமிழிலே உங்கள் கருத்துப் பரிமாற்றம் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி. தமிழ் எழுத்துரு இல்லையென்றாலும் ஆங்கிலத்தில் [தங்கலீஷாமே அதற்குப் பேரு:)] தட்டச்சுவதும் வரவேற்கப் படுகிறது. தினம் ஒரு நபருக்கு ஒரு படமே பகிர அனுமதி. குறிப்பாகப் பகிரும் படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே புரியப் பட வேண்டிய விதி. பிட் குழுவும் சரி, புகைப்படப் பிரியனும் சரி தமிழ் நண்பர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவது அவரவர் மனங்களிலே.
இங்கும், கிடைக்கிற ஊக்கத்தில் மகிழ்ந்து ஆரம்பித்த சிலநாட்களிலேயே ஐநூறுக்கும் மேலானோர் இணைந்து உற்சாகமாகப் படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
முகநூலில் PiT

இன்றைய இணைய உலகில் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்ட முகநூலில், தன் சேவையை நண்பர்களிடம் விரைந்து சேர்க்க PiT Page உருவாக்கப்பட்டுள்ளது. அதை Like செய்து உறுப்பினராகிக் கொள்ளுங்கள். PiT-ல் வெளியாகும் அனைத்துப் பதிவுகளும் இங்கே உடனுக்குடன் அப்டேட் ஆகும்.
புகைப்படக் கலை பற்றி அநேகமாக A to Z விரிவாக அலசப்பட்டு விட்டன PiT-ல். இப்போதைய வாசகர்களுக்காக முக்கியமான, அத்தியாவசியமான பதிவுகள் தேடி எடுக்கப்பட்டு இந்தப் பக்கத்தில் பகிரப் பட்டு வருகிறது PiT குழும உறுப்பினரால். இதை நன்கு பயன்படுத்திப் பலனடையக் கேட்டுக் கொள்கிறேன்.
அக்டோபர் 2011 PiT போட்டி:
அறிவிப்பைப் பார்த்து விட்டீர்கள்தானே? மறந்து போனவற்றை நினைவு படுத்தி, காணமல் போனவற்றைக் கண்முன் கொண்டுவர ஆயத்தமாகி விட்டீர்கள்தானே? இம்மாதப் போட்டிக்கான எனது மாதிரிப் படங்களுடன் விரைவில் வருகிறேன்:)!
Posted by ராமலக்ஷ்மி (noreply@blogger.com) on October 07, 2011 01:18 AM· permalink
-வாசிப்பு-
கொரிய எழுத்தாளரான ஜி முன்-யோல் (Yi Mun-Yol) எழுதிய 'ஓர் அநாமதேயத் தீவு' (An Anonymous Island) சிறுகதை அண்மையில் நியூயோர்க்கர் இதழில் வெளிவந்திருக்கின்றது. இதுவே நியூயோர்க்கரில் வெளிவந்த முதலாவது கொரியக் கதை என்கிறார்கள். ஜி முன்-யோல் 1948ம் ஆண்டு சியோலில் பிறந்தவர்.
'ஓர் அநாமதேயத் தீவு' கதை, ஆணொருவர் தொலைக்காட்சியைப் பார்த்து இன்றைய இளைஞர்கள் எல்லாம்
Posted by இளங்கோ-டிசே (dj_tamilan25@yahoo.ca) on October 06, 2011 06:29 PM· permalink
அது 80 களின் நடுப்பகுதி. சிறுபராயம். காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிசேகம். ஏராளமான தவில், நாதஸ்வர கலைஞர்கள் வரிசையாக இருந்து கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவர் மட்டும் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நெடிய மெல்லிய தோற்றம். புன்னகை தவழும் வதனம். தலையிலே குடுமி. காதிலே கடுக்கன். நாதஸ்வரம் முழுவதும் தங்கப்பதக்கங்கள். முதன் முதலாக அவரை
Posted by கதியால் (kidukuveli@gmail.com) on October 06, 2011 05:35 PM· permalink
வாழ்த்தலாம் வாங்க-பிறந்த நாள் வாழ்த்து-திரு.டவுசர்பாண்டி என்கின்ற திரு. ஆனந்த்.
பெயர்- டவுசர் பாண்டி என்று அழைக்கப்படும் திரு. ஆனந்த்.
தொழிலிடம்- காஞ்சிபுரம் மாவட்டம்.
இருப்பிடம்- காஞசிபுரம் மாவட்டம் - தமிழ் நாடு
பதிவின் பெயர்-தொழில்நுட்ப பதிவின் மூலம் உங்கள் அனைவருக்கும் அறிமுகமான அதே கண்கள்.
இன்று 07-10-2011 பிறந்த நாள் கொண்டாடும் டவுசர் பாண்டிஎன்று அழைக்கப்படும்திரு. ஆனந்த் அவர்கள் வாழ்க்கையில்எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்கஎன பதிவர்கள் சார்பாக வாழ்த்தலாம் வாங்க......
பதிவர்கள் சார்பாக வாழ்த்தும்- வாழ்க வளமுடன். வேலன்.
Posted by வாழ்த்தலாம் வாங்க (vazthalamvanga@gmail.com) on October 06, 2011 05:32 PM· permalink
யார் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என நமக்கு எப்படி தெரியும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் ஒன்றிலிருந்து ஐம்பத்திரண்டுக்குள் நாம் எந்த எண்ணை நினைத்துக்கொண்டு இருந்தாலும் இது கண்டுபிடித்து கொடுத்துவிடும். 300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வரும் விண்டோவில் நீங்கள் நினைத்த எண் வருகின்றதா


Posted by வேலன். (noreply@blogger.com) on October 06, 2011 05:24 PM· permalink
அபூர்வமாக கிளிக்கப்பட்ட இந்த படம் ஏதோ ஆழமாக பலவற்றையும் சொல்லும். ஸ்டீவ் தனது இறுதி மேடை பேச்சான WWDC 2011 Keynote மேடை பேச்சை முடித்து கீழே இறங்கியதும் போய் முதல் வேலையாக தனது மனைவின் தோளின் மேல் தலையை சாய்க்கின்றார். பொதுவாகவே ஆப்பிளை பொறுத்தவரை இது போன்ற மீட்டிங்குகளில் ஸ்டீவ்வின் வருகை மிக மிக முக்கியமானது.அவர் இல்லாவிட்டால் தலை இல்லாது தவிக்கும் உடம்பு போலாகிவிடும். கடந்த ஐபோன் 4S அறிமுகவிழாவும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. மனிதர் அந்த தனது கடைசி கீநோட் பேச்சை முடித்து இறங்கியதும் ஏற்கனவே கேன்சரினால் இளைத்துப்போன உடம்பின் களைப்பினால் தலையை சாய்த்தாரா அல்லது இதுதான் தனது கடைசி மேடை பேச்சு என்று தனது உள்ளுணர்வு சொன்னதால் அப்படி செய்தாரா யாரும் அறியோம்.அது ஒரு அற்புதமான தருணம்.அவர் மனதில் எண்ணங்கள் உருகிப்போயிருந்த நேரம். எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப படைப்புகளை உருவாக்கிய அவருக்கு தன் எதிர்காலமும் தெரியாமலா போயிருக்கும். எத்தனையோ பேரின் விருப்பங்களை படைப்புகளாக்கி காட்டிய பல அடிச்சுவடுகளை விட்டுச்சென்ற அந்த நல்மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
தேங்யூ ஸ்டீவ்!!




Posted by PKP (noreply@blogger.com) on October 06, 2011 04:13 PM· permalink

உடலோடு உயிர்
வருவது காதலா !?
உயிரோடு உடன் வருது காதலா..!
உடல் விற்றேன் மனந்தவளிடம்
இதயம் விற்றேன் என்னை உணர்ந்தளிடம்.....!
உன் அறிமுகத்தின்
முதல் நாள் மீண்டும் ஒரு குழந்தையாய்
இந்த உலகம் மறக்க செய்தாய்....
உந்தன் சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
இன்னும் சிறிது நீளாத
இந்த கணங்கள் என்ற ஏக்கம்
இப்போதும் இதயத்தில் பசுமையாய் !
நீண்ட உரையாடல்களுக்கு இடையினில்
உன் வார்த்தைகள் இல்லாத மவுனத்தில்
பல முறை
அர்த்தம் தேடி தொலைந்து போயிருக்கிறேன் .!
உன் மடி சாய்ந்து உறங்கிப்போன
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
என் வாழ்வில் நான் பெற்ற
மிகப்பெரிய பொக்கிஷம் என்றாகிப்போனது . !
என் தனிமைகளின் ஒவ்வொரு
இரவுகளும் உன் ஞாபகங்களின்
எல்லைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கிறது . !
சிறு எறும்பு கடித்து
துடித்துப் போகும் குழந்தை ஒன்றின்
அழுகை சத்தமும்
உன் நினைவுகள் சுமந்து
ரணப்படும் என் இதய சத்தமும்
இப்பொழுதெல்லாம் ஒன்றாகிபோகிறது .!
உன்னுடன் உரையாடி
இந்த உலகம் மறந்த நிமிடங்கள் .
இப்பொழுதெல்லாம் உன் நினைவுகள் சுமந்து
இறந்துபோகத் துடிக்கிறது .!
காதல் செய்வதும்
பிரிந்து அழுவதும்
வாடிக்கையாகிப் போன இந்த உலகத்தில்
நமது கண்ணீரும் இன்னும் சில நாட்களே !.....
-பனித்துளி சங்கர்.
Posted by ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! (shankarp071@gmail.com) on October 06, 2011 01:40 PM· permalink
இருண்டு
திரண்ட
நீரிழைப்பொதி
அவிழ்ந்து சிதறியது.
நொடியில்
முளைத்து
நடை பயில்கின்றன
வண்ணவண்ணக்
காளான்கள்!
Posted by சத்ரியன் (ramheartkannan@gmail.com) on October 06, 2011 12:16 PM· permalink
நண்பர்களே நம்முள் இன்னொரு கை போல இருக்கும் ஐபேடு ப்ளேயரை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் மறைந்தார். இவர் மறைந்தாலும் இவர் பெயரை இவர் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை உலகம் இவர் பெயரை உச்சரிக்கும். இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
Steve Jobs 1955 - 2011
Design is not just what it looks like and feels like. Design is how it works. Steve Jobs
நன்றி
Posted by Vadivelan R (giblogs@gmail.com) on October 06, 2011 11:03 AM· permalink
சில பாடல்கள் கேட்க அருமையாக இருக்கும். நாம் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களும் இருக்கும்.. சில பாடல்களில் இடையில் வரும் இசை நன்றாக இருக்கும். அதைப்போல சில பாடல்களில் இடையில் வரும் பாடல்வரிகள் அருமையாக இருக்கும். நாம் நமது தேவைக்கேற்ப பாடல்வரிகளை - இசையை -நமது செல்போனில் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு வைத்துக்கொள்ள நமக்கு ரிங்டோன் மேக்கர் தேவைப்படும். 2 எம.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன


Posted by வேலன். (noreply@blogger.com) on October 06, 2011 08:41 AM· permalink
கிரிக்கெட் விளையாட்டினை கடந்தவாரம் பார்த்தோம். இந்த வாரம் கால்பந்து விளையாட்டினை பார்க்கலாம்.700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுடைய மூவ்மெண்ட்களை இதில் உள்ள அம்பு குறியின் மூலம் நிர்ணயம் செய்துவிடலாம். மேலும் விரைநது செல்ல ஆங்கில X எழுத்தினை அழுத்தவேண்டும். நாம் இருக்கும் இடத்தை வட்டம் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
சிறிய


Posted by வேலன். (noreply@blogger.com) on October 06, 2011 08:40 AM· permalink